பக்கங்கள்

வெள்ளி, 12 மே, 2017

ஜப்பான் நாட்டின் ஒரு விசித்திரத் துறவு ‘‘ஜோகட்சூ’’ - நீராவி மனிதர்கள்!




கடும் உழைப்பிற்கும், தன்னடகத் திற்கும், மெல்லப் பேசுவதற்கும் பெயர் போன நாடு ஜப்பான்; எத்தனையோ இயற்கை உபாதைகள் - இடையூறுகள் - எரிமலை கக்குவது - பூகம்பம் - ஆழிப்பேரலையான சுனாமி - இவை களையும் எதிர்கொண்டு வாழும் மக்களாகிய ஜப்பானியர்களைப்பற்றி, அங்கு சென்று ஏறத்தாழ 9 ஆண்டு களாக வாழ்ந்து, அவர்களோடு கலந்து அவர்தம் நம்பிக்கையைப் பெற்ற இரண்டு பிரெஞ்ச் எழுத்தாளர்களான வாழ்விணையர்கள் ஒரு அருமையான நூல் எழுதியுள்ளனர். அவர்கள் ஒளிப்படக் கலைஞர்களும்கூட!

லேனா மாகெர் (Lena Mauger), ஸ்டீபென் ரெமேல் (Stephane Remael)

என்ற அந்த இருவரும் எழுதி யுள்ள புத்தகத்தின் பெயர் ‘‘மறைந்து கொண்டவர்கள் - நீராவியான மனி (‘‘The Vanished - The Evaporated People of Japan in Stones and Photographs’’)  என்பதே அதன் தலைப்பு.

அதிலுள்ள சுவையான பல்வேறு தகவல்கள் எவ்வளவு மான உணர்வு படைத்த மக்களாக அவர்கள் இருக் கிறார்கள்;

அவர்களது ‘துறவு’ எப்படிப்பட்ட விசித்திரமான மறைவு  வாழ்க்கையாக உள்ளது என்பதை அந்தப் புத்தகம் கூறுகிறது!

வேலையிழந்து அவமானத் திற்குள்ளானோர், காதலில் தோல் வியுற்றோர், கடனாளியாகி மீள முடியாது தவித்தோர் - இப்படிப்பட்ட பல ஜப்பானிய மக்கள் தாங்கள் தற்கொலை செய்துகொள்ளாமல், காணாமற்போய் தங்கள் அடை யாளத்தையே, எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டே வாழுகிறார்கள்!

இவர்கள் ஜப்பானிய மொழியில் ‘‘ஜோகட்சூ’’ (‘‘Johatsu’’)

அல்லது ‘‘நீராவியான மக்கள்’’ என்று குறிப் பிடப்படுகின்றனர்!

இவர்களில் பலரும் தற்கொலை செய்துகொள்வது கிடையாது.

அதிகமாக ஓவர் டைம் வேலை பார்த்தவர்கள் பத்தாயிரம் பேர் என்றால், அவர்களில் 20 விழுக் காட்டினர் - அதனால் மனமுடைந்து (அவர்கள் மாதத்தில் 80 மணி நேரம் அதிக வேலை செய்து) தற்கொலை செய்துகொண்டவர்கள் ஆவார்கள்.

இதற்கு ஜப்பானிய மொழியில் ‘கரோஷி’ (‘Karoshi’) என்று பெயர் வைத்துள்ளார்கள்! ஜப்பானில் கூடுதல் நேர வேலைக்கு ஊக்கத்தொகை தருகிறார்கள் என்றாலும், அவர்களது இழக்கும் இன்பத்திற்கும், ஓய்வு - இளைப்பாறுதலுக்கும் அது சரியான ஈடாகாது! எனவேதான், சிலர் ‘கரோஷி’களாகி மனமுடைந்து விரக் தியில் ‘தற்கொலைஞர்கள்’ ஆகி விடும் பரிதாப நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்!

ஜப்பானின் பொது சர்வதேச ஒலிபரப்பான வானொலி இதுமாதிரி ஆனவர்கள்பற்றிய செய்திகளை ஒலிபரப்பினாலும்கூட, அவர்கள் திரும்புவதும், கண்டுபிடித்து மீண்டும் சேருவதும் எளிதாக இல்லை அங்கே!

ஜப்பானிய சட்டப்படி இது அனு மதிக்கப்பட்ட அவரவர் தம் தனிப்பட்ட ரகசியக் காப்பு உரிமையும்கூட. எனவே, குற்றப் பின்னணியிருந்தால் ஒழிய அவர்களை அரசோ, காவல் துறையோ ஒன்றும் செய்துவிட முடியாது!

இப்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சம் பேர் (1,00,000) தலைமறைவாகி, ‘‘நீராவி மனிதர் களாகி’’  வாழ்க்கையை அவர்களுக்குப் பிடித்த சுதந்தர வாழ்க்கையாக வாழ்ந்து காலந்தள்ளுகின்றனர்!

ஓய்வுப்பற்றி கவலைப்படாது ‘கரோஷி’ நிலைக்கு அம்மக்கள் செல்லாமல் இருக்க, ஜப்பானிய அலுவலகங்களில் தற்போது வெள் ளிக்கிழமைகளில்கூட வெகுக் குறைந்த நேரமே பணியாற்றி வெளி யேறிட அனுமதிக்கின்றனர்!

(நம் நாட்டில் வெள்ளிக்கிழமை களில் பல அலுவலகங்களில் சரியான பதிலேகூட கிடைப்பதில்லை என்பது நாம் கண்ட யதார்த்த அனுபவம் அல்லவா?)

ஜப்பானில் இப்படி ஒரு விசித்திர துறவு

ஆண்டுதோறும் தொடரும் அவ லமான அம்சமாகவே உள்ளது!

பாதிக்கப்பட்டோர் (உறவினர்) பழகிக் கொண்டு விட்டனர்!

- வேறு என்ன செய்வது?

-விடுதலை,3.5.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக