பக்கங்கள்

வியாழன், 25 மே, 2017

மின்னணுப் புரட்சி தரும் ‘மிரட்சி' இதோ! (2)

கைப்பேசிகளை (செல்போன்களை) தேவையானபோது மட்டுமே பயன் படுத்துவது, விபத்துக்களின்போது அவற்றைப் பயன்படுத்தி உடனே  ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவிகளைப் பெறுதல், தீப்பிடித்துக் கொண்டிருக்கும்போது தீயணைப்புத் துறையினரை அவசரமாக அழைக்கப் பயன்படுத்துவதோ அல்லது குழந் தைகளோ, மகளிரோ, வயதானவர்களோ அல்லது நாமோ, ‘திடீரென்று’ சற்றும் எதிர்பாராத துன்பத்திற்கோ, சிக்கலிலோ மாட்டிக் கொண்டால் ‘கைப்பேசி’ மிகப்பெரிய அவசர உதவியாளன்தான்; அதில் அய்யமில்லை.

தேவையில்லாதபோது, ‘அரட்டைக் கச்சேரிகளை’ நடத்திட தனி ஆவர்த் தனம் செய்யும் பலருக்கு இது ஒரு நல்ல கருவியாக மாட்டிக் கொண்டால் அவ்வளவுதான்!

கைப்பேசிகளில் - வியாபாரப் போட்டிகள் காரணமாக - செல்பி (Selfie) எடுக்க - இதுவே சிறந்தது என்று விளம்பரப்படுத்தப்படும் நிலையில், ‘செல்பி’ எடுக்கும் தொற்றுநோய், பிரதமர் மோடியில் தொடங்கி நம்மூர் குழந்தைச் செல்வங்கள்வரை பரவி யுள்ளது! எதிர்வரும் ரயிலைக் கண்டுகொள்ளாது மாளுபவர்கள், ரயில் தண்டவாளத்தில் நின்று ‘செல்பி’ எடுத்து மரணமடைந்தவர்கள், கார்- வாகனங் களில் அடிபட்டு உயிரை விட்டவர்கள் என்ற விரும்பத்தகாத மரணச் செய்திகளும் தொடருகின்றனவே!

எதற்குமே இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை நாம் அனைவரும் நினைவில் வைத்துக் கொண்டு நன்மைகளை பற்றிக்கொண்டு, தீமை களை - தீய விளைவுகள் தருபவைகளை அறிவுபூர்வமாக தவிர்த்து விடல் அவசர அவசியமாகும்!

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாக சாகி நகரங்களில் வீசப்பட்ட அணு குண்டின் நாசமும், விளைவுகளும் ஜப்பானை இன்றுவரை பாதிக்கின் றனவே! கட்டடங்கள் மீண்டும் எழுப்பிவிட்டார்கள் - மனித உயிர்களை மீட்க முடிந்ததா? அதனால் பாரம் பரியமானவர்கள் குழந்தைகள்கூட இன்றுவரை பாதிப்புக்கு ஆளாவதைத் தவிர்க்க இயலவில்லையே!

பிறகு அதை அய்.நா. போன்ற உலக நாடுகள் உணர்ந்த காரணத்தால்தான் அணுசக்தியை, ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி ஆக்கப்பூர்வ (சமாதான) அணுசக்தி பயன் ‘Atom for Peace’ என்று கண்டறிந்து மின்சாரத் தயாரிப்பு மற்றும் நலவாழ்வுக்கு - அணுசக்தியைப் பயன்படுத்திட்ட மருந்து- சிகிச்சை முறை Nuclear Medicine என்பதைக் கண்டறிந்து மாற்று ஏற்பாடாகப் பயன் படுத்தி வருகின்றனர்!

இதிலும் ஆபத்து உள்ளடக்கமாக இருக்கிறது என்பதற்காக, பழைய அனுபவப் பாடங்களைக் காண்பவருள் அணுசக்தி மின் நிலையங்களே எங்கள் உயிர்களையும், சுற்றுச்சூழலையும் பாதித்தது; வாழ்வாதாரத்தையும், ஆயு ளையும் கேள்விக்குறியாக்கி விடுமே என்ற அச்சத்தோடு ஒரு எதிர்ப்பியக் கத்தையே கட்டி நடத்தி வருகிறார்களே!

அறிவியலின் வேகம்  பல துறை களில் மனித குலத்திற்கு முன்னேற் றத்தைத்தான் ஏற்படுத்தியுள்ளது; எல்லாவற்றையும் புறந்தள்ளி பழைய கால தீவட்டி, அகல் விளக்கு யுகத்திற்குச் செல்ல முடியாது என்பது உண்மையே. ஆனாலும், எதையும் கையாளுமுன் அளவறிந்து வாழ்தல் அவசியமானது!

நவீன சாதனங்களை குழந்தைகள் குறைக்க வேண்டுமென்றால், முதலில் பெற்றோர்கள் குழந்தைகள் முன்பு அதிகநேரம் அவற்றைப் பயன்படுத்து தலைத் தவிர்ப்பது அவசியமாகும்! காரணம், பெற்றோர்களைப் பார்த்துத் தான் குழந்தைகள் கற்றுக் கொள்ளு கிறார்கள் பல விஷயங்களை - பல பழக்க வழக்கங்களை. அவர்கள்தான் குழந்தைகளுக்கு முக்கிய முதன் மையான ஆரம்ப கால வழிகாட்டிகள்;  முன்னோடி ஆசிரியர்கள்.

எனவே, அவர்கள் எப்படி குழந் தைகள் நடந்துகொள்ள வேண்டுமென நாம், குறிப்பாக பெற்றோர்கள், விரும் புகிறார்களோ அப்படியே அவர்களும் நடந்துகொள்ளுவதே அறிவுடைமை; அனுபவப் பாடம்!

அவர்கள் முன்னால் கைப்பேசி, தொலைக்காட்சி முதலியவைகளை அளவோடு பயன்படுத்தி, உடனடியாக அணைத்து வைத்துவிட்டு, அடுத்த கடமைகளைப் பார்ப்பதில் ஈடுபாடு கொண்டால், பிள்ளைகளும் புரிந்து கொள்வர்.

எதையும் எவருக்கும் போதிக்கும் முன்பு, நாம் அவ்வாறு நடந்துகொள் ளுவதுதான் அருமையான- வெற்றி கரமான கற்றுக் கொடுக்கும் கலையாகும்!

ஒன்றரை வயதுக்குட்பட்ட குழந்தை களிடம் ‘செல்போன்’ உள்ளிட்ட எலக்ட் ரானிக் சாதனங்களைக் கொடுக்கவே கூடாது. அந்த காலகட்டத்தில் குழந்தை யின் மண்டை ஓடு மிருதுவாக இருக்கும் என்பதால், எலக்ட்ரானிக் மின்காந்த அலைகள் மூளையைப் பாதிக்கும் அபாயம் உண்டு என்பதால், எச்சரிக்கை தேவை என்கிறார், மின்னணு வல்லுநர் ஒருவர். நினைவில் வைத்து இதை நடைமுறைப்படுத்துங்கள்.

-விடுதலை,25.5.17

புதன், 24 மே, 2017

உற்சாகம், உறக்கம், வாழ்க்கை அளவீடு என்ன?

வாழ்க்கையில் பலபேருக்குப் பிடிப்பில்லாமல், ஏனோதானோ என்ற அலட்சியமும் சலிப்பும் சங்கடமும் கலந்த விரக்தி நிலையிலேயே காலந் தள்ளும் தன்மை பல வெகு பேரிடம் உண்டு.

இதற்கு மூல காரணம் என்ன?

உடலும், உள்ளமும் சரியான ஒருங்கிணைப்போடு இயங்காமல் இருப்பதேயாகும்.

உடல்நலக்குறைவு, அல்லது உடல்நோய் உபாதைகள் மனதில் சலிப்பினை ஏற்படுத்தும்.

சிலர் நல்ல உடலைப் பெற்றிருந் தும், ஏனோ நல்ல உள்ளத்தைப் பெறாமல், தங்களுக்குள் உள்ள ஆற்றலை வெளிப் படுத்தி, வெற்றிகரமான வாழ்க்கையைப் பெற முடியாமல் வேதனையை அனுபவிக்கின்றனர்!

மனக்குழப்பம், ஒரு வகை தாழ்வு மனப்பான்மை; Ôஹூம்... நமக்கெங்கு இது கிடைக்கப்போகிறது? நம்மால் இது முடியாத காரியம்Õ இப்படிப்பட்ட சிலந்திவலைக்குள் மாட்டிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்தே வாழ்க்கையின் பயனை துய்க்கத் தவறிவிடுகிறார்கள்!

ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத் தின் தலைவராக இருந்த டேவிட் ஸ்டார் ஜோர்டன் கூறுகிறார்: “நீங்கள் எதைச் செய்தாலும் சரி, உற்சாகத்துடனும், துடிப்புடனும் செய்யுங்கள்”!

- எளிய இந்த அறிவுரையைப் பின்பற்றுங்கள்.

பிரபல வரலாற்றுப் பேராசிரியரான ஆர்னால்டு டாயன்பி (இவர் பெரிய தத்துவ சிந்தனையாளரும்கூட) எழுதுகிறார்: (ஒரு நூலைப்படித்தேன் - உங்களுடன் பகிர்ந்து கொள்ளு கிறேன்)

“சுவாரசியமற்ற ஒரு நிலையை உற்சாகத்தால் மட்டுமே உடைத்தெறிய முடியும். உற்சாகத்தை இரண்டு வழிகளில் தூண்டிவிடமுடியும்.”

“முதலாவது, எல்லை யற்ற கற்பனையைத் தூண்டி விடக்கூடிய உயர்ந்த சிந்தனை.”

“இரண்டாவது, அந்த உயர்ந்த சிந்தனையை நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய ஒரு சிறந்த புத்திசாலித்தனமான திட்டம்’’

எதிலும் உற்சாகத்துடன் இருப்பதால் தனிச் சிறப்பே சிறப்பு

எவரும் எதிலும் தூசியாக இருப் பதைவிட சாம்பலாக இருப்பதே மேலானது.

துடிப்பு மக்கி மடிவதைக்காட்டிலும் சுடர் விட்டு எரிந்து சாம்பலாகி விடுவதில் எவ்வளவு சிறப்பு - எண்ணிப்பாருங்கள்!

உற்சாகத்தோடு எதையும் செய் யுங்கள் துடிப்போடு இயங்குங்கள்.

துடிப்புகளை மிகைப்படுத் தாமலும், அதேநேரத்தில் குறைத்துக் கொள்ளாமலும் வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்கு வேறு ஆசானைத் தேடி அலையவேண்டியதில்லை. நமது இதய ஒலியைக் கேளுங்கள் - அந்த Ôலப்-டப்Õ எவ்வளவு சீராக அதன் பணியை அலுப்பு சலிப்பின்றி செய்துவருகிறது!

அதைப்பார்த்து, நாம் நமது கடமையைச் செய்ய கற்றுக்கொள்ள வேண்டாமா?

உற்சாகம் என்பதுகூட, கட்டுக்குள் இருந்தால் - விழுமிய பயன், நாம் விரும்பிய வண்ணம் கிட்டக்கூடும்!

அடுப்பெரிக்க நெருப்பு தேவை தான்! அதனைப் பயன் படுத்தும்போது நாம் எவ்வளவு விழிப்புடன் உள்ளோம்; அதே போன்று உற்சாகத்தைக்கூட அளவுக்கு மீறி வழிந்தோட விடக்கூடாது!

இதை ஆங்கிலத்தில் enthusiasm உற்சாகம் என்று குறிப்பிட்டாலும், அதிலும் சற்று வேகமானப் பாய்ச்சல் என்றால், அது ‘over-enthusiasm’ வரம்பு தாண்டியது. அதன் விளைவு நாம் எதிர்பார்க்கும் இலக்கையும் அடையாமல் தடுத்து தோல்விப் படுகுழியில் நம்மைத்  தள்ளிவிடும். எனவே, கட்டுப்படுத்தப்படாத உற்சாகம் பொங்கவேண்டாம்!

-விடுதலை,23.5.17

மனிதம் இல்லா மனிதர்கள் - இதோ!

ஆந்திராவில் விஜயவாடாவைச் சேர்ந்த மாதம் ஷெட்டி சிவகுமார் என்பவருக்கு 13 வயதுள்ள மகள் ‘சாய்சிறீ’ என்ற பெயரில் உண்டு. அந்தப் பெண் குழந்தை ‘எலும்பு மஜ் ஜை’  (ஙிஷீஸீமீ னீணீக்ஷீக்ஷீஷீஷ்) புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டார்.

8 ஆண்டுகளுக்கு முன்பே மகளை யும், அவரது தாயான மனைவியையும் மாதம் ஷெட்டி விலக்கி விட்டார்!

இதனால், தந்தை பெங்களூருவில்; தாயும், மகளும் விஜயவாடாவில்!

இந்த மகள் சாய்சிறீ எலும்பு மஜ்ஜை புற்றுநோய் சிகிச்சைக்கு 40 லட்சம் ரூபாய் செலவழிக்க, மகள் சாய்சிறீ பெயரில் உள்ள வீட்டை விற்க முடிவு செய்தார் தாய்.

இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித் துத் தடுத்தார் - மனிதாபிமானமில்லாத இந்த தந்தை.

உடனே ‘வாட்ஸ் அப்பில்’ சாய்சிறீ தன் தந்தைக்கு ஒரு செய்தி அனுப் பினாள்!

‘‘அப்பா நான் உயிருக்குப் போரா டிக் கொண்டிருக்கிறேன்; அம்மா என்னுடைய சிகிச்சைக்காகத் தான் வீட்டை விற்கிறார்.

உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், நீங்களே பணத்தை செலுத்தி எனது சிகிச்சைக்கான ஏற்பாட்டைச் செய் யுங்கள்! இன்றேல், என் உயிரிழப்புக்கு நீங்கள்தான் காரணமாவீர்கள்’’ என்று கண்ணீர் மல்கக் கூறினாள்!

அந்த வன்னெஞ்ச, பணத்தாசைக் காரனுக்கு மனமிரங்கவில்லை; தனது சொந்த மகளைக் காப்பாற்றி வாழ வைக்கமனிதாபிமானமும்கூட இல்லை!

இந்தக் குடும்பத் தகராறு காரணமாக வீட்டை விற்க முடியவில்லை; பெற்ற மகளின் சிகிச்சைக்கு மனமிரங்கி பணம் செலுத்தி உதவி செய்யவும் முனையாத சுயநலப் பிண்டமான, பணத்தாசை வெறியனான அந்த மனிதரின் சுயநலம் காரணமாக அந்த இளங்குருத்து மரித்துப் போனது! மரணம் அதன் கோரப் பசிக்கு இரை யாக்கிக் கொண்டது.

தந்தையின் சுயநலம், பழிவாங்கும் எண்ணம் போன்ற காரணத்தால், 13 வயது சிறுமி வாழ வேண்டிய, வளர வேண்டிய இளந்தளிர் பட்டுப்போனது! அந்தோ என்ன கொடுமை!

பணம், பாசத்தை விரட்டியது

மனம், குணத்தை அறத்தை அழித் தது.

பணம் - மனிதர்களுக்கு வேலைக் காரனாகவே இருக்கவேண்டும்; ஒரு போதும் அது எஜமானனாகி எகத்தாளம் போட்டால் இப்படிப்பட்ட இரக்கம், கருணை, அன்பு, பாசம் என்றாலே, என்னவென்று தெரியாத ஜீவனற்ற ஜடங்களாக பல நேரங்களில் பல மனிதர்கள் வாழ்கிறார்கள். இவர் களிடம் ‘மனிதம்‘ உண்டா? இவர்களை எப்பிரிவில் சேர்ப்பது? ‘மனிதம் இல்லா மனிதர்கள்’ என்ற பட்டி யலில்தான் வைக்கவேண்டும்!

இதிலிருந்து நாம் ஓர் உறுதி மொழியை ஏற்கவேண்டும்;

‘இந்தப் பட்டியலில் நானோ, என் குடும்பத்து உறுப்பினர்களோ, என் நெருங்கிய நண்பர்களோ ஒருபோதும் (மனிதம் இல்லா மனிதர்கள்) பட்டிய லில் சேரமாட்டோம்!

தொண்டறத்தின் தூய்மையை உணர்ந்து வாழ்க்கையை வசந்தமாக் கிக் கொண்டு வாழுவோம்!

பணம் என்னை வழிநடத்தாது!

நான்தான் பணத்தை வழிநடத்து வேன்!'

என்று வாழ்ந்து காட்டும் வைராக் கியத்தை மேற்கொள்ளுவோம்!

(‘தின இதழ்’ நாளேட்டில் 19.5.2017, 5 ஆம் பக்கத்தில் வந்த ஒரு செய்தியை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சிந்தனை இது!).

19.5.2017, விடுதலை

மின்னணுப் புரட்சி தரும் ‘மிரட்சி' இதோ! (1)

 

இது மின்னணு யுகம். மின்ன ணுவியலின் வியக்கத்தக்க வளர்ச்சி, அரிய பலன்களை, நோய் தீர்க்கும் விரைவு முறைகளையும், அறுவை சிகிச்சைகளில்கூட துல்லியமான இடத்தில் மட்டுமே செய்து, இரத்த இழப்பு மிகக் குறைவாக ஏற்படுவ தோடு, சிகிச்சை எளிதாகி, குணமடை வதும் குறைந்த காலத்தில் நடை பெறுகிறது!

‘டிஜிட்டல் புரட்சி’ மிகவும் அற்பு தமானது! ரோபோக்கள் மூலம் அறுவை சிகிச்சைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன!

‘சிப்ஸ்’ (Chips) என்ற ஒரு குறிப்பிட்ட சிறு கருவியை (Gadget) டையின் பின்பக்கத்திலோ, காலில் உள்ள பூட்ஸ் பாகத்திலோ இணைத்து விட்டால், நமது குடும்ப மருத்து வருக்கோ அல்லது நமக்குப் பழக்க மான மருத்துவமனைக்கோ அதுவே - ஏற்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு காரணமாக, இரத்த அழுத்தம் குறைந் தாலோ அல்லது வேறு ஏதாவது உடலில் பெரிய கவலைப்படும் மாற் றங்கள் ஏற்பட்டாலோ அது மருத்து வருக்கு தகவல் கொடுத்து, நோய் தடுப்புக்கு ஆயத்தமான ஏற்பாடுகள் செய்யச் சொல்லி அறிவுறுத்தும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன!

‘செல்போன்’ என்ற கைப்பேசி தான் எத்தகைய அறிவுப்புரட்சியை, பல் வேறு கருவிகளை கையில் கொண்டு போக வேண்டியதே இல்லை. ஒரு கைப்பேசியில் பல வித வசதியான கருவிகள் இருப்பதாக அமைக்கப் பட்டு, நாளும் அது ‘மனோ வேகத் தோடு’ போட்டியிடும் அளவுக்கு, பல கருவிகளின் தொழிற்சாலைகளையே மூடிவிடும் நிலைமை உருவாகி விட்டது!

இவை எல்லாம் பெருமைப்படத் தக்க அறிவியல் - மின்னணுவியல் யுகத்தின் அரிய சாதனைகள்தான்.

என்றாலும், நல்ல மருந்துகளை எடுத்துக்கொண்ட பிறகு சில பக்க விளைவுகள் (Side Effects) ஏற்படு கின்றனவே,  அதுபோல அவற்றை  நாம் எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளு வதைத் தவிர வேறு வழியே இல்லை!

இந்த கைப்பேசியை இளம் பிஞ்சு களுக்கும், மாணவ இளைய தலை முறைக்கும் தந்துவிடுவதால் சதா சர்வகாலமும் உடனேயே தங்களது நண்பர்களுக்குSMS என்ற குறுஞ்செய்தி - படங்கள் எடுப்பது  - உட னுக்குடன் அனுப்புவது -  காலத்தைத் தவறாகச் செலவழித்து வீணடித்தல் போன்றவை நடந்துகொண்டுள்ளன. பல நேரங்களில் குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள், எப்படி பாடங்களைப் பற்றியோ அல்லது பயனுறு தகவல் களையோ பரிமாறிக் கற்றுக் கொள் வதைவிட பெருந்தீமை - விரும்பத் தகாத விளைவு - வேறு என்ன இருக்க முடியும்?

‘‘தொடர்ந்து கைப்பேசி - மொபைல் போன் சாதனங்களைப் பயன்படுத் தினால்,  கையில் உள்ள நரம்பு, தசைகள், தசை நார்கள் பாதிக்கப்பட்டு, ‘Carpal Tunnel Syndrome’    என்ற நோய் - பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு’’ என்று வல்லுநர்கள் எச்சரிக் கிறார்கள்!

இந்த சாதனங்களை உற்று நோக்கிக் கொண்டே அதிக நேரம் இருந்தால், வலிப்பு நோய் வர வாய்ப்பு அதிக மாகும் அபாயம் உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

முன்பு வாய்ப்பாடுமூலம் மூளைக்கு - நினைவாற்றல் பயிற்சி தருவது நடைபெற்றது. ஆனால், இப்போது எல்லாம் ‘‘கால்குலேட்டர்’’ மூலம்... நல்ல விரைவு விடை கிடைக்கிறது; ஆனால், அதற்கு நாம் கொடுத்துள்ள விலையோ மிகமிக அதிகம். நினைவாற்றல் வெகுவேகமாக விடை பெற்றுக் கொள்ளுகிறதே!

நம் வீட்டுத் தொலைப்பேசி எண் நமக்கு தெரியாமல் மறந்துவிடுகிறது; காரணம், கைப்பேசியில் ஒரு பொத்தானை அழுத்தினால் உடனே தொடர்பு என்பதால் இந்நிலை!

அதிராம்பட்டணம் - பட்டுக்கோட்டையில் ஒரு இஸ்லாமிய நண்பர் - வயதானவர் எல்லா தலை வர்கள் பிறந்த நாள், முக்கிய நிகழ்வுகள் எல்லாம் எந்தெந்த தேதி என்று கேட்டால், விரல் முனையில் வைத்து, நாக்கு முனையில் வெளிப்படுத்துபவர்; விடை கூறுவார்; இவரை ‘‘டைரி’’ என்றே அழைப்பார்கள்!

இப்படிப்பட்ட அபார நினை வாற்றல் உள்ள நமது பல நண்பர்கள் பிறந்த நாள்; பல தொலைப்பேசி எண்களை உடனடியாக நினைவில் கொண்டு ‘டக்‘கென்று கூறுவர்!

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘எதையும் தொடர்ந்து பயன் படுத்தாவிட்டால் அதை நீங்கள் இழந்தவராகிறீர்கள்’ If you don’t use it; you will lose it)  நம் மூளையே அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது!

உடல் சோம்பலினும் கொடுமை - மூளைக்கு வேலை கொடுக்காத - பயிற்சிகளை புறந்தள்ளும் வாய்ப்புக் கேடான மூளைச்சோம்பல் - தவிர்க்கப்படல் வேண்டும்.

-விடுதலை,24.5.17

வியாழன், 18 மே, 2017

‘‘செவ்வாய்க் கிரகத்திற்கு வாரீகளா?’’


இனி வருங்காலத்தில் மனித குலம் பிழைக்க வேண்டுமானால் - தழைப் பது பிறகு இருக்கட்டும் - வாழ்வதற்கே, இந்தப் பிரபஞ்சமாகிய பூவுலகில் உத்திரவாதம் - உறுதி ஏதும் கிடையாது; காரணங்கள் என்னவென்று கேட்கிறீர்களா?

பிரபல இயற்பியல் துறை அறி வியல் மேதையும், ‘அதிசய மனிதரு மான’ ‘‘ஸ்டீபன் ஹாக்கிங்’’ (ஷிtமீஜீலீமீஸீ பிணீஷ்ளீவீஸீரீ) அவர்கள் வெப்ப சலனம், கூடுதலான மக்கள் தொகைப் பெருக் கம், ரசாயன மற்றும் அணு ஆயுதப் போர் அபாயம் - இவைகள்தான் நம் எதிர்கால வாழ்வு, மனித குல அழி விற்கே விரைந்து வழிவகுக்கக் கூடும் என்கிறார்!

முன்பு ‘ஸ்கைலாப்’ உடைந்து, உலகம் அழியப் போகிறது என்று கிளம்பிய புரளியைப் போன்றோ, அல்லது

‘அஷ்ட (எட்டு) கிரகங்கள் ஒன் றாய்ச் சேரப் போவதால் இந்த உலகம் அழியப் போவது உறுதி என்ற ஜோதிடர்களின் ‘கப்சா’க்களால் கலங்கி, கடைசியாக கோழிக் கறியும், ஆட்டுக்கறியும் சமைத்து விருந்தை - ஒன்றாக அமர்ந்து, ‘‘சுராபானத்தையும்‘’ ஒரு மிடா குடித்துக் கூத்தடித்துக் கும்மாளம் போட்டனர்!

(அன்றும் ‘விடுதலை’யும், திராவி டர் கழகமும் இது வெற்றுப் புரளி, நம்பாதீர்கள் என்று கூட்டம் போட்டுப் பிரச்சாரம் செய்தனர்).

நம் தலைமுறையில் வாழும் இந்த பிரிட்டிஷ் விஞ்ஞானியோ தீராத நோயால் பீடிக்கப்பட்டு பல ஆண்டு களுக்குமுன்பே இறந்து போகும் நிலையிலிருந்து மீண்டு, திருமணம் - குழந்தைகள் என்று குடும்பஸ்தராகவும், இடையறாத ஆராய்ச்சியாளராகவும், நூல்கள் எழுதுபவராகவும் உயர்ந்தவர்.

அவர் கூறுவது அறிவியல் அடிப்படையில் தான் - ஊகமோ, விழைவோ அல்ல!

எதிர்காலத்தில் எப்படி எப்படி யெல்லாம் நடைபெறக்கூடும் என்ப தால், அத்தகைய சிந்தனைகளில் உந்தப்பட்டவைகளாக  அவை அமை கின்றன!

செவ்வாய்க் கிரகம்தான் மனிதர்கள் வசிக்கத் தகுதி வாய்ந்த, பூமிக்கு அருகில் உள்ள கிரகமாக இருக்கும் என்கிறார்!

செவ்வாய் அன்று தொடங்கிய நம் நாட்டு ‘ராக்கெட்’ விண்வெளியில் ஓராண்டு படைத்து செவ்வாய்க்கிரகம் சென்று மீண்டதே! இன்னமுமா ‘‘செவ்வாய் தோஷ’’ பயம் உங்களை உலுக்குவது? மகாமகா வெட்கக்கேடு அல்லவா இது!

எலன் மஸ்க் (Elon Musk) என்ற பிரபல அமெரிக்க தொழில் முனைவர் ஒருவர் செவ்வாயில் குடியேறலாம். 2024 இல் (இன்னும் 7 ஆண்டுகளில்...!) இது சாத்தியம் - பயணங்கள் தொடங் கக்கூடும்!

முதல் மனிதப் பயணம் அவ்வாண் டில் முடியும் - அங்கே போய் இறங்க லாம்.

‘‘Interplanetary Transport System  - கோள் விட்டு கோள் போகும் பயண வாகனங்கள் spaceship இல் பயணக் கப்பல்கள் அமைக்கப்பட்டு அழைத் துச் செல்லப்படுவார்கள் என்று எலன் கூறுகிறார்!

10 பில்லியன் டாலர் ஒருவருக்கு செலவாகும் என்கிறார். (அதாவது 10 ஆயிரம் கோடி டாலர்- ரூபாயில் பெருக்கி மயக்கமடையாதீர்கள் - 60,000 கோடி ரூபாய்).

திரைப்படங்கள் இதற்கு முன் னோடிகளாக அமைந்துள்ளன - கற் பனையால்.

இன்றோ விஞ்ஞானம் அதை சாத்தியமாக்குகிறது!

இந்நிலையில், நம் நாட்டில் ‘‘புனித கங்கை’’யை தூய்மைப்படுத்தும் திட் டத்திற்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கிறார்கள்.

கங்கை ‘‘புனிதம்‘’ (Holy) என்றால், எதற்காக அதனை ‘‘சுத்தப்படுத்த வேண்டும்?''

- புரியாத கேள்வி - விடையும் கிடைக்காது - நம்புங்கள்!
-விடுதலை,18.5.17

வெள்ளி, 12 மே, 2017

ஜப்பான் நாட்டின் ஒரு விசித்திரத் துறவு ‘‘ஜோகட்சூ’’ - நீராவி மனிதர்கள்!




கடும் உழைப்பிற்கும், தன்னடகத் திற்கும், மெல்லப் பேசுவதற்கும் பெயர் போன நாடு ஜப்பான்; எத்தனையோ இயற்கை உபாதைகள் - இடையூறுகள் - எரிமலை கக்குவது - பூகம்பம் - ஆழிப்பேரலையான சுனாமி - இவை களையும் எதிர்கொண்டு வாழும் மக்களாகிய ஜப்பானியர்களைப்பற்றி, அங்கு சென்று ஏறத்தாழ 9 ஆண்டு களாக வாழ்ந்து, அவர்களோடு கலந்து அவர்தம் நம்பிக்கையைப் பெற்ற இரண்டு பிரெஞ்ச் எழுத்தாளர்களான வாழ்விணையர்கள் ஒரு அருமையான நூல் எழுதியுள்ளனர். அவர்கள் ஒளிப்படக் கலைஞர்களும்கூட!

லேனா மாகெர் (Lena Mauger), ஸ்டீபென் ரெமேல் (Stephane Remael)

என்ற அந்த இருவரும் எழுதி யுள்ள புத்தகத்தின் பெயர் ‘‘மறைந்து கொண்டவர்கள் - நீராவியான மனி (‘‘The Vanished - The Evaporated People of Japan in Stones and Photographs’’)  என்பதே அதன் தலைப்பு.

அதிலுள்ள சுவையான பல்வேறு தகவல்கள் எவ்வளவு மான உணர்வு படைத்த மக்களாக அவர்கள் இருக் கிறார்கள்;

அவர்களது ‘துறவு’ எப்படிப்பட்ட விசித்திரமான மறைவு  வாழ்க்கையாக உள்ளது என்பதை அந்தப் புத்தகம் கூறுகிறது!

வேலையிழந்து அவமானத் திற்குள்ளானோர், காதலில் தோல் வியுற்றோர், கடனாளியாகி மீள முடியாது தவித்தோர் - இப்படிப்பட்ட பல ஜப்பானிய மக்கள் தாங்கள் தற்கொலை செய்துகொள்ளாமல், காணாமற்போய் தங்கள் அடை யாளத்தையே, எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டே வாழுகிறார்கள்!

இவர்கள் ஜப்பானிய மொழியில் ‘‘ஜோகட்சூ’’ (‘‘Johatsu’’)

அல்லது ‘‘நீராவியான மக்கள்’’ என்று குறிப் பிடப்படுகின்றனர்!

இவர்களில் பலரும் தற்கொலை செய்துகொள்வது கிடையாது.

அதிகமாக ஓவர் டைம் வேலை பார்த்தவர்கள் பத்தாயிரம் பேர் என்றால், அவர்களில் 20 விழுக் காட்டினர் - அதனால் மனமுடைந்து (அவர்கள் மாதத்தில் 80 மணி நேரம் அதிக வேலை செய்து) தற்கொலை செய்துகொண்டவர்கள் ஆவார்கள்.

இதற்கு ஜப்பானிய மொழியில் ‘கரோஷி’ (‘Karoshi’) என்று பெயர் வைத்துள்ளார்கள்! ஜப்பானில் கூடுதல் நேர வேலைக்கு ஊக்கத்தொகை தருகிறார்கள் என்றாலும், அவர்களது இழக்கும் இன்பத்திற்கும், ஓய்வு - இளைப்பாறுதலுக்கும் அது சரியான ஈடாகாது! எனவேதான், சிலர் ‘கரோஷி’களாகி மனமுடைந்து விரக் தியில் ‘தற்கொலைஞர்கள்’ ஆகி விடும் பரிதாப நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்!

ஜப்பானின் பொது சர்வதேச ஒலிபரப்பான வானொலி இதுமாதிரி ஆனவர்கள்பற்றிய செய்திகளை ஒலிபரப்பினாலும்கூட, அவர்கள் திரும்புவதும், கண்டுபிடித்து மீண்டும் சேருவதும் எளிதாக இல்லை அங்கே!

ஜப்பானிய சட்டப்படி இது அனு மதிக்கப்பட்ட அவரவர் தம் தனிப்பட்ட ரகசியக் காப்பு உரிமையும்கூட. எனவே, குற்றப் பின்னணியிருந்தால் ஒழிய அவர்களை அரசோ, காவல் துறையோ ஒன்றும் செய்துவிட முடியாது!

இப்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சம் பேர் (1,00,000) தலைமறைவாகி, ‘‘நீராவி மனிதர் களாகி’’  வாழ்க்கையை அவர்களுக்குப் பிடித்த சுதந்தர வாழ்க்கையாக வாழ்ந்து காலந்தள்ளுகின்றனர்!

ஓய்வுப்பற்றி கவலைப்படாது ‘கரோஷி’ நிலைக்கு அம்மக்கள் செல்லாமல் இருக்க, ஜப்பானிய அலுவலகங்களில் தற்போது வெள் ளிக்கிழமைகளில்கூட வெகுக் குறைந்த நேரமே பணியாற்றி வெளி யேறிட அனுமதிக்கின்றனர்!

(நம் நாட்டில் வெள்ளிக்கிழமை களில் பல அலுவலகங்களில் சரியான பதிலேகூட கிடைப்பதில்லை என்பது நாம் கண்ட யதார்த்த அனுபவம் அல்லவா?)

ஜப்பானில் இப்படி ஒரு விசித்திர துறவு

ஆண்டுதோறும் தொடரும் அவ லமான அம்சமாகவே உள்ளது!

பாதிக்கப்பட்டோர் (உறவினர்) பழகிக் கொண்டு விட்டனர்!

- வேறு என்ன செய்வது?

-விடுதலை,3.5.17

நட்பின் வலிமையும், ‘‘வலி’’யும்! (2)

நட்பின் வலிமை சிறப்பானதுதான்; ஆனால், அதே நட்பு கூட நமக்குப் பல நேரங்களில் வலியை - தீராத வலியை உருவாக்கி, மன உளைச்சலைத் தந்து விடுகிறதே!

நாம் அந்த நண்பரை - நட்புறவைப் புரிந்து கொண்ட அளவு அவர் நம்மைப் புரிந்துகொள்ளாமல் பிழைபட உணர்ந்து, பெருத்த பள்ளத்தை நட்பில் உருவாக்கி அவரும் தனிமைப்படுத்தப்பட்டு பிரிந்து வாழும் அல்லது துறந்த அல்லது இறந்த நட்பாக மாறி விடுகிறதே என்று எண்ணுகிற போதுதான் வள்ளுவரின் ‘நட்பு ஆராய்தல்’ அதிகாரம் நமக்குத் தக்க விடையைத் தருகிறது!

‘‘நாடாது நட்டலின் கேடுஇல்லை நட்பின்
வீடுஇல்லை நட்புஆள் பவர்க்கு (குறள் 791)

‘‘நட்பு உடையவர்களிடம் நட்பு செய்துகொண்ட பின், அதனை விட்டு விடுதல் என்பது ஒருவருக்கு இயலாது; ஆதலால் முன்கூட்டியே ஆராயாது நட்புச் செய்தல் என்பது கூடாது. அப்படி செய்தால், அதைவிடக் கேடு பயப்பது வேறொன்றுமில்லை.’’

இந்த அதிகாரம் நட்புக்கான ‘எச்சரிக்கை ஒன்று’ என்று நம்மை ஆயத்தப்படுத்தும் அறிவுரை பொதிந்த பாடம் என்றால் மிகையல்ல.
மற்றொரு குறளும் சுட்டிக்காட்டப்படல் வேண்டும்.

‘‘குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்துயாக்க நட்பு (குறள் 793)

‘‘ஒருவர், பிறருடைய சிறந்த பண்பையும், உயர்ந்த குடிப்பிறப்பையும் (பண்பால், பிறப்பால் அல்ல), குற்றங்குறைகளின் தன்மையையும், தரங்குறையாத சுற்றத்தாரின் பாங்கினையும் நன்கு ஆராய்ந்து அறிந்த பிறகே, அவரோடு தக்க முறையில் நட்பு கொள்ளவேண்டும்.’’

இதில் இன்னொரு கடும் எச்சரிக்கையாக இதற்கு முதலில் உள்ள குறளில் அதாவது (792 இல்) கூறப் பட்டுள்ளது.

தவறான நட்புத் தேர்வு எந்த அளவுக்குச் செல்லும் தெரியுமா?

சாவிற்கும்கூட காரணமாக அமைந்துவிடுமாம்! எத்தகைய அனுபவப் பிழிவுள்ள அறிவுரை! அன் றாடச் செய்திகள் இதற்கு எடுத்துக்காட்டு அல்லவா?

ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான்கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும் (குறள் 792)

‘‘பலகாலும், பல முறைகளிலும் ஆராய்ந்து மீண்டும் ஆராய்ந்தும் (சலித்தும், புடைத்தும், வடிகட் டியும்) பார்த்து நட்பு கொள்ளாதவனின் நட்பு, முடிவில், அவன்தானே சாவதற்குக் காரணமான துன்பத்தினையும் உண்டாக்கி விடும்.’’

- சரி எப்படி சலித்து, புடைத்து, வடிகட்டி நல்ல நட்புறவைத் தேடுவது? அதற்கும் குறள் ஆசான் வழிமுறை - விடை கூறத் தயங்கவில்லையே!

‘‘அழச் சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல் (குறள் 795)

‘‘முறையல்லாத செயல்களை ஒருவர் செய்ய முற்படும்போது, அவர் அழும்படியாக அவருக்கு அறிவுரை கூறியும் (தன் தவறுக்குத் தானே வருந்தி அழும் அளவுக்கு நயம்பட உரைத்தும்), மீறிச் செய்தால், அவர் மீண்டும் செய்யாதபடி அவரைக் கண்டித்துரைத்தும், உயர்ந்தோர் கொள்ளும் வழக்கு இன்னதென்று உணர்ந்து, அதனை அறிவிக்க வல்லாருடைய நட்பை ஆராய்ந்து அறிந்த பிறகு, ஒருவன் பெற்றுக் கொள்ளவேண்டும்.’’

இதனைப் பின்பற்றாமல் பல்வேறு துன்பம், தொல்லை,  இழப்பு, அவதூறு, அவமானம் - இவை களைப் பெற்ற அனுபவம் என் வாழ்விலும் உண்டு; உங்கள் வாழ்விலும் உண்டு. ஏன்? அனைவரது வாழ்வில் ஒரு காலகட்டத்தில் ஏற்பட்டே இருக்கும் - இல்லையா?

-விடுதலை,12.5.17