அமெரிக்காவின் மூளை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் பலரது ஆராய்ச்சியின் விளைவாக - எவ்வகை உணவு உண்டால், மூளைத் திறன் சிறப்பாகச் செயல்படும், நினைவாற்றல் பழுதுபடாமல் தடுக்கப்படும், ஆற்றலும் சிறப்பாக அமையும் என்பதை (Cognitive abilities) அடிப்படையாகக் கொண்டு செய்யப் பட்ட ஆராய்ச்சியின் காரணமாக -பின்வரும் 7 வகை உணவுகளை அவர்கள் கண்டறிந்து வெளி உலகத்திற்குத் தெரிவித்துள்ளனர்.
(1) இளநீர் : தேங்காய் மூலம் கிடைக்கும் இவ்விளநீர் - பொட் டாஷியம் ஒரு மினரல். மூளைக்குத் தரும் ஆற்றல் இதனிடத்தில் உண்டு. மூளையின் நரம்பு செல்கள் மிகவும் சுறுசுறுப்புடன் சரியான வேகத்தில் இயங்கிட இது தூண்டுகிறது. அருமையான தூய்மையான உணவு இது!
நமது உடலில் பொட்டாஷியம் அளவு குறைந்தால் மூளையின் செயல்திறன் அவ்வளவு விரைந்து செயல்படாது சில நேரங்களில் மனக் குழப்பத்தை உருவாக்கவும் கூடும்.
நீங்கள் அதிகமான அளவு உப்பைத் தின்னும் நிலையிருப்பின், பொட்டாஷியத்தின் தேவை மிகவும் அவசியம் என்கின்றன மருத்துவத் தகவல்கள்.
நடுத்தர அளவுள்ள வாழைப்பழத் தில் உள்ள பொட்டாஷியம் அளவு சுமார் 450 மில்லி கிராம் ஆகும். 8 அவுன்ஸ் இளநீரில் உள்ள பொட்டா ஷியம் அளவு 250 மில்லி கிராம் ஆகும்!
குளுகோசாக (சர்க்கரை) மாறிவிடும் தன்மை இதற்கு அதிகம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். (டையாபெட்டிக் - சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவரிடம் கேட்டே இளநீர் கூட அருந்தலாம். சர்க்கரை வேகமாக மூளைக்குள் பாய்வதை விட படிப்படியாக (மெதுவாக) மூளைக்குச் செல்லும்போது அதன் பயன் நீடித்தது - சிறப்பானதும் கூட. அவ்வகையில் வாழைப்பழத்தை விட, இளநீரே மிகவும் வரவேற்கத்தக்கதாகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்!
எனவே ஒவ்வொரு நாளும் 1 குவளை இளநீர் குடியுங்கள். இனிப்பு கூட லேசாகத்தான் இருக்கும். கலோரிகளும் கூட குறைவான அளவே இருக்கும் அதில். சிலர் பாலில் கலந்து சாப்பிடு கிறார்கள். சிலர் காலைச் சிற்றுண்டியில் உண்ணும் தானியங்களோடு இள நீரையும் சேர்த்து சாப்பிடுகின்ற வழக்கம் உடையவர்களாக உள்ளனர்.
(2) ப்ளூபெர்ரீஸ் - (Blueberries):: இந்தப் ப்ளூபெர்ரீஸ் உள்ள மிக அதிகமான நல்ல சத்துகள் (Super rich) பற்றி பலரும் அறியவில்லை.
பிராணவாயுவை மிகவும் ஈர்த்து உடலுக்குள் செலுத்தும் அற்புதமான (உணவு) இது!
ஒருநாள் உணவில் 2400 (ORAC) என அளவு தேவை என்றால் ப்ளூ பெர்ரீஸ் சுமார் 670 செர்ரீஸ், 483 பிங் (Pink) கலர் திராட்சையின் சத்து இதில் உண்டாம்!
அமெரிக்காவின் பிரபல பல்கலைக் கழகங்களில் ஒன்றான டஃப்ட்ஸ் பல்கலைக் கழகத்தில் (Tufts University - Boston) பிராணிகளுக்கு ப்ளூபெர்ரீஸ் உணவுடன் சேர்த்துக் கொடுத்துப் பார்த்து ஆராய்ச்சி செய்தனர். மூளை யின் Hippocampus என்ற பகுதியின் செல்கள் மிகவும் அதிகமாக வளரவும், ஞாபக சக்தி வளருவதற்கும் இது மிகவும் உதவியுள்ளது என்று கண்டறிந்துள் ளனர்.
எனவே ஒவ்வொருநாளும் அரை குவளை ப்ளூபெர்ரீஸ் எடுத்துக் கொள்ளுதல் நல்லது! ப்ளூபெர்ரீஸ் கிடைக்கவில்லையானால், ஸ்டாபெர்ரீஸ் அல்லது அக்காய் பெர்ரீஸ் (A purple slightly tart berries) கன்கார்ட் கிரேப் ஜூஸ் (Concord Grape Juice) எடுப்பது மிகவும் பலன் பெறும்.
மூளையின் செயலை ஊக்கப்படுத்த சில மருந்து மாத்திரைகளை விட, இந்த கன்கார்ட் கிரேப் ஜூஸ் (Concord Grape Juice) அருந்தியவர்கள் (76 வயதுள்ள 21 பேர்) - இவர்களில் பலர் சற்று லேசான மூளை செயல்பாடு குறைந்தவர்கள் - இவர்களுக்கு மிகவும் பலன் தந்துள்ளது என்பதை சின்சினாட்டி பல்கலைக் கழக ஆராய்ச்சிகள் தங்களது பரிசோதனை (மேலே சுட்டியது போல) மூலம் கண்டறிந்துள்ளனர். 16 வாரங்களுக்குப் பின் இந்த கன்கார்ட் கிரேப் ஜூஸ் மூலம் பயன் அடைந்தது குறிப்பிடத்தக்கதாகும். MRI பரிசோதனை யிலும் இவர்கள் சுறுசுறுப்புடன் இயங்குகிறார்கள். மூளைக்கு ரத்த ஓட்டம் மிகவும் அதிகரித்தது இதன் மூலம்தான் என்று கண்டறிந்துள்ளனர்!
(3) சார்டின்ஸ் மீன்கள் -(Sardines):
ஒமேகா -3 இப்போது உலகம் முழுவதும் பரவலாக - இதயப் பாதுகாப்புக்காக பரிந்துரைக்கப்பட்டு, பலராலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது அல்லவா? அந்த ஒமேகா -3 இந்த சால்மன் மீனில் அதிகம் உள்ளது. அதன் திரவங்கள் (Fatty acids) கொழுப்புகள், இரண்டும் ஏராளமான ஒமேகா - 3 தந்து, இதயத்தின் முக்கிய ரத்தக்குழாய்களை (Arteries) பாதுகாக்க உதவுகிறது.
இது அளவில் சிறியதாக இருப்ப தால், இந்த மீனின் திரவத்தில் உள்ள பாதரசம் (Mercury) அளவும், விஷப் பொருள்களும் (Toxins) மிகவும் குறை வாக இருப்பது இதன் தனிச் சிறப்பாகும்.
நம் மூளையைச் சுற்றியுள்ள மெல்லிய தசை சுவர்கள் (Membrances) குறிப்பு களை சரிவர வளருவதற்கு இந்த ஒமேகா-3 மிகவும் பயனளிக்கிறது!
இவ்வகை மீன்களை அதிகம் சாப்பிடுவது நினைவு வன்மை, இதைக் குறைவாகச் சாப்பிடுகிறவர்களிடம் குறைவாகவே இருப்பதாக - சுமார் 500 வயது வந்த வாலிபர்களிடம் முயன்று கண்டறிந்துள்ளனர் - டேனிஷ் நாட்டில்!
நினைவு தவறும் நோயான டெமென் ஷியா (Demensia) என்பதைக் குறைக்க இது பயன்படும் என்று கண்டறிந் துள்ளனர்!
மற்ற வகை மீன்களிடமிருப்பதை விட இந்த வகை சார்மீன்கள் - சாலமின் மீன்களிடமே ஒமேகா-3 அதிகம் உள்ளது.
அவெகேடா ஒரு மாதிரி வெளிர் பழுப்பு கலந்துள்ள பழம் - அதில் இந்த ஒமேகா -3 உள்ளது.
(4) வால் நட்ஸ் (Wall nuts) வாதுமைப் பருப்பு:
பொதுவாக எல்லா கொட்டை வகைகளும் மூளைக்கு நல்லவை தான். உப்பு போடாமல், எண்ணெய், நெய்விட்டு வறுக்காத வரை!
வாட்டிய மீன்களைப் போலவே இந்த ஒமேகா-3 சத்து இந்த வாதுமைப் பருப்புகளில் ஏராளம் உண்டு. இதுவே மூளையைப் போலத்தானே காட்சியளிக்கிறது! அத்துடன் வைட்டமின் E -யும் இவற்றில் கூடுதலாகக் கிடைக்கிறது என்பது ஆய்வாளர்களின் முடிவு. அல்ஷைமர்ஸ் (Alzhemiers’ Desease) முழுமறதி நோய் என்ற அந்த நோயைத் தடுக்க இது உதவி செய்யும்; காரணம் ஒமேகா-3 இதில் ஏராளம் இருப்பதே!
மெக்காடாமியா (Macadamia) கொட்டைகளும் இதுபோல சிறந் தவையே. (நம் நாட்டில் அதிகம் பாவிப்பதில்லை நாம்.)
அட்வெண்டிஸ்ட் ஹெல்த் ஸ்டடி (Adventists health Study) குழுவின் லோமா லிண்டா பல்கலைக் கழகத் தின் ஆய்வுப் பிரிவினரால் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது! அதில் வாரம் 5 அல்லது கூடுதலான முறை இந்த வாதுமைப் பருப்புகள், கொட்டை களைச் சாப்பிடுவோர் மாரடைப்பு வரும் வாய்ப்பு சரி பகுதியாகக் குறையக் கூடும் என்றே கூறுகின் றனர் ஆய்வு முடிவாக!
கால்பாகம் - தினசரி சாப்பிடுங் கள். ஆனால் கொட்டைகள் மூலம் கலோரி அதிகம் செடி உணவுகளை விட, அதையும் மனதிற்கொண்டு இவைகளைச் சாப்பிடுவதை ஒழுங்கு படுத்திக் கொள்ளுங்கள்.
(தொடரும்)-விடுதலை,14.9.12
(5) இனிப்பு உருளைக் கிழங்குகள்(Sweet Potatoes):
இவை நமது இரத்தத்தில் உடனடி யாக சர்க்கரை அளவைக் கூட்டி விடாது. இதன் மூலம் நமது சக்தி யையும் குறையாமல், கவனம் சிதறா மலும்(Concentration) இருக்கவும் - நாள் முழுவதும் - இது உதவுகிறது.
பீட்டா கரோட்டின் (Beta corotin) என்ற சத்துதான் மூளையைக் கூர்மை மழுங்காமல் காக்கும் சத்து.
வாரத்திற்கு இந்த இனிப்பு உருளைக் கிழங்குகளை 2 அல்லது 3 முறை சாப்பிடுங்கள். நேரிடையாக சாப்பிட முடியவில்லையானால் இதை மஞ்சள் கூழாக்கியோ, அல்லது ஸ்பெகடி போலவோ செய்து உள்ளே தள்ளிவிடுங்கள்.
ஓட் மீல் என்ற ஓட்ஸ் கப் சாப்பாடு மலச்சிக்கலைப் போக்கும் முயற்சிகளைப் பலர் அறிவர். ஒரு உருளைக் கிழங்கு அதனைச் செய்து விடுகிறதாம்! இந்த நார்ச்சத்து உணவு மூலம் நமது கொலஸ்ட்ரால் - கொழுப்புச் சத்தைக் குறைத்து: மூளையைச் சுறுசுறுப்பாக்க உதவுகிறது என்பதையும் மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்!
(6) க்ரீன் டீ: - பச்சைத் தேநீர் என்று அழைக்கலாமே!
இது நமது மூளையைத் தாக்கும் எதிரிகளான Free Radicals என்பதி லிருந்து மூளையைப் பாதுகாக்கிறது.
சுற்றுச்சூழல் காற்று மாசு மூலமா கவோ, விஷச் சத்துக்களாலோ, மிக அதிகமான கொழுப்புச் சத்துள்ள உணவு கள் மூலமாகவோ ஏற்படும் கெடுதியி லிருந்தும் இந்த க்ரீன் டீ நம்மை வெகுவாகப் பாதுகாக்கிறது!
நம் மூளைக்குத் தேவையான டோப்பாமைன் (Dopamine) என்ற சத்து இந்த க்ரீன் டீயில் அதிகம் உள்ளது.
இந்த டோப்போமைன் தான் மூளை யின் மகிழ்ச்சியைத் தூண்டி பரிசளிக் கும் நரம்பு இயக்கிடும் நிலையம் (Neuro transmitter). வாழ்க்கையின் பல முக்கிய கிரியா ஊக்கி மய்யமாகவே இந்த சக்தி செயல்படுகிறது!
க்ரீன் டீயில் உள்ள அமினோ ஆசிட் என்ற சத்தும் மூளை பழுதானவர்களை மீண்டும் செயல்பட உதவிடும் ஒரு துணைவன் ஆவார்; என்னே விந்தை! தீவிர கவனம் (Concentration) சக்தி, குறைந்த கவலை - இவற்றை இந்த அமினோ ஆசிட் பார்த்துக் கொள்கிறது.
(7) மஞ்சள் (Turmeric):
இந்த பளிச்சென்ற மஞ்சள் நிறம் - Anti Oxidents அளவு கூடுதலாக இருப்பதைக் காட்டும். இதில் உள்ள Creactive protein என்ற புரதச் சத்து மூளை சில நேரங்களில் எரிச் சலுக்கு ஆளாகி, அதன் சில பகுதிகள் கெடுவதை தடுப்பான் ஆகி நின்று காக்கும் ராணுவ வீரனாகிறது!
சமைக்கும் உணவில் - கறியில் இந்த மஞ்சளை (சாப்பிடுவது) சேர்த்து உண்ணும் 1000 முதியவர்களை வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில் - அவர் களின் மூளைத்திறன் - அதன் விளை வான செயல்திறன் கூடுதலாகியுள்ளது என்று அறிந்துள்ளனர்!
பொதுவாக வாசனை உணவுப் பொருள்கள் (Spices) எல்லாமே உணவில் இப்படிப் பயன்படுகின்றன - இஞ்சி, லவங்கப்பட்டை போன்றவை மூளைப் பாதுகாப்பு அரண்களாக இருந்து காக்கின்றன!
உங்களது தினசரி உணவில் ஒரு கால் கரண்டி இவைகளை சேர்த்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
அமெரிக்காவில் இருந்து வரும் Bottom Line (1-6-2012) என்ற மருத்துவ இதழ் ஒன்றில் கண்ட கட்டுரையை ஆதாரப்படுத்தி எழுதியுள்ள கட்டுரை இது.)
என்ன வாசக நண்பர்களே!
இந்த இரண்டு வாழ்வியல் கட்டுரைகளும் நீங்கள் படிப்பதற்காக மட்டும் எழுதப்படவில்லை; நீங்கள் உடனடியாக முடிந்த அளவு அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க உங்களைக் கேட்டுக்கொள்ளவே எழுதப் படுகின்றன!
என்ன, உடனே வாங்கி, அன்றாடம் சாப்பிட்டு வருவதை பழக்கமாக்கி, பிறகு வழக்கமாக்கிக் கொள்வீர்களா?
எனவே எழுதியவர்களுக்கு நன்றி கூறவேண்டாம் - செயல்முறைக்குக் கொண்டு வந்து, ஆயுளை வளர்த்துக் கொள்ளுங்கள்! நண்பர்களே!
இது தேவையா? பெண்களே முடிவு செய்யுங்கள்.
-விடுதலை,15.9.12
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக