திங்கள், 19 நவம்பர் 2012 ,விடுதலை
சிங்கப்பூரின் பிரபல ஆங்கில நாளேடான தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (The Straits Times) வாரத்தில் ஒவ் வொரு வியாழக்கிழமையும் உங்கள் உடலைக் கவனித்துக் கொள் ளுங்கள் (Mind Your Body) என்ற தலைப்பில் மிக அருமையான உடல் நல அறிவுரைகளை பிரபல மருத்துவ வல்லுநர்களிடமிருந்து கட்டுரைகளை வாங்கி வெளியிடுகிறார்கள்!
வாசகர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கக் கூடியவையாக அவை அமைகின்றன.
எப்போதும் மணிக்கணக்காக உட்கார்ந்து கொண்டே இருப்பது கூடாது. அது சர்க்கரை நோய்க்கும், இதய நோய்க்கும், ஏன் மரணத் திற்கும்கூட தள்ளிவிடும் அபாயத்தை உருவாக்குகிறது என்று ஓர் அருமை யான ஆய்வுக் கட்டுரை 15.11.2012 அன்றைய இதழில் வெளி வந்துள்ளது!
நம்மில் பலரும், பல மணி நேரம் நாற்காலிகளில் உட்கார்ந்தே பணி செய்கிறோம்.
இன்னும் பெண்கள், மற்றைய முதியோர் வீடுகளில் முதிய வயதில் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பே உட்கார்ந்து தொடர்ந்து டி.வி. பார்ப் பதும், அல்லது அமர்ந்து கொண்டே அசை போடுவதும், வீண் விவாதங் களில் ஈடுபடுவதாகப் பொழுதைக் கழிக்கிறோம்.
இன்னும் சிலர் சோம்பல் காரணமாக சாப்பிடுவது, தூங்குவது, தொலைக் காட்சி பார்ப்பது இவற்றிலேயே நேரத்தை செலவழிக்கின்றனர்!
சிங்கப்பூரில் எடுத்த ஒரு கணக்குப் படி 98.7 சதவிகி பிள்ளைகள் சுறு சுறுப்பின்றி (வாரக் கடைசி நாளில்) இருப்பதாகவும், வார நாள்களில் 90.2 சதவிகிதம் அப்படி இப்பிள்ளைகள் இருப்பதாகவும் ஒரு ஏட்டில் (Journal of Kinsology in 2008) எழுதியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
அவர்களது இதயத் துடிப்பு - வாரத் தின் 3 நாள்களில் 120 ஒரு நிமிடத்திற்கு எனவும், 10 முதல் 15 வயதுள்ள குழந்தைகள் 280 பேர்களைக் கொண்டு இப்படி ஒரு கணக்கெடுத்துள்ளனராம்!
உட்காருவதும், நிற்பதும் இந்த முறையில் அடக்கம். வகுப்பில் பாடங்கள் படிக்கும்போது, எந்த செயலும் இல்லாததாலும், வெறும் ஹோம் ஒர்க் செய்வதாலும், கம்ப்யூட்டர் கேம்ஸ் என்ற விளையாட்டுகளுக்கு மணிக்கணக்கில் உட்கார்ந்தும் உள்ள நேரங்களை வைத் துத்தான் இந்த ஆய்வு நடத்தப்பட் டுள்ளன.
தேசிய கல்விக் கழகம் (National Institute of Education (NIE) பேராசிரியர், குழந்தைகளுக்கான Exercise Phisiology பேராசிரியர் ஆய்வு செய் துள்ளார்.
இந்த இளம் பிள்ளைகளுக்கு சர்க் கரை வியாதி வரும் அபாயம் 112 சதவிகிதம் - இதய நோய் ஆபத்துக் கான அபாயம் 147 சதவிகிதம் 49 சதவிகிதம் மரண அபாயமும் இணைந்து கொள்கிறதாம்!
எனவே, சில பேராசிரியர்கள் மாணவ இளைஞர்களுக்கு (இருபாலரும் சேர்ந் ததே இது) 150 நிமிடங்கள் சுமாரான உடற்பயிற்சிகளை ஒவ்வொரு வாரமும் தர வேண்டும் என்று டாக்டர் யான் ஹீஃபன் (Dr. Yang Yifan) கூறுகிறார். மேற்காட்டிய அமைப்பில் இவர் உடற் பயிற்சி, மற்றும் விளையாட்டு விஞ்ஞானக் கல்விக் குழுவின் உதவிப் பேராசிரியர் ஆவார்!
எனவே பெரியவர்களும் சரி, இளை ஞர்கள், மாணவர்களும் சரி - வெறுமனே மணிக்கணக்கில் உட்கார்ந்தே இருக்கும் படியாகச் செய்யாமல் ஓரளவு உடற்பயிற்சிகள் அல்லது நடந்து, நடந்து பல விட்டுப் போன பணிகளைச் செய்வது, முதல் தொடர்ந்து ஏதாவது செய்து கொண்டே இருப்பது அவசியம்!
நம் உடல் என்பது 640 தசைகள் (Muscles) 206 எலும்புகளைக் கொண்டது. இவைகளுக்கு அசைவுகள் இருப்பதும் அவசியம்.
நிற்கும்போதும், நடக்கும் போதும் நமது தசைகள் போதிய சக்தியைத் தருகின்ற வகை யில் அதற்குரிய தேவையான சில வற்றை அளிக்கிறது. உட்கார்ந்துள்ள போது அது குறைந்துவிடுகிறது என்கிற டாக்டர் ஸ்லோகன் என்ற நிபுணர் அலுவலகங்களில் உள்ளவர் களும்கூட ஒரே அடியாக அமராமல் சிறிது நேரம் எழுந்து நடமாடலாமே! (நம் நாட்டு அரசு அலுவலர்களில் பலர் இதில் தீர்க்க தரிசிகள் போலும்; ஏனெனில் பெரும்பாலான நேரங்கள் அவர்கள் இருக்கைகளில் இருக்காமல் நடந்து கொண்டே தானே இருக் கிறார்கள்! இந்த சங்கதி - ஆய்வை முன்னாலேயே அறிந்தவர்கள் போலும்) இது யாரையும் குற்றம் சுமத்த அல்ல.
அதுவும் நன்மைக்கே! எனவே அலுவலகங்களில் அமர்ந்து பணியாற் றுவோர்கூட உடல் பயிற்சி அவசியம்! அவசியம்!!
உடற்பயிற்சி செய்தவர்களுக்கும் கூட இந்த நீண்ட நேரம் உட்கார்ந் திருப்பது ஆபத்தை விளைவிக்கக் கூடியதே!
- கி.வீரமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக