பக்கங்கள்

வெள்ளி, 17 ஜூன், 2016

தேவைக்கு மேல் தேவையா? தேவையா?


நம்மில் பலரும் ஆடம்பரமாக வாழ வேண்டும். எதுவும் மற்றவர்கள் பார்த்து வியப்பதாகவும், விசாரிப்பதாகவும் அமைய வேண்டும் என்ற போலிப்பெருமை என்ற பெரு வியாதிக்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கிறோம்!

“பெரிய கார் வாங்க வேண்டும்“
“பெரிய வீடு வாங்க வேண்டும்“

“கைப்பேசி கூட லேட்டஸ்ட், ஆடம்பரமானதாக ஆப்பிள் போன்றதாக இருக்க வேண்டும்“

எதிலும் குறைந்த இலக்காக பலர் நிர்ணயிக்கும் இலக்கே 70 விழுக்காடு! 70 விழுக்காடு! என்னே ஆடம்பரமோகம்!

70% சதவிகித விலை உயர்ந்த - ஆடம்பர - கார்களை வாங்கும் எவரும் அதில் வாழ - பொருத்தப்பட்டுள்ள அத்தனையையும் அனுபவிப்பவர்களா என்றால் இல்லை. இல்லை!
‘பெரிய பங்களா’ வாங்கும் எவரும் எல்லா அறைகள் அவைகள் பொருத்தப்பட்டுள்ள எல்லா ஏசி, மற்ற வசதிக்கான கருவிகளை நுகர்ந்து இன்பம் - மகிழ்ச்சி அன்றாடம் அனுபவிப்பவர்களாகவே இருக்கிறார்களா? இல்லை, இல்லை.

பணத்தைச் சம்பாதிப்பதோடு, ஆடம்பர வெறிக்கு பலரும் பலியாகி விடுவதால் நாடும், சமூகமும் வெகுவாகக் கெட்டுப்போகும்.

நாம் வாங்கி பயன்படுத்தும் கைப்பேசி யில் எத்தனையோ வசதிகள் - உதவிடும் ஏதுக்கள் (நிணீபீரீமீts) நுண்கருவிகள் உள்ளன. அவைகளைப் பயன்படுத்தும் நாம் அனுபவிக்கிறோம் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?

சாதாரணமாக நிற்காமல் ஓடும் எளிமையான காரை ஓட்டிச் செல்லும் ஒருவருக்கும் மிக விலை உயர்ந்த மோட்டார் காரை ஓட்டும் போது யாராவது ‘உரசி விடுவார்களோ’, ‘கீறிவிடுவார்களோ’ என்ற கவலையே, சொந்தக்காரரின் கவலையாக இருக்கும்! அதனால் வரும் மகிழ்ச்சியைவிட கவலையே அதிகமாகும்! இல்லையா? யாராவது மோதிவிட்டால் நம் காரின் நிலை என்ன என்ற பயமே மேலோங்கும்!

பெரிய பங்களா கட்டிவிட்டு அதில் பல அறைகளை அமைப்பது தூசி தட்டி, சுத்தமாக பெருக்கி பாதுகாப்பதே பல மடங்கு பொறுப்புச் சுமையாகும். சுகங்களே பற்பல நேரங்களில் சுமைகளாக அதுவும் தூக்கிச் சுமக்க முடியாத சுமைகளாகி விடுகின்றன.

இன்னும் பலருக்கு ஏன் நாம் செல் வத்தைச் சேர்க்கிறோம். இது யாருக்குப் பயன்படப் போகிறது என்று கூட யோசிக்காமல், மிகக் கீழ்த்தரமான முறைகளில் கூட ஓய்வின்றி - உடல் நலத்தையும் கவனிக்காமல் பணம் சம்பாதித்து சேர்க்க அலைகிறார்கள்!

வாழ்நாள் எல்லாம் இந்த சேகரிப்பு, பாதுகாக்கும் கவலை. வருமானவரித்துறை மற்றும் திருட்டு பயம் எல்லாம் பகுத்தறி வுள்ள மனிதர்களை பாடாய் படுத்துகின்றது!
அய்ந்து அறிவுள்ள மிருகங்கள் - பிரசவித்தபின் இதில் எதைப் பற்றியாவது கவலை படுகின்றனவா?

கிடைத்ததைத் தின்று, உண்டு, உறங்கி இனப்பெருக்கத்துடன் அவைகளை ஓரளவு வரை ‘மட்டுமே’ பாதுகாத்து வளர்த்து பிறகு தனியே விட்டு விடுகின்றன!
ஆனால் மனிதர்களாகிய நாமோ...! எத்தனை தலைமுறைகள் கவலை - வாழ்நாள் கவலை - எவ்வளவு தேவை (ளிஜீtவீனீuனீ) அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, பிறருக்கு தந்து மகிழலாம்! சமூகத்திற்கு நமது பங்களிப்பாக இருக்கட்டும் என்று விட்டுவிடலாமே!

அப்படி பணம் பணம் என்று சேர்க்கிறாரே என்ற குற்றம் சுமத்தப்பட்ட தந்தை பெரியார் இறுதியில் அத்தனை செல்வத்தையும் மக்களுக்காக விட்டுச் சென்ற தொண்டறத் தூயோனாக உயர்ந்தாரே!

நிறைய பணம் சேர்ப்பதைவிட, நிரம்ப பொறுப்புணர்வுடன் உங்கள் உடல் நலம் பேணுங்கள்,  அடிக்கடி நன்றாக இருக்கும்போதுகூட மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
‘தாகம் எடுத்த பிறகே தண்ணீர்’ என்று காத்திருக்காதீர்! அதற்கு முன்பே கூட தண்ணீர் அருந்துவது தவறல்ல, விரும்பத்தக்கதே!
வந்த பின் கவலைப்படுவதை விட வருமுன்னர் காப்பது பற்றி திட்டமிட்டு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்!

ஈத்துவக்கும் இன்பம் தான்
எல்லை யற்ற இன்பம்!

சேர்த்து வைத்த வைக்கப்போர் குக்கல் ஆவது என்ற நிலையும் விரும்பத்தக்கதல்ல!

நமது தேவைக்கு மேல் உணவு - செரிமானமாகாமல் செரிமான கோளாறு உண்டாக்குகிறது அல்லவா?
அதே தத்துவத்தை பொருள் சேர்ப்பது, சொத்து சேர்ப்பதிலும் எண்ணுங்கள்

‘உண்பது நாழி
உடுப்பது நான்கு முழம்’

என்று எவ்வளவோ காலத்திற்கு முன்பே தமிழாய்ந்தோர் கூறியது. எத்தகைய அனுபவ அறிவுரை சிந்தித்து வாழுங்கள்! செயல்படுத்தி மகிழுங்கள்.
-விடுதலை,21.5.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக