எளிமையான வாழ்வே எப்போதும் இனிமை யான நாளாகும்! நம்மில் பலருக்கும் அதைச் சேர்க்க வேண்டும்; இதை வாங்க வேண்டும் - நம் பிள்ளைகளுக்கு, வருங்கால சந்ததிகளுக்கு என்று ‘அரக்க பறக்க' ஆலாய்த் திரிந்து சேர்க்கும் எந்தப் பொருளும் கூட கடைசியில் - பட்டினத்தார் பாடியபடி ‘காதற்ற ஊசியும் உந்தன் கடைவழிக்கு வாராது காண்' என்பதுதானே மிச்சம்!
தனக்கென ஒரு சுயநலத்தின்படி பொருள்களை, சொத்துக்களையும் தவறான வழிகளையும் கூட கடைப்பிடித்து சேர்த்த ‘கோடீஸ்வர்கள்!' (நம் நாட்டில் கோடி ரூபாய் சேர்த்து விட்டால் கடவுளுக் குச் சமமான ‘சீட்' கிடைத்துவிடுகிறது!) என்ன விநோதம்! பாரீர்!!
பலரும் இப்படிச் சேர்த்த சொத்துக்கள் மூலமாக மகிழ்ச்சியா அடைகிறார்கள்?
துன்பம்! தூக்கம் தொலைந்த நிலை! நீங்கா மன அழுத்தம், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோயின் அதிவேகம் - இப்படி பல நோய்களின் காரணி யாகவே அந்த அலைந்து அலைந்து சேர்த்த சொத்துகள் உள்ளன!
ஆனால், அதே சொத்துக்களை அறப் பணி களுக்குப் பயன்படும் வகையில் சுயநலம் தலை தூக்காத சமூக நலம், மக்கள் நலம் சார்ந்த அமைப் புகளை உருவாக்கித் தலைமுறை தலைமுறையாக அவை பயன்படுவது நல்ல தொண்டறம் ஆகும்!
சென் புத்த அறிஞர் - ஜப்பானிய பவுத்த அறிஞர் ஷண்மியோ மாசூனோவின், ‘Don't Worry' என்ற நூலில் உள்ளவாறு, "வீட்டில் கூட தேவையற்ற பொருள்களை வாங்கித் திணித்து வீட்டை ஒரு கிடங்கு போல் ஆக்கிக் கொண்டால் அது வீட்டுக்குப் பாரமல்ல - மன திற்குத்தான் பெரும் சுமையாகும்!
அவரவர் தேவையைப் போல நம்மில் பலரும் பொருள்களை அடுக்கி அடுக்கி வைப்பது தேவை தானா?
நமக்குள்ள தேவையற்ற ஈடுபாடு காரணமாக இந்தப் பொருள்கள் சேர்ந்து கொண்டே வருகிறது!
நம்மில் பலருக்கும் பழையனவற்றைக் கழித்து விட - பிறருக்குக் கொடுத்து விட மனம் வருவ தில்லை; புதியன சேர்வது நம் வீட்டை குப்பை மேடாக்கித் தான் வருகிறது.
தேவைக்கு மேல் எதையும் வைத்தால் அதனால் ஏற்படுவது மகிழ்ச்சி அல்ல - மன அழுத்தம்தான்.
இடையில் திருடர் பயம் - கொள்ளைகள் - நிம்மதியற்ற பயம்தான் மிச்சம்!
என்னே குளறுபடியான வாழ்க்கை! இப்படி அதிகமாக வைக்க இடமின்றி அடைப்பதால் (Dumping) யாருக்கு என்ன பயன் என்ற கேள்வி மிகவும் நல்லது!
இவை இல்லாத நண்பர்க ளுக்கோ அல்லது அறக்கட்டளை கள், அலுவலகங்கள், பள்ளிகள், விடுதிகள் இவற்றிற்குக் கொடையாக அளித்து மகிழலாமே!
பயனுறு பணியாகும் அது!
தொலைக்காட்சி விளம்பரங்கள் கண்ணுறும் குடும்பத் தலைவிகள் நுகர்வோர் கலாச்சாரத்தில் மூழ்கு வதால், கண்டதையும் - தேவையைப் பற்றிச் சிறிதும் கவலையற்று வாங்கி, வாங்கிக் குவித்துத் தேவையற்ற பொருள் குவிய லைத் தான் - பணத்தின் மதிப்பைப் பற்றி சிறிதுகூட யோசிக்காமல் நடந்து கொள்வது நம்மை தாழ்த் துமே தவிர உயர்த்தாது!
"எதையும் எடுக்காமல் நடந்து பழகுங்கள்" என்ற ஒரு சொற்றொடர் (Walking hand-in-hand).
எனவே எவ்வளவு குறைந்த தேவைகளோடு வாழ முடியுமோ அதன்படியே வாழக் கற்றுக் கொள்!"
நம் கண்கூடாக பார்த்தவரை தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் அல்லவா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக