பக்கங்கள்

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

ஜப்பானிய முதியவர்களின் சிறந்த வாழ்வியல் "இக்கிகை" (IKIGAI) (2)

ஜப்பானின் 'இக்கிகை' (Ikigai) படி முதியோர்களுடன் இளமை உணர்வுகள் வளர்ந்தும், வாழ்ந்தும் வரும் 'ஒகிமி' (ogimi) என்ற நீண்ட ஆயு ளுடன் வாழும் கிராம - நகரத் திற்குப் போகலாமா? வாருங்கள்.

அங்கே இருக்கும் 80, 90 வயது முதியவர்கள் எல்லாம் மிகவும் சுறுசுறுப்புடன் செயல் படுபவர்களே - அன்றாட வாழ் வில் காணப்படும் அதிச யத்தைக் கண்டு வியக்கலாம்.

அவர்கள் வெறும் ஜன்னல் களையும், வானத்தையும் அண்ணாந்து பார்த்துக் கொண்டு 'சும்மா' இருப்பவர்கள் அல்லர்.

அல்லது ஓய்வு பெற்றவர்கள் என்றால் நம் ஊரில் உள்ளது போல் சாய்வு நாற்காலியில் அமர்ந்து, நாளேடுகளைப் படித்து, இதழ்களைப் புரட்டிக் கொண்டிருப்பவர்களும் அல்லர்!

அவர்கள் அனைவரும் தவறாது குறிப்பிட்ட தூரம் தினமும் நடப்பவர்கள். பக்கத்திலுள்ள வர்களுடன் 'கரோக்கி' (Karaoke) செய்ப வர்கள், அதிகாலை எழுந்து விடுகின்றனர்.

காலைச் சிற்றுண்டி - லேசாக முடித்து உடன் தங்களது தோட்டங்களுக்குச் சென்று பூச்செடி, பயிர்களுடன் இருந்து, களை எடுத்தல், உரமிடுதல், முதலிய பணி களைச் செய்கின்றனர். உடலுக்கு உழைப்பு - ஓரளவு கிடைக்கும்படி பார்த்துக் கொள்கின்றனர்.

அவர்கள் 'ஜிம்' - உடற் பயிற்சி நிலையத்திற்குச் சென்றோ அல்லது கடு மையான உடற்பயிற்சி களையோ செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அன்றாடப் பணிகள் மூலம் எப்போதும் நகர்ந் தும், நடந்து கொண்டுமே இருக்கிறார்கள் மிகுந்த சுறுசுறுப்புடன். சோம்பல் அவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கி ஓடி ஒளிகிறது!

நமது உடலின் செயற்கூறுகள் (Metabolism) என்பது 30 நிமிடங்கள் - அரைமணி நேரம் - நாம் உட்கார்ந்து இருப்பதன் மூலம் 90 விழுக்காடாகக் குறைகிறது என்பதை நன்கு உணர்ந்தவர்கள் அவர்கள்.

நமது இதயத் தமனியிலிருந்து வெளியேறும் ரத்தக் கொழுப்பு (Fat) நமது தசைகளுக்குச் செல்லுகையில் அது மிகவும் மெதுவாகவே 'எரிக்கப் படுகின்றது'.

இரண்டு (2) மணி நேரம் உட்கார்ந்திருந்தால் அதன்பிறகு நமது நல்ல கொலஸ்ட்ரால் அளவு 20 விழுக்காடு குறைகிறதாம்!

5 மணித்துளிகள் எழுந்து நின்று சென்று திரும்பினால் அது பழைய அளவீட்டிற்கு உடல் கூறுகள் திரும்பி வரப் பெரிதும் உதவுகிறதாம்! மிக எளிமையான இம்முறையை நாம் ஏன் கடைப்பிடிக்கக் கூடாது?

எளிதாக செய்யலாமே! தொடர்ந்து அமர்ந்து கணினி முன்னாலோ, அல்லது மேஜை நாற்காலியிலோ அமர்ந்து படித்தோ, எழுதியோ, கோப்புகளைப் பார்ப்பதோ போன்ற பணிகளைப்புரியும் எவரும் இடையில் ஓர் அய்ந்து மணித் துளிகள் எழுந்து நின்று காலாற வீட்டிற்குள்ளோ, அலுவலகத்திற்குள்ளோ  சற்று நடந்து மீண்டும் அமர்ந்து பணி தொடரலாமே!

மிக எளிதான இந்த முறையை நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

ஏதாவது ஒரு சாக்கில் எழுந்து - சிறிது நடந்து, திரும்பவும் இருக்கைக்குச் சென்றால் இழந்ததை நாம் என்றும் திரும்பவும் பெற வாய்ப்பாகும்.

அலுவலகங்களில்கூட இடையில் இப்படி எழுவது, நடப்பது போன்ற முறைகள் தேவையான ஒன்றாகும். அதிலும் முதிய வயதுள்ளவர்களுக்கு மட்டும் தான் என்று நினைக்காமல் அனைத்து வயதினரும் இந்த சிறு '5 மணித் துளி எழுதலை'யை ஒரு பயிற்சியாகக் கொண்டால் புத்துணர்வு நம்மைப் பொலி வாக்குமே!

- தொடரும்

- விடுதலை நாளேடு, 21.12.19

ஜப்பானிய முதியவர்களின் சிறந்த வாழ்வியல் "இக்கிகை" (IKIGAI)

அண்மையில் சிங்கப்பூரில் கிடைத்த அருமையான இளைப்பாறுதலில், முக்கிய புத்தகக் கடையில் கண்டெடுத்த ஒரு அறிவு விளக்குதான் IKIGAI - 'இக்கிகை' என்ற ஜப்பானிய முதியவர்களின் வாழ்க்கை முறை பற்றிய அரிய விளக்கம் தரும் ஓர் அருமையான நூல்!

முதியவர்கள் மட்டுமல்ல - இளைஞர்களும், நடுத்தர வயதுக்காரர்களும்கூட படித்துப் பயன் பெற்று வாழ்க்கையின் இறுதிக் காலத்தை வளப்படுத்திக் கொள்ளப் பெரிதும் உதவக் கூடிய கையேடு இந்நூல் என்று சொல்லுவது மிகை அல்ல...!

ஹெக்டர் கார்சியா (Hector Garcia) அவர்களும், பிரான்சிஸ்க் மிராலஸ்(Francesc Miralles) என்பவரும் - ஆக இந்த இருவரும் மிகச் சிறப்பாக ஜப்பானிய முதியவர்களின் வாழ்க்கையை ஆய்வு செய்து இந்நூலை - பலரையும் பேட்டி கண்டும் - பல்வேறு நிகழ்வுகள்பற்றியும் தொகுத்து சுவைபடத் தகவல்களைத் திரட்டித் தந்துள்ளனர்.

(இதுபற்றி முதியவர்களுக்குப் பெரிதும் பயன்படும் வகையில் ஒரு சிறப்புச் சொற் பொழிவினை நிகழ்த்திடவும் திட்டமிட் டுள்ளேன்).

நீண்டகாலம் மகிழ்ச்சியுடன் வாழுவது எப்படி என்பதைப்பற்றிய ஜப்பானிய "ரகசியம்" பற்றி விளக்குகிறது. இந்நூல்!

ஆங்கில மொழியாக்கத்தை ஹீத்தர் கிளரி (Heather Cleary) அவர்கள் செய்துள்ளார்கள்.

"எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பதுதான் உங்களை நூற்றாண்டுகளுக்குமேல் வாழ வைக்கும் அரு மருந்து" என்பது ஓர் ஜப்பானிய பழமொழியாகும்!

நமது வாழ்க்கையின் பொருள் என்ன? வாழ்வின் குறிக்கோள்தான் என்ன? - இப்படிக் கேட்டு விடை கண்டு வாழுவதே ஜப்பானிய முதுகுடி மக்களின் "இக்கிகை" ஆகும்!

ஜப்பானில் ஒக்கினவா(OKinawa) என்ற ஒரு தீவு உள்ளது; அதில் வாழுபவர்கள் பெரிதும் 100 வயதைத் தாண்டிய முதியவர்களே!

அங்கு  வாழும் 1,00,000 குடி மக்களில் 24.55 (சதவிகிதம்) மக்கள் (100ல்) 100  வயது தாண்டிய - உலகத்தின் சராசரி முதுமையைத் தாண்டிய வர்களே!

எப்படி மகிழ்ச்சியுடன் முதுமையில் சுறு சுறுப்புடன் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்பதற்கு சில முக்கிய அம்சங்களாக அளவான - மிதமான உணவு - சத்துணவு - எளிய வாழ்க்கை ஆகியன அடிப்படையாக அமைந்துள்ளன.

கிரீன் டீ (Green Tea) உட்பட  எளிய உணவு முறை, எளிய உடற்பயிற்சி முதலியன அந்த வாழ்வின் திறவுகோல்! இவற்றால்  அயர்வின்றி சமூக வாழ்க்கையை கலகலப்புடன், சுறுசுறுப்புடன், சோம்பலின்றி அன்றாட வாழ்க்கையினை அமைத்துக் கொள்கின்றனர்.

'ஒகிமி'(Ogikmi) என்ற கிராமப்புற நகர் ஒன்று பற்றியும் இவர்கள் விளக்குவதோடு, அங்குள்ள பலரும் அதற்கு ஒரு புனைப் பெயரும் தந்துள்ளனர். 'நீண்ட ஆயுள்தரும் கிராமம்' என்றே அதற்குப் பெயர்.

இந்த முதியவர்கள் உண்ணும் உணவோடு 'ஷீக்கு வாசா' "ShikuWasa" என்ற எலும்மிச்சை பழம் போன்றது - மிகப் பெரிய அளவில் உடல் நலத்திற்கு உதவக் கூடிய பழம் இது! இதன் சாற்றைக் கூட - மிகவும் புளிப்பும் கலந்து இருக்குமாமாம்! அதில் தண்ணீர் கலந்தும் சாப்பிடுகிறார்களாம்!

அடுத்து நாளை பல தகவல்கள்.

(சந்திப்போம்)

 - விடுதலை நாளேடு, 20.12.19

திங்கள், 9 டிசம்பர், 2019

வாழ்வியல் சிந்தனைகள்...

முதல் பாகம் ஈகையால் வரும் புகழையும், பகிர்ந்துண்ணு வதால் பெறும் பயன்களையும், கோபத்தால் விளையும் பேராபத்தையும், அன்றாடச் சிக்கல்களைத் தீர்க்கும் வழி வகைகளையும், மருந்துகளால் வரும் தீங்குகளையும், அறி வியல் சிந்தனைகளால் நிகழும் அதிசயங்களையும் கூறிடும் அரிய களஞ்சியமாகும்.

இரண்டாம் பாகம் முதிர்ச்சியின் இலக்கணத்தையும், புகைப் பழக்கத்தால் வரும் கேடுகளையும், குழந்தை வளர்ப்பு முறைகளையும், கூடி வாழும் கோட்பாடுகளையும், சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்திகளையும், மருந்துக்கு மாற்றான மாமருந்தையும், நயத்தக்க நாகரிகத்தை யும், பொல்லாத நோய் பற்றிச் சொல்லாத உண்மைகளையும் கொண்ட அரிய களஞ்சியமாகும்.

மூன்றாம் பாகம் அறிவியல் கொடையையும், மரங்களால் மலர்ந்த மனிதத்தையும், சீனத்துப் பெரியாரின் சீலங்களையும், அன்பெனும் பிடியுள் அகப்படும் மாமலையையும், பிண மேடையாகும் மணமேடையைத் தவிர்க்கச் சில யோசனை களையும், மனத்தின் செயல்தான் எல்லாமென்பதையும் உணர்த்திடும் உயரிய நூல்.

நான்காம் பாகம் அறியாமையைப் போக்கும் முறைகளும், மன அழுத்தத்திற்கான மாற்றுப் பாதையும், சிரிப்பால் வரும் பயன்களும், மருத்துவப் பரிசோதனையின் அவசியமும், முதுமை உணர்த்தும் எச்சரிக்கைகளும், பண்பால் மலரும் பாசங்களும், அறிவார்ந்தவர்களின் அடக்கங்களும், உள் ளத்தை உருக்கும் நோயை மாய்க்கும் முறைகளும் கூறப் பட்டுள்ளன.

அய்ந்தாம் பாகம் உயர்ந்த மனிதராக உன்னத வழிகளையும், சோதிடத்தை வெல்லும் மனோதிடத்தையும், தற்கொலைச் சிந்தனையைத் தவிர்க்கும் முறைகளையும், சில நேரங்களில் சில மனிதர்களையும் பற்றி எடுத்துரைக்கிறது.

ஆறாம் பாகம் தொலைக்காட்சியின் தொல்லைகளைத் தவிர்க்கச் சில யோசனைகளையும், ஆசிரியர் - மாணவர் களின் உறவுப் பாலத்தையும், வளர் இளம் பருவத்தில் எழும் சிக்கல்களுக்குத் தீர்வுகளையும், இதயம் காக்கும் முறை களையும், நாளும் சிந்திக்க நல்ல வழிகளையும், நல்வாழ்வுக்கு உரியவைகளையும்  கூறுகிறது.

ஏழாம் பாகம் நடைப்பயிற்சியின் லாபங்களைப் பற்றியும், காலை உணவே நமது காவலனாக உள்ளதை விளக்கியும், தூக்கம் என்பது எவ்வாறு மருந்தாக விளங்குகிறது என்பதை யும் விளக்குகிறது. மற்றும், அண்ணா அவர்களைப்பற்றி அரிய தகவல்களைக் கொண்டுள்ள சில நூல்களைப் பற்றி யும், கிரேக்கத் தத்துவ ஞானியான சாக்ரட்டீஸ் அவர்களைப் பற்றிய தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேற்கண்ட ஏழு தொகுதிகளும் ஏராளமான பதிப்புகள் வெளிவந்து சாதனை படைத்து வருகின்றன. தொடர்ந்து ஆதரவளிக்கும் வாசக பெருமக்களுக்குப் பதிப்பகத்தாரின் நன்றிகள்!

எட்டாம் பாகம் மாரடைப்பு வருமுன் காக்க எளிய வழியைப் பற்றியும், உண்டபின் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் பலன் பற்றியும், ஓய்வறியா உழைப்பாளியாய் நம் உடலில் இயங்கும் இதயத்தைக் காக்கும் வழிகளைப் பற்றியும் குறிப் பிடப்பட்டுள்ளன. மற்றும், சிங்கப்பூர் புத்தக விழா உள்ளிட்ட தகவல்களும், கன்பூசியஸ், அலெக்சாண்டர், அரிஸ்டாட்டில், எழுத்தாளர் சின்னக்குத்தூசி ஆகியோர் பற்றிய அரிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

ஒன்பதாம் பாகம் புதுமையான பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. தேனீர் மற்றும் கிரீன் டீ போன்ற உணவுகளின் நன்மைகள் குறித்தும், சுறுசுறுப்புடன் இருக்க உதவும் உணவு வகைகள் குறித்தும் ஏராளமான கட்டுரைகள் இடம் பெற்றுள் ளன. மற்றும் சிக்கனம், தொண்டறம், தாயன்பின் தனித் தன்மை, காலத்தின் முக்கியத்துவம் போன்ற வெற்றிக்கு வழிகாட்டும் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. மேலும் புரட்சிக் கவிஞர், பெருஞ்சித்திரனார், கலைவாணர் என்.எஸ்.கே., மருத்துவப் புரட்சிக்கு வித்திட்ட கருப்பினத் தாய் ஹன்ரிட்டாலாக்ஸ், கடமை வீரர் மனோகரன் உள்ளிட்ட வர்களைப் பற்றிய அரிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

பத்தாம் பாகம் ஏராளமான கருத்துப் பதிவுகளைக் கொண்ட தாக வெளிவருகிறது. இதில், கடமை தவறாது நமக்குப் பாடமாக விளங்கும் மறைந்த ஓட்டுநர்கள் சக்திவேல், சிவக்குமார் பற்றி குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. காலத்தின் அருமையை உணர்த்தும் கட்டுரைகளும், நீரிழிவு பற்றிய புதிய செய்திகளும் விவரிக்கப்பட்டுள்ளன. நம் உடலைப் பாதுகாக்கும் உணவு முறைகள் பற்றிய செய்திகள் ஏராளம் இடம் பெற்றுள்ளன.

பதினொன்றாம் பாகம் நட்பு, மகிழ்ச்சி, எளிமை, தொண்டறம், முதுமையின் முதிர்ச்சி போன்றவைப் பற்றிய அறிவார்ந்த கருத்துகளும் சர்க்கரை நோய், மறதிநோய், மனநலம், இதயம், மூளை உள்ளிட்ட நோய்கள் பற்றிய மருத்துவத் தகவல்களும், இங்கர்சால், நெல்சன் மண்டேலா, அறிஞர் அண்ணா, அன்னை மணியம்மையார், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி, வி.ஸ.காண்டேகர் போன்ற தலைவர்கள்  - சிந்தனையாளர்களின் வாழ்க்கைப் பாடங்கள் பற்றிய கட்டுரைகளும் ஏராளம் இடம் பெற்றுள்ளன.

பன்னிரண்டாம் பாகம் மூளையைப் பாதுகாக்கத் தவிர்க்க வேண்டிய தவறுகள், வள்ளுவர் கூறும் நல வாழ்வியல் ஊட்டச்சத்து, நடைப்பயிற்சி, குறித்த விழிப்புணர்வு கட்டுரை கள். துக்கம், கவலை போன்றவற்றிலிருந்து வெளிவருவது எப்படி?

நீண்ட காலம் வாழ்ந்த மக்களிடமிருந்து கிடைத்த 12 ரகசியங்கள் எனப் பல்துறைத் தகவல்களைக் கொண்டது.

பதின்மூன்றாம் பாகம் பழைய வாலிபர்கள் தம் கடைசி காலத்தில் யாருக்கும் பாரமாக இல்லாமல் சுதந்திர வாழ்வு வாழும் வழிமுறைகளை பற்றியும், வாழ்க்கையில் துயருற்ற காலத்தில் நமக்கு கை கொடுப்பதும், மனந்திறந்து கொட்டி மனதை இலகுவாக ஆக்கி ஆறுதல் தருவதுமான நட்பைப் பற்றியும், நம் உடலில் நோய்களினால் நாம் தாக்கப்படும் போதுதான் உடலின் எல்லா உறுப்புகளுமே உயிர் வாழ்க் கைக்கு இன்றியமையாதவை என்பதை உணருகிறோம். அவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் பகுதி சிறுநீரகமும், இதயமும் ஆதலால் இதயப் பாதுகாப்பு பற்றியும் சிறுநீரகப் பாதுகாப்பு பற்றியும் அவை பாதிப்படையாமல் செய்யவேண்டியவை பற்றியும் தடுக்க வேண்டியவை பற்றியும் பல்வேறு தகவல் கள் இடம் பெற்றுள்ளன.

இந்த வரிசையில் பதினான்காம் தொகுதியாகும். திராவிடர் கழகத்தின் பவளவிழா ஆண்டை நினைவில் நிறுத்தும் வகையில் 75 கட்டுரைகளை கொண்ட தொகுப்பாக வெளி வருகிறது. இத்தொகுதியில் சேமிப்புப் பற்றிய கட்டுரையில் தொடங்கி சேமிப்பு பற்றிய கட்டுரையில் நிறைவடைகிறது.

தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் ஆகியோ ருடன் ஆசிரியருக்கு ஏற்பட்ட சுவையான அனுபவ பகிர்வு கள் கணினி உலகம் பற்றிய தகவல்கள், புத்தரின் பகுத்தறிவு பற்றிய வாழ்க்கை நெறிகள், தூக்கம் பற்றிய அரிய தகவல் கள், ஆசிரியர் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் வாங்கிய அரிய நூல்கள், நெல்சன் மண்டேலாவின் சிறைக்கடிதங்கள் குறித்த ஏராளமான செய்திகள் இடம்பெற்றுள்ளன.

மனித குலத்தின் சிந்தனையையும், வாழ்வை மேம்படுத் தும் வாழ்வியல் தகவல்களையும் வாரி வழங்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் ஆதரவளிக்கும் வாச கர் பெருமக்களுக்கும் நன்றி! நன்றி!!

இத்தொகுப்புகளில் சில கட்டுரைகள் பல்கலைக்கழகங் களில் பாடத் திட்டமாக உள்ளது ஓர் அங்கீகாரமாகும்.

-  விடுதலை நாளேடு, 1.12.19

இனிய வாழ்வுக்கு என்ன தேவை?

வாழ்க்கையில் வெற்றியும், நிம்மதியும், மகிழ்ச் சியும் பெறுவதற்கு அடிப்படையான பழக்கங் களில் ஒன்றாக நம்மைப் பக்குவப்படுத்தும் - வரவுக்குட்பட்டு செலவு செய்து, சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுவோம்.

தந்தை பெரியார் கூறிய "சுயமரியாதை வாழ்வு சுக வாழ்வு" என்பதன் தத்துவத்தில், வரவுக்குட்பட்டுச் செலவழிப்பது என்பது மிக மிக முக்கியம். அது தானாகவே சுகவாழ்வாக அமையச் செய்யும்.

ஒரு சிறு பகுதியாவது சேமிப்பானால் - செலவு போக மிச்சமானால், அது மேலும் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும்.

கடன் வாங்கி வாழுபவன் வாழ்வில் சுயமரியாதைக்கு ஏது இடம்? கடன் சுமை - வட்டி பெரிதும் வாட்டி வதைக்குமே!

திட்டமிடல் என்பதன் மூலம் வரவை யொட்டிய செலவிடுதல் என்பதைப் பற்றிய விழிப்புணர்வு நம்மில் பலருக்கு வருவதே இல்லை; அதனால்தான் சிக்கலே.

சிக்கனமும், ஆடம்பரத்தை அகற்றிய எளிய வாழ்வும் என்றென்றும் நம்மை தலைகுனியச் செய்யாது.

வருவாய் எதுவானாலும் செலவுகளை அதற் கேற்ப கண்காணித்தல் மிகவும் துணைபுரியக் கூடும்.

பொருளாதாரத்தில் பலர் நெருக்கடிக்கு ஆளாகி திண்டாடுவதற்கு மூலகாரணம் என்ன?

சற்று யோசித்துப் பாருங்கள். வரவு எட்டணா; செலவு பத்தணா என்றால், கடனில் தானே வாழ்வு அமையும்.

திட்டமிட்டால் - நம் தேவைகளை - செலவுகளைச் சிக்கனப்படுத்தினால் - நிச்சயம் நம் வாழ்வு அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்க் கடலாக ஒருபோதும் மாறாது!

வாழ்விணையர்கள் இருவரும் சம்பாதிப்ப வர்களாக இருக்கும் பல குடும்பங்களில்கூட - திட்டமிட்டு செலவழிக்காத பழக்கத்தின் காரண மாக வறுமையும், துன்பமும் அவர்களை வாட்டி வதைக்கின்றன.

சம்பளம் பெற்றதும் என்னென்ன செலவுகள் மிகவும் முக்கியம் என்பதை வரிசைப்படுத்துங்கள்.

அத்தியாவசியமான குடும்பச் செலவுகள், பிள்ளைகளுக்குக் கல்விச் செலவு (உண்மையில் இது செலவு அல்ல - வருங்கால முதலீடுகள்தான் என்றாலும்) மருத்துவச் செலவு, எதிர்பாராதச் செலவுகள் - ஏற்கெனவே கடன் வாங்கி இருந் தால் அதன் தவணைகளைச் செலுத்தும் செலவு - இத்தியாதி வகைகளைப் பட்டியலிடுங்கள்.

வாழ்விணையர்கள் அடுத்தவர்களை காப்பி அடித்து, அவர் உடுத்தும் உடை, அவர் பயணம் செல்லும் வாகனம், அவர்கள் போட்டுள்ள நகை இவை போன்ற மோகத்திற்குப் பலியாகிவிடக் கூடாது.

நமது நிலை நாம் அறிவோம். பிறர் ஒப்புமை நமக்கெதற்கு? (அது பல நேரங்களில் போலியாகக் கூட - கவரிங் நகை போலக் கூட இருக்கலாமே) என்று அந்த சபலத்திற்கு ஆளாகாமல் புறந் தள்ளுங்கள்.

நலக் காப்புறுதியை உறுதி செய்யுங்கள்.

திடீர் செலவுகளுக்கும்   உங்கள் பட்ஜெட்டில் கொஞ்சம் நிதி ஒதுக்கீடு செய்யத் தவறாதீர்கள் (Unexpected Contigencies).

வரவு கூடுதலாகும்போது செலவைப் பெருக்க லாம் என்று தயவு செய்து எண்ணாதீர்கள்; அதனைச் சேமிப்பாக ஒதுக்கீடு செய்யுங்கள்.

நேர்வழியில் பொருளை ஈட்டி, நேர்வழியில் செலவிட்டு, நேர்வழியில் மகிழ்ச்சியுடன் வாழுங்கள். அதன் பிறகு உங்கள் குடும்பம் ஒரு சுதந்திரக் குடும்பம்; சுகமுள்ள குடும்பம்.

எப்படியும் வாழ எண்ணாதீர்!

இப்படித்தான் வாழுவேன் என்பதில் உறுதி யுடன் நில்லுங்கள்!

"தீதும் நன்றும் பிறர் தர வாரா"

என்பதை ஆழமாகப் புரிந்து கொள்வீர்! பிறகு வாழ்க்கை இனிக்கவே செய்யும்!

 - விடுதலை நாளேடு 30 11 19

நாய் - பூனைகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்போரின் முக்கிய கவனத்துக்கு

அமெரிக்க வாஷிங்டனில் 63 வயதே நிறைந்த ஒருவர் இடது காலில் ஒரு எரிச்சல் உள்ளது என்பதற்காகவும், தசை வலி (Muscle Pain)   இரண்டு உறுப்புகளில் என்பதற்காகவும் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு திறீu புளூ காய்ச்சல் அறிகுறிகள் கடுமையாகத் தெரிந்தன.  கடந்த மூன்று நாட் களாக அவர் மூச்சு விடுவதற்கு மிகவும் தொல்லைப்பட்டார்.

அவரது தோலில் Rashes  ராஷ் போன்ற அறிகுறிகளும் வட்ட வட்டமான உருக்கள் தசையில் தெரியும்  றிமீtமீநீலீவீணீமீ என்பதும் ஏற் பட்டது; அதன் காரணமாக ரத்தக்  குழாய்களி லிருந்து ரத்தம் வடிந்ததோடு அவரது கால்களின் நிறமே மாறியது போன்ற தோற்றம்!

அவரது இதயத் துடிப்பு சீராகவே இருந்தது. அவரது உடல் வெப்பச் சூடு 38.9 டிகிரி செல் ஷியஸ் ஆக இருந்தது!

கஷ்டப்பட்டு சுவாசித்தார்; காரணம் போது மான பிராண வாயு அவர் தசைகளுக்குக் கிடைக்கவில்லை; அவரது சிறுநீரகங்களோ சரியாக வேலை செய்யவில்லை; விளைவு சரியாக சிறுநீர் கழிக்க இயலவில்லை; ஆய்வா ளர்கள் முயற்சித்தனர் இதன் மூலக்காரணத்தை அறிவதற்கு.

ஆனால் டாக்டர்களுக்கோ இந்த நோய் எதனால் ஏன் என்பதுபற்றி ஒன்றும் புரியவில்லை.

அவர்கள் இது ஏதோ ஒரு வகை கிருமிகளின் தொற்று காரணமாகவே இருக்கலாம் என்று சந்தேகப்பட்டார்கள். காயங்கள் ஏதும் இல்லை. 'மெனிங்கிட்டிஸ்' Meningitis என்ற மூளை நரம்புக் காய்ச்சல் மாதிரியும் தெரியவில்லை.

இந்த ஜெர்மனியர் இறந்ததற்குக் காரணம் இவரை இவர் வளர்த்த நாய் நக்கியதே என்று கண்டறிந்தனர்!

அய்ரோப்பிய ஆய்வு ஏடான 'European Journal of Case Reports'  என்பதில் 'Internal Medicine' பற்றிய விவரங்களை இதுபற்றி விரிவாகத் தந்துள்ளனர். ஆரோக்கியமுள்ள ஒரு மனிதர் (வளர்ப்பு) நாயின் எச்சில் - உமிழ் நீர் (Saliva)
மூலம் சில வாரங்களில் உயிரை இழக்க வாய்ப்புண்டு. எப்படி....? அதிலிருந்த கிருமிகள் மனித உடலுக்குள் நுழைந்த காரணத்தால் என்று விளக்கியுள்ளனர்.

மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் அவருக்கு பல்வகை நோய்கள் 'Multiple Serious Ailments' உள்ளன என்றும் முடிவு செய்தனர்.

சீறு நீரகப் பழுது, கல்லீரல் (Liver) வேலை செய்யாமை 'Dysfunction' மற்றும் 'Rhabdo- myolysis' தசைகளின் கீழிறக்கம் 'Muscle tissues deterioration' ரத்தக் கட்டு'Blood Clot' இதனால் சிறுநீரகம் வேலை செய்யாமை 'Lactic Acid' என்ற திரவம் ரத்தத்தில் கலந்துள்ள நிலை ஆகியவை தோல் வியாதி எல்லாம் கூட்டாகச் சேர்ந்து விட்டன என்பதை இந்த நோயாளியை, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து, பரிசோதித்த நிலையில் கண்டறியப்பட்டது.

முதலில் மாரடைப்பு - இதய நிறுத்தம் - மறுபடியும் அதை இயங்கச் செய்யும் முயற்சியும் வெற்றி பெற்றது.

பிறகு அவரை 'Intubated' செய்து, மூச்சுவிட உதவிடும் கருவியையும் பொருத்தி உதவி னார்கள்.

சிவப்பு ரத்த அணுக்களையும் 'Transfused Platelets' மேலும் புதிதாக தருவித்த (Frozen Plasma) ஃபிரோசன் பிளாஸ்மாவையும்கூட இவருக்குள் செலுத்தினர்.

இவருக்கு சிறுநீரக 'டயாலிசிஸ்' தரப்பட்டது. 'Antibiotic' மருந்தும்,(Anti  Fungal) பூஞ்சைக்கு எதிரான மருந்துகளும்கூட இந்த நோயாளிக்கு அளிக்கத் தவறவில்லை.

இறுதியில் இவையெல்லாம் சேர்ந்து அவருக்கு (Gangrene) காங்கிரின் ஏற்பட்டது.

C.T.  ஸ்கேன் செய்ததில் மூளையில் வீக்கமும் ஏற்பட்டுள்ளது; பிராண வாயு மூளைக்குச் செல்ல இயலவில்லை.

ஆராய்ச்சியாளர், செல்லப் பிராணிகளாக வீடுகளில் நாய், பூனை வளர்ப்பவர்கள் இதில் மிகவும் விழிப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்; நாய், பூனையின் எச்சில், உமிழ் நீர் - இப்படி மிகப் பெரிய உடல் நலக் கேடுகளையும் இறுதியாக மரணத்தையும் ஏற்படுத்தி விடக் கூடும் என்பதால்  நாய், பூனைகளை மிகவும் கொஞ்சுவதும், எச்சில் மேலே பட்டாலே போதும், கிருமிகள் நம்மை தொற்றிக் கொள்ள, அவற்றை நக்க விடவே கூடாது. உயிர் மூப்பு என்பதைவிட உயிரின் வாதை நோய்களின் தொற்றும் ஏற்படும் என்பதால் இவற்றை தவிர்ப்பது நல்லது.

(சிங்கப்பூர் 'ஸ்ரெயிட்ஸ் டைம்ஸ்' ஆங்கில நாளேட்டின் செய்தி (28.11.2019)

வந்ததை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது)

 - விடுதலை நாளேடு 29 11 19