சர்க்கரை நோயாளிகள் தங்கள் உடம்பில் நாள்தோறும் உள்ள ரத்த சர்க்கரை (Blood Sugar)
அளவு, காலையில் வெறும் வயிற்றில் எழுந்தவுடன் உள்ள அளவு(Fasting) 80லிருந்து 110க்குள் இருக்க வேண்டும் என்றும், சாப்பிட்ட பின்பு, 110 முதல் 140 வரை இருப்பது நலம் Post Prandial (PP) எனவும் உள்ள அளவு அது!
இது மட்டுமே உடலின் ரத்தச் சர்க்கரை அளவை சரியாகக் கணக்காணிக்கும் முறையாகும். மூன்று மாதங்களில் அந்த சர்க்கரை அளவு எவ்வளவு இருந்தது; எப்படி இருக்கிறது என்பதைக் கண் காணித்துப் பார்த்து, அதற்கேற்ப மருந்து மாத்திரைகளையோ அல்லது இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வோர்களுக்கு டாக்டர்கள் அளவை நிர்ணயிப்பதற்கு இந்த மூன்று மாத அளவு கோல் பயன்படும் என்பது முக்கியம்.
HbA1c என்ற இந்த அளவு 3லிருந்து 6க்குள் இருந்தால் சர்க்கரை இல்லை (Good Control),, 6 முதல் 7 வரை நியாயமான கண் காணிப்புடன்கூடி அளவு (Fair Control), 7-8 மோசமான உடல் அளவு (Bad Control) என்று உலக அளவில் மருத்துவர்களால் கூறப்பட்டு கடைப் பிடிக்கப்படும் நியதியாக இருக்கிறது!
இதுபற்றி 'தமிழ் இந்து' நாளேட்டில் டாக்டர் கு.கணேசன் அவர்கள் எழுதியுள்ள ஒரு விரிவான கட்டுரை (22.3.2018 பக்கம் 8 ) வந்துள்ளது!
அதனை அப்படியே 'விடுதலை'யின் பிறிதொரு பக்கத்தில் வெளியிட்டுள்ளோம் (6ஆம் பக்கம் காண்க).
அதில் அமெரிக்க மருந்து கம்பெனி களின் பங்கும், கருத்தோட்ட தாக்கமும் தான் இப்படி அடிக்கடி ரத்த அழுத்தம் பற்றி 140/90 என்பதைக்கூட மாற்றி குறைத்து 130/80 என கூறி யுள்ளார்கள். அதுவே இரத்தச் சர்க்கரை அளவு HbA1c என்பதில் 6,7 என்பது 8 என்றால் பயமுறுத்தும் அளவுக்கும் கூறுவது பன்னாட்டு மருந்து கம்பெனி யர்களின் திட்டமிட்ட ஒரு செயல், ஏற்பாடோ என்ற விவாதங்கள் நடை பெற்று வருகின்றன!
அதில் அறவே உண்மையில்லை என்று நாம் புறந்தள்ளி விடவும் முடியாது!
தற்போது துரித உணவுகள் (Fast Foods) என்ற நுகர்வோர் கலாச்சாரத்திற்கு அடிமை யாகியுள்ள நமது இருபால் இளைஞர்கள், வீட்டில் சுகாதார முறை யில் சமைத்த உணவுகளை உண்ணாது புறந்தள்ளி, இந்த துரித உணவகங் களுக்குப் படையெடுத்து காசைச் செலவழித்து நோய்க்கு அழைப்பு விடுத்து, வெறும் நாக்கு ருசியை மய்யப்படுத்தி உண்ணுவதால், 25-30 வயது இளைஞர்கள் 'கிட்னி' - சிறுநீரகம் கெட்டுப் போகும் அளவுக்கு இவர்கள் சர்க்கரை நோயால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் சம்ப வங்கள் ஏராளம் அன்றாடச் செய்திகளாக ஏடுகளில், ஊடகங்களில் வருகின்றன. மூன்று மாத அளவு 8க்குள் இருக்கலாம் என்றால் நோயாளி உயிரிழப்புகளும்கூட அதி கரிக்கும் வாய்ப்பும் உண்டு!
ஆனால் மருத்துவ ரீதியாக பல பன்னாட்டு மருந்து தயாரிப்பாளர்களின் 'லாபி' சக்தி வாய்ந்தவைகளாக உள்ளன. அமெரிக்காவில் மட்டுமல்ல; அய்ரோப்பா கண்ட நாடுகளில்கூட இந்த உண்மை பொருந்தும்!
மூன்று மாத சர்க்கரை அளவைக் கணிக்கும்போது நோயாளிகளின் முதுமை, வயது - இவைகளுடன் இணைத்துப் பார்ப்பதே முக்கியம் என்று பொது மருத்துவ வல்லுநர் டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன் (General Physician & Diabatology அறிவுரையாளர்), பிரபல Diabetologist சர்க்கரை நோய் மருத்துவர் (ஆஸ்திரேலியாவில் இத்துறையில் படிப்பு - பயிற்சி பெற்று வந்து இப்போது சென்னையில் உள்ள) டாக்டர் நல்லபெருமாள் போன்றவர்கள் நோய் நாடி நோய் முதல் நாடிடும் மருத்துவ முறையை அறி வுறுத்துவர்.
50 வயது சர்க்கரை நோயாளிக்கும், 80-85 வயதுள்ள சர்க்கரை நோயாளிக்கும் எப்படி ஒரே அளவுகோலை HbA1c மூன்று மாத அளவுகோலை பார்ப்பது என்று கூறி இப்போது கூறும் 75-80-85 வயது சர்க்கரை 7க்குள் இருக்க வேண்டும் என்று கூற வேண்டாம்; அவர்களை பயமுறுத்தத் தேவையில்லை என்பர்!
மருந்துகள் உயிர்க் காக்கின்றன!
மருத்துவர்கள் நோயாளிகளை நன்கு குணப் படுத்துவர் ஆனால் மருந்து தயாரிப்பாளர்கள் பன் னாட்டு நிறுவனங்கள் தங்கள் பணப் பெட்டியை பதப்படுத்துகின்றன!
என்னே விசித்திரம்!
- விடுதலை நாளேடு, 23.3.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக