பக்கங்கள்

ஞாயிறு, 5 ஜூலை, 2015

அஞ்சுவதற்கல்ல முதுமை; அனுபவப் பகிர்வுக்கே!

      


அமெரிக்க குடிஅரசுத் தலைவர் களில், மிகுந்த பண்பாளர்களில் ஒருவ ராகத் திகழ்ந்த மிக நல்ல ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அவர்கள்!
அப்போதே இந்திய நாட்டை மிகவும் நேசித்து, நல்லறிவுடன் இருந்த குடிஅரசுத் தலைவர். இவர் விவசாயி களின் பிரதிநிதியாவார். இவருக்கு மற்றொரு செல்லப் பெயரே - பதவி வகித்தபோது ‘Peanut President’ - வேர்க்கடலை ஜனாதிபதி என்பதாகும்!
சில ஆண்டுகளுக்குமுன் அமெ ரிக்கா சென்றிருந்தபோது நான் வாங்கிப் படித்துச் சுவைத்த அவரது அறிவுச் செல்வ நூல் ஒன்று, ‘‘The Virtues of Aging’’(வயதாவது - முதுமை என்ற பெரும் நன்மைகளுக்கான வாய்ப்பு) என்ற நூல்.
மறுமுறை இப்போது படித்தேன் - சுவைத்தேன்!
இவர் 56 வயதிலேயே பதவி வாழ்க் கையிலிருந்து ஓய்வு பெற்று, மக்களி டையே தொண்டறத்தை மேற்கொண்ட வர்.
அமெரிக்காவில்  65 வயது அல்லது அதற்கு மேலும் என்ற வயது முதுகுடி மக்கள் என்ற தகுதி முத்திரையைப் பொறிக்கக்கூடியதாகும்.
எந்த வயதை அடைந்தால் நாம் முதியவர் (வயதானவர்) என்ற நிலையை அடைகின்றோம்? என்ற கேள்விக்கு அவர் அந்த பொத்தகத்தில் சிறப்பாக விடையளிக்கிறார்:
அது வெறும் வயதின் கூட்டலினால் வருவதல்ல; ஒவ்வொரு நபருக்கும், இடம் பொறுத்து மாறுகிறது. உதாரணத் திற்கு அமெரிக்காவில் இது சராசரியாக 73 வயதாகிற நிலையில், முதியவர் என்ற பட்டத்திற்குத் தயாராகிறார்கள்.
ஒருவர் எப்போது வயதானவராக முதுமை அடைந்தவராக - கருதப்படு கிறார்? என்ற கேள்விக்கு அருமை யான இலக்கணம் கூறுகிறார்! நம்மில் அவர் எப்படி சிந்திக்கிறாரோ அதைப் பொறுத்தே அதற்கு விடை கிடைக் கிறது! நகர முடியாத குந்தியே இருக்கும் நிலை, மற்றவர்களின் உதவியைப் பெரிதும் நாடியே வாழும் சூழ்நிலை, குறிப்பிடத்தக்க அளவு நம்முடைய உடல், உள்ள இயக்கத்தின் அளவு குறைந்துவிட்டது என்ற உணரும் நிலை, நாம் சந்தித்து உரையாடிடும் நண்பர் களின் எண்ணிக்கை குறையும்போது - அந்தப் பருவம் - நிலை நம்மைத் தொடுகிறது என்று கருதலாம்.
எத்தனை ஆண்டுகள் வாழுகிறோம் என்பது வயதுடன் இணைந்த ஒன்றல்ல. வயதுக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே நடைமுறை உண்மை யாகும்.
நம்முடைய ஆயுள் குறைவதோ, நீளுவதோ, நம் இளமைக்கால நடவடிக் கைகளின்போது ஏற்படும் உடல்நலப் பாதுகாப்பைப் பொறுத்த ஒன்றேயாகும்.
அமெரிக்காவின் 6 குடிஅரசுத் தலை வர்கள் (வாஷிங்டனில் தொடங்கி ஜான்குன்சி ஆடம்ஸ்வரை) சராசரி வயது 76 ஆண்டுகள் ஆகும்.
கடைசி 6  குடிஅரசுத் தலைவர்கள் (பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் முதல் ரிச்சர்ட் நிக்சன்வரை) வாழ்ந்த சராசரி வயது 70 ஆண்டுகளே; கென்னடியைத் தவிர்த்து விட்டுக் கணக்கிட்டால், மற்ற வர்கள் சராசரி வயது 74.8 ஆண்டுகளே என்று விவரிக்கிறார்!
ஜிம்மி கார்ட்டர் அவர்கள் பதவியை விட்டு விலகி ஓய்வுக்குத் தயாராகும் போது, அவர்பற்றி பல அரிய தகவல் களைத் திரட்டி எழுதிய பார்பாரா வால்டர் என்ற எழுத்தாளர், இவரைப் பேட்டி கண்டு ஓர் அருமையான கேள் வியைக் கேட்டார்!
மிஸ்டர் பிரசிடெண்ட், நீங்கள் எவ்வளவு பரபரப்பான, சவால் விடுத்த பணிகளையெல்லாம் எதிர்கொண்டு பணியாற்றியுள்ளீர்கள். எது உங்களுக்கு மிகவும் சிறப்பான ஆண்டுகள், விளக்குவீர்களா? என்று கேட்டார்.
சிறிது நேர யோசனைக்குப்பின், ஜிம்மி கார்ட்டர் கூறினார்:
(இது) இப்போதுதான் சிறப்பான ஆண்டு எனக்கு.
அந்த கேள்வியாளருக்கு வியப்பு. காரணம் கூற முடியுமா? என்று கேட்கிறார்.
சிறிதுநேரம் மீண்டும் யோசிக்கிறார் ஜிம்மி கார்ட்டர்; பிறகு பதிலளிக்கிறார்:

எனக்குப் பல்வேறு விஷயங்களைப் பற்றி நிதானமாக, முன்பு எதிரொலித்த சிந்தனைகளையும், எனது குடும்பத்த வருடன் மேலும் அதிகநேரம் செலவிட வும், எனது முந்தைய தவறுகளை நான் திருத்திக் கொண்டு வாழும் வாழ்க்கையை நடத்த அரிய வாய்ப்பு - இந்த நிலையில்தான் என்று கூறுகிறார்.
எவ்வளவு நேர்த்தியான பதில் - அறிவார்ந்த விளக்கம்!
முதுமையில் நம்மை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது நாம் சேர்த்த செல்வம் அல்ல; அனுபவித்த பதவியல்ல; முன்பு சுவைத்த ஆடம்பரங்கள் அல்ல.
நல்ல ஆதரவுள்ள அன்பு பொழியும் - வழியும் - நல்ல குடும்பத்தவர். நண்பர் கள் வட்டம்.
புதுப்புது திட்டங்கள் - தொண்டறப் பணிகள் நம்மை என்றும் சீர் இளமை யாகவே வைத்திருக்கும். முதுமை என் பது பயந்து ஓடவேண்டிய ஒன்றல்ல; மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு, வாழ்க்கை யில் முன்பு கிடைக்காததற்கு வருத்தப் படாமல், கிடைத்தவைகளை மகிழ்ச்சியாக ஏற்று, அனுபவித்துள்ள மகிழ்ச்சியை அசை போட்டு வாழுவதே முதுமையின் நற்பயன்கள்!
இளமையில் கிட்டாத வாய்ப்பு - முதுமை என்ற அனுபவக் களஞ்சியத் தின் தொகுப்பு என்பதாகும். அதைப் பகிர்ந்தளித்து நாளும் மகிழ்வுடன் வாழுவோம்.
எதுவும் நம் மனதின் எண்ண ஓட்டத்தைப் பொறுத்ததே!
நன்றும் தீதும் பிறர் தர வாரா! - இல்லையா?

-விடுதலை,18.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக