பக்கங்கள்

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

ஜப்பானிய முதியவர்களின் சிறந்த வாழ்வியல் "இக்கிகை" (IKIGAI) (2)

ஜப்பானின் 'இக்கிகை' (Ikigai) படி முதியோர்களுடன் இளமை உணர்வுகள் வளர்ந்தும், வாழ்ந்தும் வரும் 'ஒகிமி' (ogimi) என்ற நீண்ட ஆயு ளுடன் வாழும் கிராம - நகரத் திற்குப் போகலாமா? வாருங்கள்.

அங்கே இருக்கும் 80, 90 வயது முதியவர்கள் எல்லாம் மிகவும் சுறுசுறுப்புடன் செயல் படுபவர்களே - அன்றாட வாழ் வில் காணப்படும் அதிச யத்தைக் கண்டு வியக்கலாம்.

அவர்கள் வெறும் ஜன்னல் களையும், வானத்தையும் அண்ணாந்து பார்த்துக் கொண்டு 'சும்மா' இருப்பவர்கள் அல்லர்.

அல்லது ஓய்வு பெற்றவர்கள் என்றால் நம் ஊரில் உள்ளது போல் சாய்வு நாற்காலியில் அமர்ந்து, நாளேடுகளைப் படித்து, இதழ்களைப் புரட்டிக் கொண்டிருப்பவர்களும் அல்லர்!

அவர்கள் அனைவரும் தவறாது குறிப்பிட்ட தூரம் தினமும் நடப்பவர்கள். பக்கத்திலுள்ள வர்களுடன் 'கரோக்கி' (Karaoke) செய்ப வர்கள், அதிகாலை எழுந்து விடுகின்றனர்.

காலைச் சிற்றுண்டி - லேசாக முடித்து உடன் தங்களது தோட்டங்களுக்குச் சென்று பூச்செடி, பயிர்களுடன் இருந்து, களை எடுத்தல், உரமிடுதல், முதலிய பணி களைச் செய்கின்றனர். உடலுக்கு உழைப்பு - ஓரளவு கிடைக்கும்படி பார்த்துக் கொள்கின்றனர்.

அவர்கள் 'ஜிம்' - உடற் பயிற்சி நிலையத்திற்குச் சென்றோ அல்லது கடு மையான உடற்பயிற்சி களையோ செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அன்றாடப் பணிகள் மூலம் எப்போதும் நகர்ந் தும், நடந்து கொண்டுமே இருக்கிறார்கள் மிகுந்த சுறுசுறுப்புடன். சோம்பல் அவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கி ஓடி ஒளிகிறது!

நமது உடலின் செயற்கூறுகள் (Metabolism) என்பது 30 நிமிடங்கள் - அரைமணி நேரம் - நாம் உட்கார்ந்து இருப்பதன் மூலம் 90 விழுக்காடாகக் குறைகிறது என்பதை நன்கு உணர்ந்தவர்கள் அவர்கள்.

நமது இதயத் தமனியிலிருந்து வெளியேறும் ரத்தக் கொழுப்பு (Fat) நமது தசைகளுக்குச் செல்லுகையில் அது மிகவும் மெதுவாகவே 'எரிக்கப் படுகின்றது'.

இரண்டு (2) மணி நேரம் உட்கார்ந்திருந்தால் அதன்பிறகு நமது நல்ல கொலஸ்ட்ரால் அளவு 20 விழுக்காடு குறைகிறதாம்!

5 மணித்துளிகள் எழுந்து நின்று சென்று திரும்பினால் அது பழைய அளவீட்டிற்கு உடல் கூறுகள் திரும்பி வரப் பெரிதும் உதவுகிறதாம்! மிக எளிமையான இம்முறையை நாம் ஏன் கடைப்பிடிக்கக் கூடாது?

எளிதாக செய்யலாமே! தொடர்ந்து அமர்ந்து கணினி முன்னாலோ, அல்லது மேஜை நாற்காலியிலோ அமர்ந்து படித்தோ, எழுதியோ, கோப்புகளைப் பார்ப்பதோ போன்ற பணிகளைப்புரியும் எவரும் இடையில் ஓர் அய்ந்து மணித் துளிகள் எழுந்து நின்று காலாற வீட்டிற்குள்ளோ, அலுவலகத்திற்குள்ளோ  சற்று நடந்து மீண்டும் அமர்ந்து பணி தொடரலாமே!

மிக எளிதான இந்த முறையை நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

ஏதாவது ஒரு சாக்கில் எழுந்து - சிறிது நடந்து, திரும்பவும் இருக்கைக்குச் சென்றால் இழந்ததை நாம் என்றும் திரும்பவும் பெற வாய்ப்பாகும்.

அலுவலகங்களில்கூட இடையில் இப்படி எழுவது, நடப்பது போன்ற முறைகள் தேவையான ஒன்றாகும். அதிலும் முதிய வயதுள்ளவர்களுக்கு மட்டும் தான் என்று நினைக்காமல் அனைத்து வயதினரும் இந்த சிறு '5 மணித் துளி எழுதலை'யை ஒரு பயிற்சியாகக் கொண்டால் புத்துணர்வு நம்மைப் பொலி வாக்குமே!

- தொடரும்

- விடுதலை நாளேடு, 21.12.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக