பக்கங்கள்

திங்கள், 10 அக்டோபர், 2016

இதோ, இனமானப் பேராசிரியர் பொதிகைத் தென்றல்!



நம் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் சென்னை பொதிகைத் தொலைக்காட்சியில் 15.1.2009 அன்று வழங்கிய ஓர் நேர் காணலை, அவரை அப்போது நேர் காணலில் வினா தொடுத்து உரையாடியதை தமிழாலயம் முனை வர் மு.பி.பாலசுப்பிரமணியன் அவர் கள்மூலம், சென்னை பூங்கொடி பதிப் பகத்தார் ஒரு சிறு நூலாகக் கொண்டு வந்துள்ளனர்.
அதை பேராசிரியர் முனைவர் மு.பி.பா. அவர்கள் என்னிடம் நேரில் தந்தார். படித்தேன். மகிழ்ந்தேன்.

தமிழ்நாட்டில் நிகழ்ந்த பண் பாட்டுப் படையெடுப்பைப்பற்றி ஆற் றொழுக்காக, குற்றாலம் அருவியில் கொட்டும் நீர் வீழ்ச்சியைப் போல, பேராசிரியர் விடையளித்து,மறைக் கப்பட்ட அல்லது பலரால் மறக்கப் பட்ட செய்திகளையெல்லாம்மிகச் சுருக்கமாக அதேநேரத்தில் உள்ளத் தில் பதியும் வண்ணம் கூறிய அரிய செய்திகள் அந்நூலில் பதிக் கப்பட்டுள்ளன.
ஒரு சிறுகுளிகை (கேப்ஸ்யூல்)யில் எப்படி உயிர் காக்கும் மருந்துகள் அடைக்கப்பட்டு, அதனை உள்ளே எடுத்துக்கொண்ட பிறகு, நோயிலிருந்து விடுதலை பெறும் சக்தியை எப்படித் தருகிறதோ, அதேபோன்று, இந்நூல் பல்வேறு அரிய தகவல்களை - ஆழமான உண்மைகளை வெளியே கொண்டு வருகிறது!

நவில்தொறும் நூல்நயம் போலும்                 பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு (குறள் 783)

பொதிகைத் தென்றல் வீசுவது போல அருமையான படிப்பினைகள் நம் உள்ளங்களுக்குள் நுழைந்து படிக்கும் எவரையும், தனதுஅறியா மையிலிருந்து வெளியே வர,  உலுக்கி உணர்த்தும் நூல் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களது இவ்வர லாற்று உண்மைகள்!

அவர் ஓர் ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் அல்லவா?

அதனால் சற்றும் பதற்றமின்றி, பதில்கள் அவர்தம் மனக்குதிரிலிருந்து கொட்டுகிறது! 32 பக்கங்கள்.  சிறு நூல் பெரிய கருத்துகள் - படித்து கற்கவேண்டிய பாடங்கள் அதில் ஏராளம்!
‘அய்யமிட்டு உண்’ என்பதைப் பிச்சை கொடுத்துவிட்டுப் பிறகு நீ சாப்பிடு என்றே வழமையான பொருள் கொள்ளுகின்றனர்!

ஆனால், நாமோ, அய்யம் - சந் தேகம் இருந்தால் அதை அகற்றிக் கொள்ளாமல், அக்கருத்தை உள் வாங்கிச் செரிமானம் செய்துகொள்ள முயற்சிக்காதே என்று பகுத்தறிவுவழி யிலேகூட பொருள் கூறலாம் அல்லவா?

அதற்கு ஒரு எடுத்துக்காட்டு இதோ:

மு.பி.பா.: ‘‘திராவிட இயக்கத்தி னுடைய அழுத்தமான பாதிப்பு (வீஸீயீறீuமீஸீநீமீ)/ பங்களிப்பு. இந்தநூற் றாண்டில் தமிழகத்தில் மிகஅதிக மாக இருக்கிறது. திராவிட இயக்கத் தினுடைய அந்தத் தாக்கம் வந்த காரணத்தினால்தான், தமிழ் இயக்கத்தில் தொய்வு ஏற்பட்டுவிட்டதாகச் சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். உண் மையல்லவெனினும், அப்படிப் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், திராவிட இயக்கம், தமிழ் இயக்கத்திற்கு எதிரானது அல்ல என்பதால்தான். பாவேந்தர் பாரதிதாசனே ‘தமிழியக்கம்‘ என்ற நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். சேலம் மாநாட்டிலே நீதிக்கட்சியைத் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்திட, அறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனால், தமிழ் - தமிழர் என்னும் உணர்வு ஒதுக் கப்படுவதாகக் கருதிய முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள், திராவிடர் கழகம் என்று மாற்றக்கூடாது. அது தமிழர் கழகம் என்று இருக்கவேண்டும் என்று சொன்னதற்கு எது அடிப்படைக் காரணம்? திராவிடர் இயக்கம் என்பது, தமிழ் இயக்கத்திற்கு எதிரானது என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முனைகிறார்களே, அதைப்பற்றி உங்களுடைய கருத்து யாது?

பேராசிரியர்: சிலருக்கு ஒரு குழப்பமான சிந்தனை, தமிழ்  - திராவிடம் என்று சொல்கிறபோது ஏற்படுகிறது. தமிழேதான் திராவிடம். திராவிடம்தான் தமிழ். தமிழினுடைய வழிமொழிகளாகத் தெலுங்கு, மலை யாளம், கன்னடம் ஆகிய மொழிகள் அமைகின்றன. ஒருவேளை அவை நேரடியாகத் தமிழின் வழிமொழிகள் அல்ல எனினும், அவற்றின் தாய்மொழி தமிழ் என்று ஒப்புக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை என்றாலும், சகோதர மொழி என்று ஏற்றுக்கொள்வார்கள். தென்னக மொழிகள் ஒருகுடும் பம் என்பதும், அவை உடன் பிறப்பு மொழிகள் என்பதும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. இந்த மொழிகள் வடமொழிக்கு எந்த வகையிலும் கடன்பட்டவை அல்ல. அவற்றின் தனித்தன்மையைச் சுட்டும் பெயர்ச்சொல்தான் திராவிடம். தமிழ் என்று சொல்கிறபோது, மொழியிலே ஆரியக் கலாச்சாரக் கருத்துகளும் காலப் போக்கில் கலந்து இருக்கிற காரணத்தால், தமிழர்கள் பலர் தமிழ் என்று சொல்லி ஆரியக் கலாச்சார எண்ணத்தையே பின்பற்றுகின்றனர். திராவிடர் என்று சொல்வதனால், திட்டவட்டமான தெளிவும்,  துணிவும் ஏற்படுகிறது.
எனவே, தமிழர்களின் தனித்தன்மைக்கு வலுவூட்டுவதற்கு, தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்பதற்கு, தமிழினம் ஒரு தனி இனம் என்னும் வரலாற்று உண்மையைச் சொல்வதற்கு, பழந்தமிழர் நாகரிகச் சின்னமாக ஆதிச்சநல்லூர் மட்டுமன்றி, சிந்துவெளி நாகரிகமான மொகஞ்சதாரோ, அரப்பாவை இணைப்பதற்கு, தொன்னாளில் தமிழர்கள் இந்தியா முழுவதும் பரவி இருந்து ஆட்சி நடத்தியவர்கள் என்னும் உண்மையை நாட்டுவதற்கு, தமிழர்களின் நாகரிகம் திராவிட நாகரிகம் என்ற பெயரால் மெசபடோமியா வரை பரவியுள்ள அந்த நாகரிகத்திற்கு உரியவர்கள் என்பதை எடுத்துக்காட்ட, ஏற்கப்பட்ட இனப்பெயரே திராவிடம் என்பது. உலகத்திற்கே திராவிடர்கள் வழிகாட் டுகிற ஓர் இனமாகத் திகழ்ந்தவர்கள்.

தமிழ்மொழி உலக மொழிகட் கெல்லாம் தாய்மொழி என்றுஎடுத் துச் சொல்ல - அதன்மூலம் தமிழுக் குப் பெருமை சேர்க்கத்தான் நாம் திராவிடம் என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறோம். அரசியல் கண் ணோட்டத்தில் பார்த்தால், தென்னாடு முழுவதும் திராவிடம் என்றுசொல் கிறபோது, தெலுங்கர்களோ, கன்ன டியர்களோ, மலையாளிகளோ அந்தக் கருத்தை ஏற்று உடன்பட்டு வரவில்லை என்றாலும், வரலாறு அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யும். வரலாற்று அடிப்படையில் திராவிடர்கள் என்று சொல்வதை எவரும் மறுக்க முடியாது.

நடைமுறையில் தமிழர்களுடைய தலைமையிலே உள்ள இயக்கத்தைப் பிற மாநிலத்தவரான தெலுங்கரோ, கன்னடியரோ, மலையாளியோஏற் காமல் இருக்கலாம். அது அவர்கள் விருப்பம். டாக்டர் டி.எம்.நாயரைப் போலவோ, சர்.பிட்டி தியாகரா யரைப் போலவோ, திராவிட இனப் பெயரை அவர்கள் ஏற்காமல் இருக் கலாம். ஆனால், அவர்களும்திரா விடர்களே. ஆரியத்தின் ஆதிக்கத்தை ஏற்காதவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்றுசொல்வதனால்,தமிழன்வலிமை பெறுகிறான். தமிழன் தனித் தன்மை யைக் காக்கத் திராவிட இன உணர்வு அவசியம் என்ற காரணத்தினாலேதான். ஆரியக் கலாச்சாரத்திலிருந்துவிடு படுவதற்காக, வருணாசிரம தரு மத்தை எதிர்ப்பதற்காகத் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், திராவிடம் என்ற அச்சம் முத்தமிழ்க் காவலருக்கு இருந்த காரணத்தால், அவர் இதிலே கலந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தனியாக விலகி நின்றார் என்று கூறுகிறார் இனமானப் பேராசிரியர்.
முன்பு, தந்தை பெரியார் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு எளிய உவமையுடன் இதற்குப் பதில் கூறினார்.

‘‘குடிக்க தண்ணீரைக் கொண்டு வந்து குழாய்மூலம் தரும் பணியைச் செய்யும் ஒருவர், அதனை அத் தெருவில் உள்ள அத்துணை பேரும் சம்மதித்தால்தான் செய்யவேண்டும் என்று கூறுவது சரியானதா? சரியா னதை, சரித்திரத்தைக் கூறும்போது சிலர் ஏற்றால் என்ன? ஏற்காவிட்டால் என்ன? சிலர் ஏற்காததினால் வரலாறு மாறிவிடுமா?’’
இக்கருத்தையே பிரதிபலிக்கிறது பேராசிரியர் அவர்களின் பதில்.

குழப்பமில்லா கொள்கை விளக்கம்! இப்படி பல நல்ல வினாக்களைத் தொடுத்து, விளக்கவுரை பாடங்களைக் கொணர்ந்த பேராசிரியர் மு.பி.பா. அவர்களுக்கும், பொதிகைக்கும், பூங் கொடி பதிப்பகத்தாருக்கும் தமிழ்கூறும் நல்லுலகத்தின் பாராட்டு!

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
-விடுதலை,15.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக