நமது முதுமைக் காலத்தில் இளமையை எப்படி மீண்டும் திருப்புவது என்பதற்கு ஒரு குறுக்கு வழி உண்டு.
என்ன திகைக்கிறீர்களா? உண்டு! உண்டு!!
நீண்ட காலம், பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு, அதன்பின் அவரவர்களுக்கு ‘இறக்கை‘ முளைத்து, வாழ்க்கை என்னும் வானத்தில் பல்வேறு திசைகளை நோக்கிச் சிறகடித்துப் பறந்து போனவர்களை, எதிர்பாராது முதுமையின் முத்திரைகளோடு சந்தித்து மகிழும் போது நமது இளமை பெரிதும் திரும்பும்.
ஆனால், மிகவும் நெருக்கமாக இள வயது முதற்கொண்டுப் பழகி, அன்பு பாசம் அறுபடாமல் நாளும் இறுகிடும் நிலையில் பழகுவோரின் நட்பு முதுமையில் அந்த இளமையை மீட்டுருவாக்கித் தருவது கண்கூடான அனுபவம்!
அது மிகவும் அபூர்வமே! எல்லோருக்கும் அந்த வாய்ப்புக் கிடைக்கும் என்று சொல்ல முடியாது; ஒரு சிலருக்கே கிட்டும்!
அந்த சிலரில் யானும் ஒருவன்! எதையும் எதிர்பாராது பழகும் கைமாறு கருதாத கடப் பாடுடைய நட்பு மூலம் மகிழ்ச்சியும், மனநிறைவும் இளமைக் காலமும் புதைப் பொருளைப் போலக் கிடைக்கும்; மகிழ்வர்.
அப்படிப்பட்ட குடும்ப நட்புறவுக்குரிய ஒருவர் எமது உடன்பிறவாத சகோதரரான டாக்டர் ஏ.ராஜசேகரன் அவர்கள் ஆவார்! மார்க் (Mark) - ஆய்வாளர் - இயக்குநர்.
பள்ளியில் படித்த காலம் முதல் இன்று வரை இணைபிரியா நட்புறவு - என்னுடன் மட்டுமல்ல; எமது மூன்று தலைமுறைகளுக்கும் நலம் விரும்புவோராக, குடும்பப் பாசத்துடன் பழகும் அரிய நல்வாய்ப்புப் பெற்றவர்கள் நாங்கள்.
உலக அளவில் பன்னாட்டுப் புகழ் பெற்று, இந்திய அளவில் பெருமை மிகு பல பதவிகளை Chairperson, National Board of Medical Examination போன்ற பதவி பொறுப்பில் அமர்ந்து பல்வேறு சாதனைகளைச் செய்து மருத்துவக் கல்வியில் ஓர் அமைதிப் புரட்சியை சாதித்தவர்.
சமூகநீதியில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்.
அதைவிட மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தின் வழிகாட்டியான காப்பாளராவார். இவரது MBBS படிப்பின் இறுதித் தேர்வின் போது அவரது தந்தை காலமான நிலையிலும், தேர்வு, குடும்பம், தாய், சகோதர, சகோதரிகளின் எதிர்காலம் பற்றி யெல்லாம் மிகுந்த அக்கறை எடுத்து அவர்களைக் கரையேற்றி, ஒவ்வொருவரும் சிறப்புடன் வாழ ஏணியாய், தோணியாய் வாழ்ந்தவர். அந்தக் குடும்பத்தின் ஆலமரம் இவர்தான். இதற் கெல்லாம் பெரிதும் ஒத்துழைப்புத் தந்தவர் அவரது வாழ்விணையர் திருமதி தில்லைநாயகி அவர்கள்.
ஒரு நல்ல குடும்பம், பெரிய பல்கலைக் கழகமாகியது; அதற்கு மூல காரண கர்த்தாக்கள் இருவரும்!
எங்கள் குடும்பத்திலும் சரி, யாருக்கு எந்த நோய்த் துன்பம் என்றாலும் அவர் உடனடியாக ஓடோடி வந்து உறுதுணையாக இருப்பார்!
எமது பணிகள் யாவிலும் உற்சாகமூட்டி, ஊக்கப்படுத்தத் தவறமாட்டார்!
நாங்கள் எங்கள் பிரச்சினைகளை மனம் திறந்து பேசி, ஆற்றுப்படுத்திக் கொள்கிறோம்.
இளமைக் கால நட்புகள் பலருக்கு இடையில் அறுந்துபோவதுண்டு; ஆனால் எங்கள் நட்புறவு, இரத்த உறவைவிட இறுக்கமானது. அப்படி வாழ்வில் கிடைப்பது அரிதிலும் அரிது. பெரிதிலும் பெரிது.
செல்வம் என்பது மாறா நட்பே!
அன்பு என்பது வற்றாத ஊற்றே!
பாசம் என்பது எப்போதும் ஓடும் ஜீவநதியே!
அப்படிப்பட்ட நண்பர், சகோதரர் - டாக்டர் ஏ.ராஜசேகரன் அவர்களுக்கு இன்று (17.11.2021) 86ஆம் ஆண்டு பிறந்த நாள்.
உளம்நிறைந்த வாழ்த்துகள்! உள்ளத்தின் அடித்தளத்தின் அடியிலிருந்து...
எமது கல்விப் பணிக்கும் அருந்துணை அவர்!
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் இன்றைய இணைவேந்தர் (Pro- Chancellor) அவர்!
பல்லாண்டு நல்ல உடல் நலத்துடனும், அறிவு வளத்துடனும், தொண்டுள்ளத்தோடும் வாழ்க! வாழ்க!! வளர்க!!!
JAMBO RESORT & CASINO - Jackson County - JTM Hub
பதிலளிநீக்குJAMBO RESORT & 문경 출장마사지 CASINO is located in 충청북도 출장샵 Jackson 평택 출장샵 County. View details, hours, map, hours and contact JAMBO RESORT 여수 출장샵 & CASINO in Jackson County, 하남 출장샵