ஆந்திராவில் விஜயவாடாவைச் சேர்ந்த மாதம் ஷெட்டி சிவகுமார் என்பவருக்கு 13 வயதுள்ள மகள் ‘சாய்சிறீ’ என்ற பெயரில் உண்டு. அந்தப் பெண் குழந்தை ‘எலும்பு மஜ் ஜை’ (ஙிஷீஸீமீ னீணீக்ஷீக்ஷீஷீஷ்) புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டார்.
8 ஆண்டுகளுக்கு முன்பே மகளை யும், அவரது தாயான மனைவியையும் மாதம் ஷெட்டி விலக்கி விட்டார்!
இதனால், தந்தை பெங்களூருவில்; தாயும், மகளும் விஜயவாடாவில்!
இந்த மகள் சாய்சிறீ எலும்பு மஜ்ஜை புற்றுநோய் சிகிச்சைக்கு 40 லட்சம் ரூபாய் செலவழிக்க, மகள் சாய்சிறீ பெயரில் உள்ள வீட்டை விற்க முடிவு செய்தார் தாய்.
இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித் துத் தடுத்தார் - மனிதாபிமானமில்லாத இந்த தந்தை.
உடனே ‘வாட்ஸ் அப்பில்’ சாய்சிறீ தன் தந்தைக்கு ஒரு செய்தி அனுப் பினாள்!
‘‘அப்பா நான் உயிருக்குப் போரா டிக் கொண்டிருக்கிறேன்; அம்மா என்னுடைய சிகிச்சைக்காகத் தான் வீட்டை விற்கிறார்.
உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், நீங்களே பணத்தை செலுத்தி எனது சிகிச்சைக்கான ஏற்பாட்டைச் செய் யுங்கள்! இன்றேல், என் உயிரிழப்புக்கு நீங்கள்தான் காரணமாவீர்கள்’’ என்று கண்ணீர் மல்கக் கூறினாள்!
அந்த வன்னெஞ்ச, பணத்தாசைக் காரனுக்கு மனமிரங்கவில்லை; தனது சொந்த மகளைக் காப்பாற்றி வாழ வைக்கமனிதாபிமானமும்கூட இல்லை!
இந்தக் குடும்பத் தகராறு காரணமாக வீட்டை விற்க முடியவில்லை; பெற்ற மகளின் சிகிச்சைக்கு மனமிரங்கி பணம் செலுத்தி உதவி செய்யவும் முனையாத சுயநலப் பிண்டமான, பணத்தாசை வெறியனான அந்த மனிதரின் சுயநலம் காரணமாக அந்த இளங்குருத்து மரித்துப் போனது! மரணம் அதன் கோரப் பசிக்கு இரை யாக்கிக் கொண்டது.
தந்தையின் சுயநலம், பழிவாங்கும் எண்ணம் போன்ற காரணத்தால், 13 வயது சிறுமி வாழ வேண்டிய, வளர வேண்டிய இளந்தளிர் பட்டுப்போனது! அந்தோ என்ன கொடுமை!
பணம், பாசத்தை விரட்டியது
மனம், குணத்தை அறத்தை அழித் தது.
பணம் - மனிதர்களுக்கு வேலைக் காரனாகவே இருக்கவேண்டும்; ஒரு போதும் அது எஜமானனாகி எகத்தாளம் போட்டால் இப்படிப்பட்ட இரக்கம், கருணை, அன்பு, பாசம் என்றாலே, என்னவென்று தெரியாத ஜீவனற்ற ஜடங்களாக பல நேரங்களில் பல மனிதர்கள் வாழ்கிறார்கள். இவர் களிடம் ‘மனிதம்‘ உண்டா? இவர்களை எப்பிரிவில் சேர்ப்பது? ‘மனிதம் இல்லா மனிதர்கள்’ என்ற பட்டி யலில்தான் வைக்கவேண்டும்!
இதிலிருந்து நாம் ஓர் உறுதி மொழியை ஏற்கவேண்டும்;
‘இந்தப் பட்டியலில் நானோ, என் குடும்பத்து உறுப்பினர்களோ, என் நெருங்கிய நண்பர்களோ ஒருபோதும் (மனிதம் இல்லா மனிதர்கள்) பட்டிய லில் சேரமாட்டோம்!
தொண்டறத்தின் தூய்மையை உணர்ந்து வாழ்க்கையை வசந்தமாக் கிக் கொண்டு வாழுவோம்!
பணம் என்னை வழிநடத்தாது!
நான்தான் பணத்தை வழிநடத்து வேன்!'
என்று வாழ்ந்து காட்டும் வைராக் கியத்தை மேற்கொள்ளுவோம்!
(‘தின இதழ்’ நாளேட்டில் 19.5.2017, 5 ஆம் பக்கத்தில் வந்த ஒரு செய்தியை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சிந்தனை இது!).
19.5.2017, விடுதலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக