அறையின் வெப்பம் 68 டிகிரி பாரன்ஹீட், 18 டிகிரி செல்ஷியஸ் ஆக இருப்பது மிகவும் நல்லது.
நான்காவதாக,
படுக்கப் போகுமுன் மது வகை களையோ - காபி போன்ற பானங் களையோ குடிப்பதை அறவே நிறுத்தி விடல் மிகவும் அவசியம்.
அவைகளால் தூக்கம் வரும் சில வேளைகளில் என்றாலும்கூட, அதனால் எவ்வித நிரந்தரப் பயனும் கிடையாது. அந்தப் பழக்கம் வெகுவாக மூளையைப் பாதிக்கக் கூடும். அப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு நாளடைவில் அது ஒரு போதைப் பழக்கம் போல (Addiction) மாறும் அபாயமும் உண்டு.
சாதாரணமாக காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் உள்ள பலருக்கும் கூட, காலை மலங் கழிக்கும் முன் காபி குடித்தால், கழிப்பறைக் குச்சென்று மலம் கழிக்க முடியும் என்ற மனப் பழக்கம் அதனால் அமைந்துவிடக் கூடும்; அது விரும்பத்தக்கதா? அது இல்லாமலேயே அதாவது காபி குடிக்காமலேயே கூட கழிப்பறைக்குச் சென்று மலம் கழிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டால் நிச்சயம் வெற்றி பெறக்கூடும். இப்படி மது வகைகளை தூங்குவதற்கு முன் குடிப்பது, நாளடைவில் ஒரு போதைப் பழக்கமாக மாறுவது மட்டுமின்றி அவைகளில் உள்ள ரசாயனப் பொருள்கள் மூளையைத் தாக்கி ஒழுங்கான தூக்கத்திற்கும் இடையூறு செய்து, உடல் நலத் தைச் சீர்கேடடையச் செய்து விடுகின்றன!
எனவே கூடுமானவரை, மது, காபி முதலிய பானங்களை தூங்கப் போகுமுன் குடிப்பதைத்தவிர்த்து விடுங்கள். அதுவே நல்ல பழக்கம் அதற்குப் பதிலாக தூய நீரையோ, வெந் நீரையோகூட குடிக்கலாம்.
[சாப்பிட்டவுடனேயே படுக்கைக்குச் சென்று தூங்க ஆரம்பிப்பது அவ்வளவு விரும்பத்தக்கதல்ல - செரிமானக் கண்ணோட்டத்தில்! பலருக்கு நெஞ்செரிச்சல் (GERD) வருவதற்கு இதன் மூலம் வாய்ப்பு ஏற்படும். உணவுக் குழாய்களின் வழியே கீழே - உள்ளே சென்று செரிமானம் ஆக வேண் டிய உணவு - மேல் நோக்கி வந்து ஒருவித எரிச்சலை திடீரென்று உண்டாக்குவதுதான் "GERD" ஆகும். அதைத் தவிர்க்க குறைந்தபட்சம் அரை மணி, முக்கால் மணி நேரம் அமர்ந்து படியுங்கள் அல்லது செய்தி அறிதல் மற்ற ஏதாவது வேலையில் ஈடுபடலாம்.]
அய்ந்தாவதாக,
படுக்கையில் தூக்கம் வராதபோது விழித்துக் கொண்டு படுத்திருக்காதீர்கள்; மாறாக, அடுத்த அறைக்குச் சென்று உங்களுக்கு விருப்பமான புத்தகம் ஏதாவது ஒன்றைப் படிக்கத் துவங்கி விடுங்கள்; அந்த அறையின் வெளிச்சம்கூட மிக அதிகமான ஒளிவீச்சு இல்லாமல் படிப்பதற்குரிய அளவு தேவையான வெளிச்சம் உடையதாக இருப்பது மிகவும் விரும்பத் தக்கது; அந்தப்படி படித்துக் கொண்ட இருந்தால் ஒரு 15 மணித்துளிகள், அரை மணி நேரத்தில் மீண்டும் தூக்கம் உங்கள் கண்களைத் தழுவக் கூடும். அதை எதிர்த்துப் படிப்பதைத் தொடராமல், தூக்கத்திடம் சரண் அடைந்து விடுங்கள். அது ஆழ்ந்த தூக்க மாகவும்கூட பல நேரங்களில் அமையக்கூடும்; உடல் வலிவும் பொலிவும் பெற, மன அமைதி, புத்துணர்வு ஏற்பட இத்தகைய தூக்கம் மிகவும் நமக்குப் பயன்படும்.
உணவு, மருந்து, உடற்பயிற்சி (நடைப்பயிற்சி) என்ற பலவும் எப்படி நமது உடல் நலத்திற்கு உதவுபவைகளோ; அதே அளவுக்கு நேரத் தூக்கம் - ஒழுங்கு முறை தூக்கம் நம்மை வாழ வைப்ப தோடு, பிற்காலத்தில் மறதி நோய் தாக்குதலி லிருந்தும் நம்மைக் காப்பாற்றக் கூடும். மறவாதீர்!
- விடுதலை நாளேடு 14 11 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக