ஜப்பானில் வாழும் 100 வயது தாண்டிய அல்லது தாண்டும் முதியவர்கள் குறிப்பாக 'ஒக்கிவானா' தீவில் வாழும் சுறுசுறுப்பும் இளமை உணர்வும் ததும்பும் முதியவர்கள் ஒருவருக்கொருவர் கலந்து பேசி மகிழ்வுடன் தமது அன்றாடப் பொழுதை இனிதே கழிக் கிறார்கள்; அவர்கள் முதுமையை ஒரு சுமை யாகக் கருதுவதில்லை; மாறாக சுகமாகவே எண்ணுகிறார்கள்!
ஜப்பானிய தத்துவங்களில் 'ஜென்' புத்த பிரிவின் கொள்கை தத்துவங்களில் ஒன்று எளிமை.
தந்தை பெரியார் போல், அன்னை மணியம்மையார் போல் ஒரு சிறு பைக்குள் அவரது உடை பணப்பை முதலிய சகலவும் அடக்கம். ஒரு சேலை உடுத்தியிருப்பது - மாற்றுக்கு ஒன்று! அவ்வப்போது துவைத்து அன்றாடம் பயன்படுத்துவார்கள்.
இந்த எளிமையில் இருக்கும் 'கனமற்ற' வாழ்வு - லேசான - லகுவான வாழ்வின் மன நிறைவு வேறு எதிலும் கிடைக்காதே!
சிலர் எளிமையாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்கு 'மிகவும் செலவு' செய்கின்றனர்! அத்தகைய எளிமை. போலித்தனமானது மட்டுமல்ல; விளம்பரத்தனமானதும்கூட!
இன்னும் சில முதியவர்கள் 25 நிமிடங்கள், பணியில் 5 மணித்துளிகள் இடைவேளை, ஓய்வு நேரம் எனப் பகிர்ந்து பக்குவமாக தங்கள் 'பேட்டரிகளை ரிசார்ஜ்' செய்து கொள்கின்றனர்! அந்தப் படிக்குக்கூட இல்லாமல் 50 நிமிடங்கள் பணி; 10 நிமிடம் சிறு ஓய்வு என்றுகூட நாம் நம் வசதிக்கேற்ப, பகுத்துக் கொள்ளலாம்!
எதைச் செய்தாலும் அப்பணியிலேயே முழு கவனஞ் செலுத்திடவும் அர்ப்பணிப்பு மிகவும் சிறந்ததாகவும் (Mindfulness) அமையும்.
உணவு உண்ணும்போது உணவின் சுவையில் மட்டுமே முழு கவனம் - உள்ளத்தைச் செலுத்துதல்; மற்றயாவினும் நம்மனக் கண்முன் மறைந்து விடல் வேண்டும்! (Practical Mindfulness)
அதே போல் எழுதும்போது, வேறு கவனம் வரவே கூடாது. என்பழக்கம் எழுதத் துவங்கிய நிலையில் என்னையே மறந்து விடுவேன்; அக்கம் பக்கம் என்ன நடந்தாலும் எனக்குத் தெரியாது. என்னை அது பாதிப்பதில்லை; காரணம் நான் அதில் மூழ்கி முத்துக்களைத் தேடுபவன் ஆவேன்.
வில்லில் நாணேற்றியவனின் குறி இலக்கை நோக்கி மட்டும் இருக்க வேண்டும் என்பது எப்படி ஒரு போர் வீரனுக்கு முக்கியமோ, அதுபோல எப்பணியில் எந்த நேரத்தில் எவர் ஈடுபட்டாலும் எதுபற்றியும் சிந்திப்பதில்லை; சிந்திக்க வேண்டிய திசை திருப்பல்களும்கூடாது!
அடுத்து,
கவலை (Worry) என்பதை அறவே ஒதுக்கி விட்டு, மகிழ்ச்சியுடன் கலகலப்பாக ஒருவருடன் ஒருவர் கலந்து பேசி, எல்லையற்ற இன்பத்தை ஈட்டுபவர்களாக இருக்க வேண்டும்.
பிரச்சினைகள் என்று வரும்போது, அவை களைத் தீர்ப்பது எப்படி என்பதுபற்றி பகுத் தறிவுக்கு வேலை கொடுத்து யோசிக்க வேண் டுமே தவிர, கவலைப்பட்டு கன்னத்தில் கை வைத்து, தலையைத் தொங்கப் போட்டு, "அய்யோ என்ன செய்வேன் இனி?" என்ற புலம்பல் தேவையேயில்லை!
மனக் கவலையால் தீர்க்கும் பிரச்சினைகள் எதுவும் இல்லை; மாறாக மனக்கவலையால் பிரச்சினை தீராத தலைவலியும், செரிமானக் கோளாறும்தான் மிச்சமாகும்! புரிந்து கொள் ளுங்கள்.
கூட்டுக் குடும்பங்களில்கூட மற்றவர்களுடன் கலகலப்புடன் பேசி சிரித்து, மகிழ்வதே சிறந்த வழி; மாறாக நடந்தால் அது மனக்கவலையை அவர்களுக்கு உச்சத்தில் வைக்கும். இது ஒருவகை பொறாமைத் தீயின் பொல்லாத வடிவம் ஆகும். அதைத் தவிர்ப்பது அவசியம்.
(நாளையும் தொடரும்)
- விடுதலை நாளேடு, 30.12.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக