பக்கங்கள்

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

தொண்டால் உயர்ந்திடும் எம் தோழர்கள்! ("போடிநாயக்கனூர் நகராட்சி - பெரியார் சமத்துவம் எரிவாயு தகன மயானம்")

 

பெரியார் தொண்டர்களாகிய நமது இயக்கப் பொறுப்பாளர்கள் பலரும் பற்பல ஊர்களில்அதிக விளம்பரங்கள் இல்லாமல் செய்யும் தொண்டறப் பணிகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன.

'ஒரு ரூபாய் பணி - ஓராயிரம் ரூபாய் விளம்பரம்என்ற இந்த விளம்பர யுகத்தில்கூட, 'பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லைஎன்று அமைதியான வழியில் நமது மகிழ்ச்சிக்கும்மனநிறைவுக்கும் நாம் முன்வந்து செய்யும் தொண்டு - பிறர் பாராட்டினாலும் - பாராட்டா விட்டாலும்ஏன் தூற்றினாலும்கூடதொடரும் என்ற தொண்டு  மனப்பான்மையுள்ள தோழர்கள் நமது இயக்கத்திற்கு அணிகலன்கள் போன்ற வர்கள்!

50ஆம் ஆண்டு திருமண நாள் கண்ட தேனி மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் மானமிகு தோழர் இரகுநாகநாதன் - சாந்தா ஆகிய வாழ்விணையர்களிடமிருந்து வந்த ஒரு கடிதத்தில் ஒரு அரிய தகவல் - இதோ அக்கடிதம்:

"மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

"போடிநாயக்கனூர் நகராட்சி - பெரியார் சமத்துவம் எரிவாயு தகன மயானம்பற்றிய தகவலுக்காக தங்களிடம் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது.

12.12.2012இல் நகராட்சி நிருவாகம் - யாரும் எடுத்து நடத்தத் தயங்கும் எரிவாயு தகன மயானத்தை "பெரியார் சமத்துவம் எரிவாயு தகன மயானம்என்று என்னால் துவங்கப்பட்ட அறக் கட்டளை வசம் ஒப்படைத்தார்கள்தமிழ்நாட் டிலேயே தந்தை பெரியார் பெயரில் இயங்கும் - எரிவாயு தகன மயானம் இது ஒன்றுதான்.

ஆரம்பித்த ஒரு வருட காலம் மிகுந்த கஷ்டப் பட்டேன்பழைய முறையில் எரியூட்டுகின்ற வர்களைசுற்றுச்சூழல் பாதுக்காக்கக்கூடிய எரிவாயு தகன மயானத்தில் எரியூட்ட உடல் கிடைக்கவில்லைஇறந்தவர்களை இல்லம் சென்று மாலை மரியாதை செய்துவிட்டு "எரிவாயு தகன மயானத்தில் நாங்கள் எரியூட்டித் தருகின்றோம்என்று கேட்டாலும் அவர்கள் ஒப்புக் கொள்வதில்லைநகராட்சி நிர்வாகமும் முயற்சி எடுத்து - பழைய முறையில் எரியூட் டினால் "இறப்பு சான்றுதரமாட்டோம் என்று சொல்லிஒருவழியாக கடந்த 9 ஆண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றோம்.

மாதம் சராசரியாக 40 உடல்கள் எரியூட்டி வந்து கொண்டிருந்த வேளையில் - மே மாதம் மட்டும் 150 உடல்கள் எரியூட்டியுள்ளோம்தேனி மாவட்டத்தில் தேனிசின்னமனூர்கம்பம்கூடலூர்பெரியகுளம் பகுதிகளில் எரிவாயு தகன மயானம் இருந்தாலும் - இந்த கரோனா காலத்தில் இறந்தவர் உடலை வீட்டில் அதிக நேரம் வைத்துக் கொள்ளாமல் உடனே எரியூட்ட வேண்டும் என விரும்பும் வீட்டுக்காரர்கள்  மேற்சொன்ன எல்லா இடங்களுக்கும் போன் செய்தாலும்எந்த நேரத்திலும் எரியூட்டித் தரக்கூடிய இடம் போடி - பெரியார் சமத்துவம் மயானம் மட்டுமே என்று மாவட்டத்தில் உள்ள எல்லோரிடமும் நற்பெயர் எடுத்து வருகின்றது.

நகராட்சி நிருவாகமும், "எந்த நேரத்தில் வந் தாலும் காக்க வைக்காமல் எரியூட்டி விடுங்கள்என்று அறிவுறுத்தியதினால்இரவு - பகலாக மானமிகு சுருளிராஜ் அவர்களின்   மேற்பார் வையில்எனது கண்காணிப்பில் இயங்கி வருகிறது.

மே மாதம்

இயற்கை மரணம் - 77, மருத்துவமனை மரணம் - 34, கரோனா தொற்று மரணம் - 38

எம்மிடம்ஆம்புலஸ்-1, “பெரியார் சமத்துவம்சிறிய தேர் - 1, பெரிய தேர் - 1

Freezer Box-2 - இதைக் கொண்டு போடி நகர மக்களுக்கு மிக சிறந்த தொண்டாக செய்து வருகின்றோம்.

கடந்த 20 ஆண்டுகாலமாக தந்தை பெரியார் குருதிக் கொடை கழகம் மூலமாக முகாம் நடத்துகிறோம்அவசரத் தேவைக்கு தினமும் நம்மை நாடி குருதி கேட்டு வருகின்றார்கள்.

அத்துடன் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு விழிக்கொடை வழங்கி வருகின்றோம்தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கொடை அளித்து வருகின்றோம்.

மேலும் எங்களின் பணி தொய்வின்றி தொடர தங்களின் வாழ்த்துகள் வேண்டுகின்றோம்."

அன்புடன்

இரகுநாகநாதன்

இடுகாடும்சுடுகாடும் தான் - பேதம் தழைத்துள்ள இந்த ஊளைச் சமூகத்தில் சமரசம் ஏற்படுத்துவதும்அதற்கு உதவுவதும் மரணம்  ஒன்றே!

ஏழைபணக்காரன்உயர்ந்தவன் - தாழ்ந் தவன்படித்தவன் - படிக்காதவன்பதவியாளன் - பதவி இல்லாதவன் என்ற பேதம் மரணத்தின் கண்களுக்குத் தெரியாதுஆனால் அவர்களை அடக்கம் செய்வதில்கூட நம் நாட்டில் எப்படி எப்படியோ பேதம்சிற்சில நேரங்களில் பற்பல இடங்களில் தலைநீட்டிமனித குலத்திற்கு தலைகுனிவை ஏற்படுகின்றன.

பகுத்தறிவாளர்களும்பெரியாரிஸ்டுகளும்  அதனைப் போக்கும் திறன் உள்ளவர்கள்  என்பதை தோழர்கள் இரகுநாகநாதன் - சாந்தாலெனின்சுருளிராஜ் ஆகிய ஒரே குடும்பத் தவர்கள்  அற்புதமான சாதனையை அடக்கமிகு அன்பர்களாகச் செய்துஅப்பகுதியில் மறைந்த வர்களுக்கு மரியாதைப் பணி செய்து கடமையாற் றுகின்றனர்!

இதுபோலவே அதே மாவட்டத் தோழர் ஸ்டார் நாகராஜன் - குருதிக் கொடை அளிப்பதில் பல முறை தனித்து உயர்ந்து நிற்கும் தொண்டறச் செம்மல்!

இயக்கம் இத்தகையோர் தொண்டால் பெருமைப்படுகிறது!

இவர்களோ என்றும் பெறாத இன்பம் பெற்று மகிழ்கின்றனர்!

வளர்க அவர்தம் தொண்டறம்!

பெருகட்டும் இதுபோன்ற நற்பணிகள்!!

கண் மருத்துவர் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் தந்த "கருத்தோம்பல்!"

      J• Viduthalai

 

 

வேலூரில் தி.மு..வின் முக்கிய செயல்வீரரும்மேனாள் மாநிலங்கள் அவை உறுப்பினராகவும் இருந்த அருமை சகோதரர்  முகம்மது சகி அவர்களது அருமைச் செல்வன்,  கண் மருத்துவர்சிறந்த திராவிடர் இயக்கப் பற்றாளரான டாக்டர் முகம்மது சயி அவர்களது இல்லத்தின் விருந்தோம்பலை கழகத்தவர்களாகிய நாங்கள் பல முறை அனுபவித்து மகிழ்ந்துள்ளோம்.

அன்பால் திக்குமுக்காடித் திணறும் அளவுக்கு விருந்தோம்பலை முனைப்புடன் செய்வர்!

அத்தகைய கொள்கைக் குடும்பத்தவர் நமது கண் மருத்துவர் டாக்டர் முகமது சயி அவர்கள். 4.6.2021 அன்றுகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் அவர் பங்கேற்ற “மருத்துவரிடம் கேள்வி கேட்டு அய்யங் களைப் போக்குதல்” பற்றிய ஒரு நிகழ்ச்சியை நாங்கள் குடும்பத் துடன் பார்த்தோம்மிகவும் மகிழ்ந்தோம்பயனடைந் தோம்கண் மருத்துவர் முகம்மது சயி அவர்களது 'கருத்தோம்பல்மிகவும் தெளிவாக அய்யங்களைப் போக்குவதாக இருந்தது!

கரும்பூஞ்சை என்ற தொற்று பற்றிய பீதி கரோனாவை விட அதிகமாக மிரட்டி வரும் இக்காலக்கட்டத்தில் அதுபற்றி துல்லியமாகவும்தெளிவாகவும்கேட்கும் எவருக்கும் அளவுக்கு மீறிய அந்தப் பீதியைப் போக்கும் வண்ணமும்நம்பிக்கையும்நோய் எதிர்ப்பு சக்தியை நோயாளிகளுக்குப் பெருக்கித் தரும் வண்ணமும் அந்தக் 'கருத்தோம்பல்' (இது ஒரு புதிய சொல்லாக்கம்தான்அமைந்திருந்தது.

கண்களைப் பாதிக்கும் கரும்பூஞ்சை (திuஸீரீus) தொற்று பல ஆண்டுகளாக இருப்பதுதான் - இப்போது அதிகமாகப் பரவி வருகிறது என்பதும் உண்மையே!

கரோனா வந்தவர்களுக்கெல்லாம் அது வந்து விடும் என்று வீணே அச்சப்பட வேண்டியதே இல்லை.

1. அதிகமான அளவுக்கு  - கட்டுப்பாடற்ற நீரிழிவு -  சர்க்கரை நோயின் அளவு 400, 500 என்ற அளவில் கட்டுமீறிப் போனவர்களுக்கும் கரும்பூஞ்சை பாதிப்பு ஏற்படக்கூடும்.

2. மற்ற நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டதனாலும் இந்த பாதிப்பு ஏற்படக்கூடும்.

3. ஸ்டீராய்ட் (ஷிtமீக்ஷீஷீவீபீஅளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் அதன் பாதிப்பாகவும் இத்தொற்று ஏற்படக்கூடும்.

4. முன்பெல்லாம் ஒரு சிலருக்கு மட்டுமே அபூர்வமாக - ஆயிரத்தில் எங்கோ ஒன்று என்று இந்த கரும்பூஞ்சை நோய் வந்ததுஇந்தக் கரோனா தொற்றுக் காலத்தில்  மற்ற பாதிப்புகளும் நோயாளிகளுடன் இணைவதால் இந்தக் கரும்பூஞ்சைத் தொற்றும் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும்.

எனவே கரோனா பாதிப்பாளர்களுக்கெல்லாம் இது வந்து விடும் என்று பீதி அடைய வேண்டாம்இது குணப்படுத்த முடியாத உயிர்க்கொல்லி நோய் என்று நம்பிக்கை இழந்து - நோயில் சாவதை விட ‘பயம் - பீதியில் நோயாளிகள் ‘சாகும் அளவுக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை.

துவக்கத்தில் கண்டறிந்தால் குணப்படுத்தி மீள முடியும்சர்க்கரை கட்டுப்பாடுநோய் எதிர்ப்பு சக்திப் பெருக்கம்மருத்துவ முன்னெச்சரிக்கை ஆகிய மூன்றையும் கடைப்பிடிப்போர் எவரும் அச்சப்பட வேண்டியதில்லைஅப்படியே அது தாக்கினாலும் ஆரம்பத்திலேயே அதன் அறிகுறிகளைக் கண்டு அறிந்தால் நிச்சயம் அதை வென்று மீள முடியும் என்று தெளிவினைதுணிவினை "ஊசி மருந்தாக"க் கேட்கும் நோயாளிகளுக்குத் தனது 'கருத்தோம்பல்மூலம் செலுத்தினார் நமது கண் மருத்துவர் அவர்கள்!

நல்ல தன்னம்பிக்கையைகேள்வி கேட்ட எல்லோரிடமும் விதைத்தார்அதனைப் பதியும் படி கருத்துப் பரிமாற்றமும் செய்தார்.

நோய்த் தடுப்பு மட்டுமின்றி நோய் பற்றிய விழிப் புணர்வும் இன்றையக் காலகட்டத்தில்  மிக முக்கியமாகும்.

மருத்துவப் பெருந்தகையாளர் டாக்டர் முகமது சயிதெளிவூட்டும் அத்தகைய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை இத்தகைய கருத்தோம்பல் மூலம் செய்து வருவது - சிறப்பானது!

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின்  இத்த கைய ‘கருத்தோம்பல்’ நிகழ்ச்சிகள் வகுப்பறைப் பாடங்களாகக் கேட்போரை வசீகரிக்கச் செய்வனவாகும்காரணம்நல்ல மருத்துவர்களை அழைத்துக் கருத்து விருந் தளிப்பதேயாகும்!

வாழ்த்துதலுக்குரிய வயது இடைவெளியில்லா மனிதநேயமும் - ஈகமும்!

 

கரோனா கொடுந்தொற்று காரணமாக அவதியுறு வோரை அதனின்று மீட்க தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோளுக்கு இணங்க நல்ல மனம் படைத்தோர் பலரும் ஏராளமாக நன்கொடை வழங்கிகரோனா ஒழிப்பை ஒரு கூட்டு மக்கள் இயக்கமாக்கி வருவதற்கான அறிகுறியாகவயது இடைவெளியின்றி பெரியார் பிஞ்சுகளும் சரிபெரியாரின் திராவிடர் இயக்கத்தில்மனிதநேயத்தில் மாறா பிடிப்புள்ள நண்பர் இலியாஸ்மூலம் அறிமுகமான 97 வயது நிறைந்த சிங்கப்பூர் பெரியவர் அப்துல் கஃபூர் அய்யா போன்றவர்களும் எப்படி ஈகம் என்ற அறுபடாத நூலிழையால் பின்னப்பட்டுள்ளனர் என்பதை கீழ்க்கண்ட இந்த இரண்டு கடிதங்கள் பறைசாற்றுகின்றன!

பெறுநர்:

மாண்புமிகு முதலமைச்சர்

திரு மு..ஸ்டாலின் அவர்கள்.

தமிழ்நாடு-இந்தியா

அனுப்புநர்:

ஹாஜி எம்அப்துல் கஃபூர்

சிங்கப்பூர்

HAJI M.ABDUL GAFOORE 

Blk 43 LENGKOK BAHRU 

#04-191 

SINGAPORE 150043

பொருள் : தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதி

அன்புள்ளமாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குவணக்கம்வாழ்த்துகள்.

என் பெயர் எம்அப்துல் கஃபூர்எனக்கு வயது 97. சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று பிள்ளைகளோடு வாழ்ந்து வரும் எனக்குபூர்வீகம் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம்கும்பகோணம் அருகேகுடவாசல் - 612 601 எனும் ஊர்.

தற்போது உலகெங்கிலும் பரவிவரும் கரோனா கிருமித்தொற்று இந்தியாவையும்தமிழ்நாட்டையும் விட்டுவிடவில்லைநோய்ப் பரவலைத் தடுக்கவும்மக்களின் நலனையும்வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க நீங்கள் முதல்வர் பொறுப்பேற்றதிலிருந்து எடுத்து வரும் முயற்சிகள் வரவேற்கத்தக்கவை.

இந்தப் பேரிடர் கால அடிப்படையில் சீரிய பணிகளை மேற்கொண்டுள்ள நீங்கள்முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடைகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதும்அவற்றை வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்காகச் செலவிட முனைந்துள்ளதும் போற்றுதலுக் குரியது.

நான் வேலையிலிருந்து ஓய்வுபெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டனஇந்த முதிர்ந்த 97ஆம் வயதில் எனது பாசமிகு பிள்ளைகள் தான் எனக்கு மாதாமாதம் செலவுக்குப் பணம் கொடுத்து ஆதரவளிக்கின்றனர்.

எனது அவசரஅத்தியாவசியத் தேவைகளுக்காக நான் அந்தச் செலவுக்கான பணத்தில் கொஞ்சத்தைச் சேமித்து வைப்பதை பழக்கமாக்கி வந்துள்ளேன்.

தமிழகத்தில் மக்களுக்காகவும்சமூகத்துக்காகவும்அவர்களின் நலனுக்கும்பாதுகாப்புக்கும் தற்போது நிதி தேவைப்படுவதை அறிந்து அந்தப் பணிக்காக நான் என் சேமிப்பிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் (ரூ. 2,00,000) நன்கொடையாக வழங்க விரும்புகிறேன்.

அதற்கான காசோலையை இந்த மடலுடன் இணைத்துள்ளேன்வயது முதிர்ந்த நிலையில் வங்கிக்குப் போக இயலாத காரணத்தால் குடும்ப நண்பரின் மூலம் அந்த காசோலையை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.

சிறு வயது முதல் திராவிட இயக்கத்தின் கொள்கை யிலும்உலகத் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞரின் மீது அளவுகடந்த மரியாதையும்பற்றும் கொண்டவன் நான்தலைவரின் கோபாலபுரம் இல்லத்தில்அவரை இரண்டு முறை நான் சந்தித்துள்ளேன்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் உங்களை நான் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற வி.கே.பி. (V.K.P.இல்லத் திருமணத்தில் சந்தித்தேன்குடும்பத்தினர் சார்பில் நீங்கள் எனக்குப் பொன்னாடை அணிவித்தீர்கள்அப்போதுநானும் உங்களுக்குப் பொன்னாடை அணிவித் தேன் என்பதை அன்புடன் நினைவுகூர்கிறேன்.

தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் டாக்டர் கி.வீரமணியின் அணுக்கமான நட்பும்அறிமுக மும் பல ஆண்டுகளாகக் கிடைத்ததிலும் பெருமை கொள்கிறேன்.

எனது கைச் செலவுப் பணத்தை உங்கள் மக்கள் பணிக்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்உங்கள் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்நன்றி!

அன்புடன்,

ஹாஜிஎம்அப்துல் கஃபூர்

நாள்: 18.5.2021

இடம்தஞ்சாவூர்

அன்புள்ள ஆசிரியர் தாத்தாவுக்குவணக்கம்!

நலம்நலமறிய ஆவல்.

இந்தக் கரோனா நாள்கள் மிகவும் மோசமாக மக்களை வீழ்த்துகிறது. ‘விடுதலை'யில் கரோனா பாதிப்புப் பற்றியும்நம் தமிழ்நாட்டு முதலமைச்சர் உயர்திருஸ்டாலின் அங்க்கிள் எடுக்கும் நடவடிக்கை.பற்றியும் வரும் செய்திகளை எங்கள் பன்னீர்செல்வம் தாத்தா படிக்கச் சொல்லிநான் படிப்பேன்.

உயர்திருஸ்டாலின் அங்க்கிள் எல்லோரிடமிருந்து பண உதவி கேட்டு எழுதியதைப் படித்தவுடன் என் தம்பி கவு.நிலவன்மாயா அத்தையிடம் பேசி ‘‘செங்கதிரன்நிலவொளி கிட்டே சொல்லுங்க அத்தைன்னு சொன்னேன்'' அத்தை ஒரே குசியாயிட்டாங்கஎன்னைப் பாராட்டுனாங்க.

அதனால் நான் (இனியவன் - வயது 15) ரூ.20,000/

என் தம்பி (நிலவன் - வயது 10) ரூ.8,000/

அத்தை மகன் (செங்கதிரன் வயது 11) ரூ 5,000/

அத்தை மகள் (நிலவொளி வயது 8) ரூ 9,000/

ஆக மொத்தம்  ரூ.42,000/-  அனுப்பிவைக்கிறோம்.

அடுத்து எங்கள் தாத்தா (திரு.பன்னீர்செல்வம்), ஆத்தா (திருமதி தமயந்தி), அம்மா (திருமதி பல்லவி), அப்பா (திருகவுதம்), அத்தை (திருமதிமாயா), மாமா (திரு கமலக் கண்ணன்), அம்மாச்சி (திருமதிசியாமளா), தாத்தா

(திருபாலசுப்பிரமணி). மாமா (அம்மாவின் அண்ணன் திரு.அரவிந்த்மற்றும் என் நண்பர்களிடமிருந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்குப் பெற்ற தொகையை அனுப்பி வைக்கிறேன்.

நன்றி!

 தங்கள் அன்புள்ள,

கவுஇனியவன்கவுநிலவன்.செங்கதிரன்,  .நிலவொளி

‘‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்''

‘‘ஈகைக்குமுண்டோ இடைவெளி?''

அள்ளித் தருபவர்கள் ஒருபுறம் என்றாலும்இத்தகைய அருங்குணம் மனிதத்தை எப்படி மாமனிதம் ஆக உயர்த்துகிறது பார்த்தீர்களா?

வாழ்த்துதலுக்குரியவர்கள் வாழ்கவாழ்க பல்லாண்டு!

புகழ் வேட்டையும் - பொது வாழ்க்கையும்!

         • Viduthalai

 

ஆதிமனிதன் வேட்டையாடி பிறகு தனக்கு வேண்டிய உணவு மற்றும் பொருள்களைச் சேகரித்து வாழ்ந்தான்அதனால் தான் மனித சமூக வளர்ச்சியின் பல பருவங்களைப் பிரித்தெழுதும் சமூகவியலாளர்கள் முதற் கட்டத்தைவேட்டையாடி சேகரிக்கும் பருவம்  (Hunter - gatherer stage)  என்பதிலிருந்து துவக்குகிறார்கள்அடுத்து வேளாண்மைப் பருவம்பிறகு தொழிற்புரட்சிபிறகு மின்னணுப் புரட்சி வரை நீண்டு வருகிறது.

காடுகளில் மிருகங்களை வேட்டையாடிய மனிதன்தனது சக்திப் பெருக்கத்தால் - அறிவுஆற்றல்வீரம் காரணமாக போர்களுக்குத் தயாராகிநாடுகளை 'வேட்டையாடத் துவங்கி', 'சாம்ராஜ்ய சக்ரவர்த்திபெருமை என்ற போதைக்கு ஆளானான்!

அதன் பிறகு - தொடர்ந்த பதவி வேட்டை,  பண வேட்டைபெண் வேட்டை எல்லாவற்றை யும் தாண்டிபுகழ் வேட்டையின் உச்சத்திற்குச் சென்றான்!

மது குடிப்பவர்கள் போதை ஏறஏற மேலும் மேலும் குடிப்பதைப் போலபுகழுரை கேட்பதை வாடிக்கையாகக் கொண்டவர்களுக்கு இந்த புகழ் வேட்டையே மேலும் மேலும் வெள்ளத்தி னிடையே சுழலில் சிக்கிக் கொள்வதைப் போலசிக்கிக் கொண்டே இறுதியில் அதுவே அவர்களது உயிர்க்கும்உணர்வுக்கும்கூட இறுதியாகி விடுகிறது!

'ஒல்காப் புகழ்என்றும் 'ஓங்கு புகழாகவேஅமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கை தத்துவத்திற்கும் நியதிக்கும் விரோதமானது என்பதை அவர்களில் பலர் அறிவதில்லைவிஞ்ஞானிகளும்தத்துவ ஞானிகளும் உண்மையான பகுத்தறிவுவாதிகளும் புகழ் போதைக்கு ஆளாகாமல் தங்களை தடுத்துக் கொள்வார்கள்.

அவர்கள் தம்பணியில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்வதால் - எவர் தம்மைப் புகழுகிறார்எவர் தூற்றுகிறார் என்று பேதப்படுத்திப் பார்க்காமல் இரண்டையும் சமப் பார்வையோடு பார்த்து இரண்டில் எதற்கும் முக்கியத்துவம் தராமல் தமது லட்சியப் பயணத்திலேயே குறியாக இருப்பார்கள்!

இத்தகைய அறிவியலாளர்களும் தத்துவ ஞானிகளும் மிகவும் அபூர்வத்திலும் அபூர்வமே!

சராசரி மனிதர்கள் புகழ் வேட்டையில் புது இன்பம் கண்டேதுரத்திக் கொண்டே வாழ்வின் இறுதிவரை ஓடுகிறார்கள்ஓடுகிறார்கள்ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்!

எது எல்லை என்றே அவர்கட்கே தெரியாது ஓடிக் கொண்டேகற்றதையும்பெற்றதையும்கூட பயன்படுத்திக் கொண்டு அனுபவித்து மகிழ்ச்சி யடையக் கூட கால அவகாசம் இன்றி இலக்கு தெரியாத பயணிகளாகிறார்கள்!

தந்தை பெரியார் ஒரு தத்துவ ஞானி அந்த விஷயத்தில் என்பது பலருக்குத் தெரியாது!

ஏனென்றால் அவர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பார்க்கும் பார்வை பழுதுபட்ட ஒரு பக்கப் பார்வைஅதனால் அந்த ஆழ்கடலின் முத்துக்களை அவர்களால் மூச்சடக்கிக் கொண்டு வந்து  முடியில் சூட்டிட முடிவதில்லை!

ஒரு சிறு எடுத்துக்காட்டு, "நான் உண்மையை பேசுபவன்நேசிப்பவன் அதன்படி 'பொய்யாது வாழ்பவன்!" என்னை பிறர் பாராட்டும்போது நான் மகிழ்ச்சி அடைந்து உச்சி குளிருவதில்லைகாரணம் என்ன தெரியுமா?

என்னை கொள்கைக்காக 'வாழ்கஎன்று சொல்பவர்களை விடவசவுகளைப் பொழிகிறவர்களே மிக அதிகம் பேர்அவர்களது 'ஒழிககூப்பாடு கண்டு நான் எவ்வளவு துக்கப்பட்டுமனமுடைந்துமேலும் பணி தொடராது அல்லவா ஆக்கப்பட்டிருப்பேன்.

எனவேதான் 'வாழ்கபற்றி மகிழாமல், 'ஒழிகபற்றி விசனிக்காமல்மக்களைத் திருத்திஅறிவு கொளுத்திடும் இந்தப் பணி - மலையேறும் பெரும் பணி என்பதால் நான் இரண்டையும் சம நிலையில் - புகழ்வதையும்இகழ்வதையும் - இரண்டையுமே அலட்சியப்படுத்தி எனது பயணத்தை நடத்திக் கொண்டே செல்லுகிறேன்என்றார்.

இதுதான் லட்சியவாதிகளுக்கென்ற வாழ்க்கை நெறி - புகழ் வேட்டை அல்லஅந்தச் சூ(சு)ழலிலிருந்து தம்மைக் காப்பவனே முழுப் பகுத்தறிவுவாதி என்பதன் அடையாளம் ஆகும்.