நேற்றைய(7.5.2017)‘தீக்கதிர்’ நாளேட்டின் இணைப்பான ‘வண் ணக்கதிர்’பகுதியில்-தஞ்சை இரைப்பை குடல்நோய் நிபுணர், பிரபல டாக்டர் சு.நரேந்திரன் அவர்கள் (வாரம்தோறும் நலவாழ்வு குறிப்புகள் எழுதுகிறார்) ஏப்பம் என்ற தலைப்பில் உடல்நலம் பேணுவதற்கும், ஏப்பத்திற்கும் உள்ள தொடர்பு - அதிலிருந்து பாதுகாத்தல் - வாயுத் தொல்லைபற்றி எவரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் பல அரிய தகவல்களை எழுதியுள்ளார்.
அவர் கூறும் சில முக்கிய குறிப்பு கள்:
இரைப்பை மற்றும் குடலில் குறைந்த அளவே வாயு (காற்று) உள்ளது. சுமார் 100-150 சி.சி. வயிறு காலியாகவே இருக்கும்.
உணவு உண்ணும்போதும், நீர் அருந்தும்போதும் அதிகமான காற்று குடலின் உள்ளே செல்கிறது.
இவ்வாறு உட்கொள்ளப்படும் காற்று, வயிற்றின் கொள்ளளவைவிட அதிகமாகும்போது ‘ஏப்பமாக’ வெளி யேறுகிறது!
அடுத்து, உட்கொண்ட உணவு வயிற்றினுள் புளிப்படைந்தாலும், ஏப்பம் உண்டாகும். இதைப் ‘புளித்த ஏப்பம்‘ என்று கூறுவார்கள். இது வயிற்றில் அதிக அமில சேர்க்கையால் உண்டாவதாகும்.
இதேபோல, குடலில் புண் உள்ள வர்களுக்கு செரிமானமின்மை ஏற் படும். இதன் காரணமாகவும் அடிக்கடி ஏப்பம் வெளிவரும்.
நுரை அதிகமாக உள்ள பானங்கள், சோடா, பீர் மற்றும் புகை பிடித்தல் ஆகியவை காரணமாகவும் ஏப்பம் வெளிவரும்.
நேரம் தவறி உணவு உட்கொள் வதாலும் ஏப்பம் ஏற்படும்.
மனநோய் உள்ளவர்கள் அடிக்கடி காற்றைக் குடிப்பார்கள்! இவர்கள் மற்றவர்களுக்குக் கேட்கும் அளவுக்கு சத்தமாக ஏப்பம் விடுவார்கள். இவர் களுக்கு மருந்து தேவையில்லை. மனநோய் மருத்துவரே தேவை.
தடுப்பு முறை என்ன? - விவரிக் கிறார் டாக்டர்:
1. உணவைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிக தடவை உண்ணவேண் டும்.
2. உணவு உண்ணும்போது நீர் அருந்தக் கூடாது. நீர் அருந்தினால், வயிறு பெருத்துச் செரிமானக் கோளா றுகள் ஏற்படும்.
3. உணவை சரியான இடைவெளி களில் உண்ணவேண்டும்!
4. இந்த உணவுகள் குடலில் அழுக நேரிட்டால் வேண்டாத காற்றை உண்டு பண்ணும்.
5. உணவு அருந்தும்போது உடை கள் தளர்ந்து இருக்கவேண்டும்; உணவு அருந்தியபின் காலாற சிறிது நேரம் நடக்கவேண்டும்.
இப்படி பலப்பல நல்ல அறிவுரை களை மருத்துவ ரீதியாக வெளியிட்டுள்ளார். அக்கட்டுரைக்குப் பக் கத்தில் உள்ள மற்றொரு குறிப்பும் இக்கால இளைஞர்களுக்கு, தொலைக் காட்சியை நள்ளிரவு முழுவதும் உட்கார்ந்துப் பார்த்து தூக்கமின்மை அல்லது குறைந்த தூக்கத்திற்கு ஆளாகி அதன் காரணமாக நோயுற் றவர்களாகும் பலருக்கும் பயன்படும் குறிப்புகள் அவையாகும்.
மெலடோனின் (Melatonin). சுரப் பதுபற்றியும் அருமையான தகவலும், இருட்டும் தேவை - தூக்கத்திற்கு என்ற பயனுள்ள தகவலும் வந்துள்ளதை அப்படியே தருகிறோம்.
கற்க அதன்பின் நிற்க அதற்குத்தக!
‘‘நமது உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன. அதில் ஒன்று நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்குபடுத்தும் உயிரியல் நேர முறைமை(Biological Clock System). இதனை வழிநடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள் ளது. அதுதான் பினியல் சுரப்பி (Pineal Gland). கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த சுரப்பி பார்வை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பினியல் சுரப்பி ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது. அதுதான் மெலடோனின்(Melatonin). இந்த அரிய பொருளின் பலன் மகத்தானது. புற்றுநோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது. மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும். இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும். அதனுடன் இணைக்கப்பட் டுள்ள பார்வை நரம்பு மூலமாக அது இரவின் இருளை அறிந்துகொள்ளும். ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிக்குப் பிறகு இருளில் சுரக்கும் மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந் தோடும். நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால், பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது. பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆரம்பித்து காலை 5 மணிக்கு நிறுத்திவிடும். இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்றுநோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்.
எனவே, இரவு முன்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்றுநோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது.
அதேபோன்று அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓசோன் நிறைந்திருக்கும். ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால் இந்த ஓசோன் காற்றை அவன் சுவாசிப்பான். நமது உடலி லுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத் துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இரவு முன்கூட்டியே உறங்குவதால், மெலடோனின் கிடைக்கிறது. அதி காலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால், ஓசோன் கிடைக்கிறது. நமது உடலின் ஆரோக்கியம் இவற்றில் அடங்கியிருக்கிறது'' என்கிறார் டாக்டர் நரேந்திரன்
- கி.வீரமணி
-விடுதலை,8.5.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக