இனி வருங்காலத்தில் மனித குலம் பிழைக்க வேண்டுமானால் - தழைப் பது பிறகு இருக்கட்டும் - வாழ்வதற்கே, இந்தப் பிரபஞ்சமாகிய பூவுலகில் உத்திரவாதம் - உறுதி ஏதும் கிடையாது; காரணங்கள் என்னவென்று கேட்கிறீர்களா?
பிரபல இயற்பியல் துறை அறி வியல் மேதையும், ‘அதிசய மனிதரு மான’ ‘‘ஸ்டீபன் ஹாக்கிங்’’ (ஷிtமீஜீலீமீஸீ பிணீஷ்ளீவீஸீரீ) அவர்கள் வெப்ப சலனம், கூடுதலான மக்கள் தொகைப் பெருக் கம், ரசாயன மற்றும் அணு ஆயுதப் போர் அபாயம் - இவைகள்தான் நம் எதிர்கால வாழ்வு, மனித குல அழி விற்கே விரைந்து வழிவகுக்கக் கூடும் என்கிறார்!
முன்பு ‘ஸ்கைலாப்’ உடைந்து, உலகம் அழியப் போகிறது என்று கிளம்பிய புரளியைப் போன்றோ, அல்லது
‘அஷ்ட (எட்டு) கிரகங்கள் ஒன் றாய்ச் சேரப் போவதால் இந்த உலகம் அழியப் போவது உறுதி என்ற ஜோதிடர்களின் ‘கப்சா’க்களால் கலங்கி, கடைசியாக கோழிக் கறியும், ஆட்டுக்கறியும் சமைத்து விருந்தை - ஒன்றாக அமர்ந்து, ‘‘சுராபானத்தையும்‘’ ஒரு மிடா குடித்துக் கூத்தடித்துக் கும்மாளம் போட்டனர்!
(அன்றும் ‘விடுதலை’யும், திராவி டர் கழகமும் இது வெற்றுப் புரளி, நம்பாதீர்கள் என்று கூட்டம் போட்டுப் பிரச்சாரம் செய்தனர்).
நம் தலைமுறையில் வாழும் இந்த பிரிட்டிஷ் விஞ்ஞானியோ தீராத நோயால் பீடிக்கப்பட்டு பல ஆண்டு களுக்குமுன்பே இறந்து போகும் நிலையிலிருந்து மீண்டு, திருமணம் - குழந்தைகள் என்று குடும்பஸ்தராகவும், இடையறாத ஆராய்ச்சியாளராகவும், நூல்கள் எழுதுபவராகவும் உயர்ந்தவர்.
அவர் கூறுவது அறிவியல் அடிப்படையில் தான் - ஊகமோ, விழைவோ அல்ல!
எதிர்காலத்தில் எப்படி எப்படி யெல்லாம் நடைபெறக்கூடும் என்ப தால், அத்தகைய சிந்தனைகளில் உந்தப்பட்டவைகளாக அவை அமை கின்றன!
செவ்வாய்க் கிரகம்தான் மனிதர்கள் வசிக்கத் தகுதி வாய்ந்த, பூமிக்கு அருகில் உள்ள கிரகமாக இருக்கும் என்கிறார்!
செவ்வாய் அன்று தொடங்கிய நம் நாட்டு ‘ராக்கெட்’ விண்வெளியில் ஓராண்டு படைத்து செவ்வாய்க்கிரகம் சென்று மீண்டதே! இன்னமுமா ‘‘செவ்வாய் தோஷ’’ பயம் உங்களை உலுக்குவது? மகாமகா வெட்கக்கேடு அல்லவா இது!
எலன் மஸ்க் (Elon Musk) என்ற பிரபல அமெரிக்க தொழில் முனைவர் ஒருவர் செவ்வாயில் குடியேறலாம். 2024 இல் (இன்னும் 7 ஆண்டுகளில்...!) இது சாத்தியம் - பயணங்கள் தொடங் கக்கூடும்!
முதல் மனிதப் பயணம் அவ்வாண் டில் முடியும் - அங்கே போய் இறங்க லாம்.
‘‘Interplanetary Transport System - கோள் விட்டு கோள் போகும் பயண வாகனங்கள் spaceship இல் பயணக் கப்பல்கள் அமைக்கப்பட்டு அழைத் துச் செல்லப்படுவார்கள் என்று எலன் கூறுகிறார்!
10 பில்லியன் டாலர் ஒருவருக்கு செலவாகும் என்கிறார். (அதாவது 10 ஆயிரம் கோடி டாலர்- ரூபாயில் பெருக்கி மயக்கமடையாதீர்கள் - 60,000 கோடி ரூபாய்).
திரைப்படங்கள் இதற்கு முன் னோடிகளாக அமைந்துள்ளன - கற் பனையால்.
இன்றோ விஞ்ஞானம் அதை சாத்தியமாக்குகிறது!
இந்நிலையில், நம் நாட்டில் ‘‘புனித கங்கை’’யை தூய்மைப்படுத்தும் திட் டத்திற்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கிறார்கள்.
கங்கை ‘‘புனிதம்‘’ (Holy) என்றால், எதற்காக அதனை ‘‘சுத்தப்படுத்த வேண்டும்?''
- புரியாத கேள்வி - விடையும் கிடைக்காது - நம்புங்கள்!
-விடுதலை,18.5.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக