13 வயது முதல் 19 வயது வரை உள்ள இளையர்களுக்குக் கூட இப்போது ரத்தக் கொதிப்பு (B.P) வருகிற கொடுமை நிகழ்கிறது!
இளையர்களுக்கும் மிகக் குறை வான வயதுடைய இளைஞர்களுக்கும் கூட மாரடைப்பு - இருதய நோய் ஏற்படுவது இப்போது அன்றாடச் செய்தியாகி வருகிறது, இதைவிட வேதனையும் கவலையும் அடையத் தக்கச் செய்தி வேறு உண்டா?
அது போலவே அதே வயதுள்ள இளைஞர்களுக்கு சர்க்கரை நோயும் கூட இருப்பதை மருத்துவர்கள் கண் டறிந்து, எச்சரிக்கும் நிலையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பெருகி வருகிற அவலமும் கண்கூடு!
இவை ஏற்பட, இத்தனை இள வயதில் ஏற்படக் காரணம் என்ன?
மற்ற வயதானவர்கள், பெரும் நிர்வாகச் சுமையாளர்கள் போன்று அடிக்கொரு முறை ஏற்படுவதற்கு மன அழுத்தம் - மன உளைச்சல் ஒரு போதும் காரணமாக இருக்க முடியாது. பின் என்ன?
நாமறிந்தவரையில் இளைஞர் களின் உணவுப் பழக்கம்தான் வீட்டில் சமைப் பது ஆரோக்கியமான உணவு; ஆனால் அதை உண்ணாமல் Fast Foods என்ற துரித உணவை நுகர்வோர் கலாச் சார நோயால் பாதிக்கப் பட்டவர்கள் கால நேரம் கருதாமல் சாப்பிடுவதேயாகும்!
பர்கர், பிட்சா, கெண்ட்டக்கி, மெக் டானல்டுஸ், பிட்சா ஹட், டொமெனி யாஸ் - இவைகளில் மொய்க்கின்றனர். இவைகளின் சேவை!? 24 மணி நேரம் பல ஊர்களில்!
என்னதான் கண்காணிப்பு - கலப்படம் தடுத்தல் இருந்தாலும், சுவை அதிகமாக இருந்து இளைஞர்களைக் கவர எத்தனை சேர்ப்புக்கள்! கொழுப்பு! கொழுப்பு! கொழுப்பு! இதோடு சேருகிறது பணக் கொழுப்பும்! பிறகு கேட்கவா வேண்டும்?
கூடுதல் எடை, ஊதிய பலூன், உப்பிய மகோதரம் போன்ற உடல்வாகு, இத்தியாதி! இத்தியாதி!!
கொழுப்பு இதயக் குழாய்களில் அடைப்பு - ரத்த ஓட்டம் தடைபடுத்தப் படல், மாவுச் சத்து அதிகமாகி இன்சுலின் சுரப்பிகள் செயலிழந்து, ரத்தச் சர்க்கரை கிரியாட்டின் என்று சிறுநீரில் இருக்க வேண்டிய உப்பின் அளவு எல்லை தாண்டிய நிலை!
இதில் மேலும் கொடுமை, பெப்சி கோலா, கொக்கொகோலா என்ன வென்னமோ - குடிக்க!
(டாஸ்மாக்கிலும் இளைஞர் பட்டாளம் படையெடுப்பு மிக மிக வேதனை தரும் வெட்கப்பட வேண்டிய யதார்த்தம்!)
(டாஸ்மாக்கிலும் இளைஞர் பட்டாளம் படையெடுப்பு மிக மிக வேதனை தரும் வெட்கப்பட வேண்டிய யதார்த்தம்!)
இதோடு சதா சர்வ காலமும் மனித உறவைப் புறக்கணிக்க கணினிக் காதல், கணினியோடே இணைந்த செயல்பாடு மிக்க தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை!
கழிப்பறையில் தான் முன்பு தனிமை கிடைக்கும்; இப்போது கைத் தொலை பேசி வந்த பிறகு அதுவும் போச்சு!
8.10.2015 அன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டில் ஒரு முக்கிய தகவல்: அதிகமாக இணையத் தினைப் பயன்படுத்திடும் இளைஞர் களுக்கு - அதாவது 14 மணி நேரம் (ஒரு வாரத்தில்) என்ற அளவில் கணினி இணையதளத்தோடு இழைந்தால் அவர் களுக்கு அதிகமான ரத்தக் கொதிப்பு Hypertension ஏற்படுகிறது என்று வாஷிங்டன் ஆய்வாளர்கள் கண்டறிந் துள்ளனர். 148 இளையர்கள் - இணை யத்தை அதிகம் பயன்படுத்தியோரில் 26 பேருக்கு இந்த Hypertension இரத்தக் கொதிப்பு நோய் மிக அதிகமாக ஏற்படுகிறது என்று கண்டறிந்துள்ளனர்.
இதன் விளைவு...? மாரடைப்பு, சிறுநீரகப் பாதிப்பு முடக்குவாதம், மூளை நோய் Heamoscope போன் றவை ஏற்பட வாய்ப்பு மிக அதிகம்.
ஹென்றி போர்டு நிறுவனம் ஒரு தனி ஆய்வுத் துறையை அமைத்தது! Health Sciences Department அதன் முக்கிய அதிகாரி ஆண்ட்ரிகேசடி பர்ரோ - இப்படி ஆய்வில் கண் டறிந்து எச்சரித்துள்ளார்!
இணையத்தின் பயன் மேலானது தான், இணையம் அவசியம்தான்!
எதையும் அளவறிந்து வாழ வேண்டும் என்பதால் கட்டுப்படுத்தி - தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உதவிக்கு வந்தது உயிர்க் கொல்லி யாக மாறலாமா?
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
-விடுதலை,16.10.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக