பக்கங்கள்

திங்கள், 27 ஜூன், 2016

மூடக்கருத்துகளை ஓட விரட்டுங்கள்!


மக்களிடையே நோய் தீர்க்கும் அரிய மனிதநேயப் பணியாற்றும் மருத்து வர்களின் மற்றொரு முக்கிய கடமை அறியாமை (Ignorance) மூடநம்பிக்கைகள் - இவைகளைப் பற்றியும் நோயாளிகளிடமும், உடன்வரும் மற்றவர்களி டையேயும், அவசியம் எடுத்துரைத்து, அவர்களது மூட நம்பிக்கைகளுக்கு ஆதாரமான பயத்தை வெளியேற்றிட உதவ வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால், வேதனைக்குரிய செய்தி மருத்துவர்கள் பலரும் கூட மூடநம்பிக்கைகளில் ஊறித்திளைப்பவர்களாக இருப்பது கொடுமையிலும் கொடுமையாகும்!
மருத்துவர் இல்லாத இடத்தில் மருத்துவம் என்ற அரிய தகவல் களஞ்சியமாக உள்ள ஒரு அருமையான நூலை இரண்டு பிரபல டாக்டர்கள் எழுதியுள்ளனர்! (இந்நூல் பற்றி நீண்ட நாளுக்கு முன்பு  வாழ்வியல் சிந்தனைகளில் கட்டுரை ஒன்றில் எழுதி யுள்ளேன்)
பிரபல சிறுநீரகத்துறை மருத்துவ நிபுணர் டாக்டர் அ. ராஜசேகரன் M.S., M.Ch., F.R.C.S., F.I.C.S., D.Sc., அவர்களும் கோவை டாக்டர் கே.இராமநாதன் M.D., F.C.C.P.அவர்களுமாக அருமையாக எழுதியுள்ளார்கள். 2010 இல் தமிழக அரசால் பரிசு பெற்ற நூல் இது (இளம் வயது மருத்துவ சிந்தனையாளர் இன்று வரலாறாக வாழ்கிறார்). அதில் 35 தவறான நம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டி அறிவுறுத்து கின்றனர். படித்த பாமரர்களிலிருந்து படிக்காத பாமரர்கள் வரை எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டிய செய்திகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.  செய்திகளை படியுங்கள்; பயத்தை விரட்டி, பகுத்தறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கைதான் மூடநம்பிக்கையை விரட்டும் மருந்து.

புரிந்து, செயலாற்றி, வாழ்வை வளப்படுத்திக் கொள்ளுங்கள்.
-விடுதலை,16.6.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக