20.9.2015 அன்று காலை வந்த நாளேடு ஒன்றில், கர்நாடக அரசு, திருமணங்களை எளிமையாக நடத் துங்கள் - விவசாயிகள் கடன் தொல் லையாலும், ஏழ்மை, வறுமை, எதிர் பார்த்த வருவாய் இன்மையாலும், விரக்தியடைந்து தற்கொலைகளில் ஈடுபடுகிறார்கள். வறட்சி அவர்களை வாட்டுகிறது.
இந்நிலையில் விவசாயிகளே ஆடம்பரமாகத் திருமணங்களை நடத் தாதீர்கள்; கடன் வாங்கி திருமணங் களை நடத்தாதீர்கள் என்று சுற்றறிக்கை விடுத்துள்ளது!
இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். திருமணங்களும், வரவேற்புகளும், ஏராளமான தடபுடல் செலவில், ஆடம் பரம் வழிந்தோடும் வகையிலும், செல்வத்தின் செல்வாக்கு, சமையல் விருந்தில் காலையிலேயே 3 இனிப் புகள், பகல் இரவு விருந்தில் 4 இனிப் புகள் (அய்ஸ்கிரீம் உட்பட) இத்தியாதி! இத்தியாதி!!
அழைப்பிதழ்களை விதவிதமாக, ஒலிகளை உள்ளடக்கி நேரில் அழைப் பது, நாயன இசை உள்பட எத்தனையோ விதம், ரூபாய் 100-க்கு மேலாகக் கூட இதற்கு (ஒரு அழைப்பிற்கு இவ்வளவு செலவு என்ற டம்பாச்சாரித்தனம்!) ஆகியிருக்கலாம்.
அழைக்கப்படுபவர்கள் எவரும் அழைப்புகளை கண்ணாடிச் சட்டம் போட்டு நிரந்தரமாகத் தங்கள் வீடுகளில் தொங்க விடவா செய்கிறார்கள்? இல் லையே, பின் ஏன் இந்த வீண் ஜம்பம்? செல்வச் செருக்கின் வெளிச்சம்!
தந்தை பெரியார் அவர்கள் சிக் கனத்தின் அவசியம்பற்றி பேசியவர் மட்டுமல்ல, செயலில் செய்து காட்டியவர்; அவரது வாழ்வு நெறியே எளிமையும், சிக்கனமும், பகுத்தறிவும் தானே!
19.9.2015 அன்று மாலை பிரபல மூத்த கம்யூனிஸ்ட் தலைவர், முதுபெரும் கொள்கை வீரர், தோழர் ஆர். நல்ல கண்ணு அவர்களது பெயரன் பொறியாளர் ப.சதிஷ்குமார் M.E. அவர்களுக்கும், பொறியாளர் ர. பாலபாரதி M.E. அவர் களுக்கும் நடைபெற்ற மணவிழா வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்!
அங்கே கண்ட காட்சி எளிமையின் இனிமையாக அமைந்திருந்தது!
சென்னை சைதாப்பேட்டை தாடண் டர் நகரில் உள்ள மாநகராட்சியின் கலைஞர் திருமணக் கூடத்தில் மாடியில் நிகழ்ச்சி; கீழே உணவுக் கூடம். எவ்வித ஆடம்பரமும் இன்றி, வழி நெடுக கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிகள், வழிகாட்டி வருவோருக்கு உதவின!
இரவு சுமார் 7.15 மணிக்கு நான் சென்றேன். எளிய மேடை இருபுறமும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியின், கொடி களும், பதாகைகளும்.
மணமக்கள் கற்ற பொறியாளர்கள், பொருத்தமான வாழ்விணையர்கள்! இரு வரும் பொறியியல் (முதுநிலை) பட்டதாரிகள்.
சுமார் 700 பேர் (ஆண் பெண் இரு பாலரும்) வந்திருந்து உண்மை அன் புள்ளத்தோடு வாழ்த்திச் சென்றனர். தோழர் ஆர்.என்.கே. அவர்களைப் போலவே எளிமை இந்த வரவேற்பிலும் எல்லோரையும் ஆட் கொண்டது! பின் பற்ற வேண்டியது!! பெண்கள் உட்பட தோழர்கள் வந்தோரை, தோழர் முத் தரசன் கீழே நின்று நுழைவு வாயிலில் வரவேற்று அழைக்க,
அங்கே தோழர் அய்யா நல்ல கண்ணு, தோழர் தா. பாண்டியன், சி.மகேந்திரன், வீரபாண்டியன், ஏழுமலை போன்ற தோழர்கள் அழைத்துச் சென்று, மண மக்களுக்கு வாழ்த்துச் சொல்ல உதவினர்.
திரும்பும்போது எல்லோருக்கும் நன்றி கூறும் ஒரு கையடக்கப் பை! அதில் புரட்சி சின்னம் உள்ளே ஆலன் உட்ஸ் எழுதிய சோசலிசம் என்ற நூலும், ஒரு எழுதுகோல் மணமக்கள் பெயர் பொறித்தது.
எத்தனையோ திருமண வரவேற் புகள் என்ற ஆடம்பரப் பாலைவனத் தில், எளிமையே இனிமை - எடுத்துக் காட்டு என்ற ஒயாசிஸ் இந்த மண வரவேற்பு!
நூல் அளிப்பதை சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகம் முன் னோடியாக இருந்து தாம்பூல முறை யில் புரட்சி செய்தது; தோழர்களும் இப்படிப்பட்ட முறையைக் கடைப் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது!
வசதியிருந்தாலும் வாரி இறைக்க வேண்டுமா என்ன? அதை கல்வி, மருத்துவத் தொண்டறத்திற்கு உதவி மணமக்கள் பெயரைப் போடலாமே!
வாழ்க மணமக்கள் - வருக இந்த எளிமை இனிமை.
-விடுதலை,21.9.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக