சிங்கப்பூரின் பிரபல ஆங்கில நாளே டான ‘The Straits Times’ ஏட்டில் 6.6.2016 அன்று ஒரு மருத்துவ இயல் பற்றி அருமை யான தகவல் வெளியாகி உள்ளது.,
சிங்கப்பூரின் பிரபல தேசிய பல்கலைக் கழகத்தின் சத்தான உணவைப் பற்றிய மருத்துவ ஆய்வு மய்யத்தின் பேராசிரியர் ஜெயகுமார் ஹென்றி அவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கான அந்த அரிய ஆய்வு முடிவினைத் தெரிவித்துள்ளார்.
எவ்வளவுஉணவு உண்ணவேண்டும்; எதனுடன் அதனை இணைத்து உண்ணு தல், எப்படி உண்ணுதல் நல்லது, முறை களில் கூட ரத்தச் சர்க்கரை அளவு எப்போது எப்படி உண்டால் கூடுகிறது, குறைகிறது என்பது பற்றி அறிய ஆய்வின் முடிவை அங்கேயே மக்களுக்கு அறிவித்தார்.
சிங்கப்பூரில் பலரும் விரும்பிச் சாப் பிடும் உணவு, கோழிக்கறியுடன் இணைந்த சோறு (Chicken Rice)
அய்ரோப்பிய சத்தான உணவு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி ஏட்டில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியாகி உள்ளது,
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை(Blood Sugar Level) பற்றி அளவீடு Glycemic index (G.I) வெறும் அரிசி சோற்றை முதலில் சாப்பிட்டால், அதன் அளவு 96 ஆகவும், அதே அரிசி சோற்றை, கோழிக் கறி குறிப்பாக மார்புப் பகுதி கோழிக் கறியோடு கலந்து சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு (இத்துடன் மணிலா எண்ணெய், காய்கறி களுடன் இணைத்து சாப்பிட்டால்), எவ்வளவு தெரியுமா? வெறும் 50 தான்!
நாம் உண்ணும் உணவில் இந்த அளவீடு (G.I) 55 என்பது குறைவானது. 70 என்பது மிக அதிகம் என்பது உணவின் சர்க்கரை அளவீடு Glycemic index)

கோழிக்கறிச் சோற்றை உண்ணும்போது முதலில் அத்துடன் தரப்படும் கோழி சூப்பை முதலில் அருந்தி விட்டு சோற்றைப் பிறகு சாப்பிட்டால் அதிக சர்க்கரை ஏறாதாம்!
ஏனெனில் கோழி சூப் அல்லது (மட்டன்) ஆட்டிறைச்சி சூப் -போலவே சூப்புகளில் உள்ள அமினோ அமிலம் (Amino Acids) நம் உடலில் இன்சூலின் அதிகம் சுரக்கச் செய்கிறதாம்!
இதை N.G.S. (National University of Singapore) பல்கலைக்கழகத்தின் பயோ கெமிஸ்ட்ரி துறையின் கீழ் இயங்கும் யாங் லூலின் ஸ்கூல் ஆப் மெடிசன் - Yong Loo lin School of Medicine) அமைப்பின் ஆய்வுக் கூடத்தில் சூப்பை ஆய்வு செய்ய பைராசிஸ்ஹென்றி ஏற்பாடு செய்தார்.
பிராண்ட் சிக்கன் எஸ்சென்சில் இந்த அமினோ ஆசிட் அதிகம் உள்ளது என் பதை உறுதி செய்து கொண்டார். எனவே மேற்சொன்னது சரியானது என்பதை இச்சோதனையும் உறுதிப்படுத்தியது.
இதனடிப்படையில் சிக்கன் எசன்ஸ் முதலில் குடித்து பிறகு சாப்பாடு சாப்பிடும் போது ரத்தத்தில் ஏறும் சர்க்கரை அளவு குறைவாக இருக்கிறது என்பதைக் கண்டு பிடித்தார்.
இதனடிப்படையில் சிக்கன் எசன்ஸ் முதலில் குடித்து பிறகு சாப்பாடு சாப்பிடும் போது ரத்தத்தில் ஏறும் சர்க்கரை அளவு குறைவாக இருக்கிறது என்பதைக் கண்டு பிடித்தார்.
அது போலவே சோயா பாலையும் அல்லது வெறும் பாலை (பசு, எருமை, டின்பால்)யும் சாப்பிட்ட நிலையில் இருந் தால் ரத்தச் சர்க்கரை அளவு வெகுவாகக் குறைகிறது.
கடந்த 2 ஆண்டுகளில், பிரபலமான ஆய்வேடுகளில் அப்பேராசிரியர் ஹென்றி குறிப்பிட்டுள்ளார். ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதால், சிறுநீரகம் (கிட்னிகள்) பாதிப்பு, கண்பார்வை பாதிப்பு, மாரடைப்பு போன்றவை வரக்கூடும் என்பதால், நாம் உண்ணும் உணவில் மிகவும் எச்சரிக்கை யாக இருப்பதோடு, இது போன்ற தகவல் களைப் படிப்பதோடு மறந்து விடாமல், நடைமுறையில் அன்றாடப் பழக்க வழக் கங்களை கடைப்பிடித்தல் அவசர அவசிய மாகும்!
- கி.வீரமணி
விடுதலை,7.6.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக