வாழ்வியல் சிந்தனைகள்

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் கட்டுரைகள்

பக்கங்கள்

  • முகப்பு

ஞாயிறு, 22 மே, 2022

'முரசொலி'யின் முத்துக்குவியல்!



  February 10, 2022 • Viduthalai

'முரசொலி' நாளிதழ் - திராவிடர் இயக்கம் - கலைஞரால் பெற்ற அறிவுக் கொடை - திராவிடர் கலங்கரை விளக்கு! கலைஞர் அதனை தமது மூத்த முதற் பிள்ளையாகவே கருதி, ஆயிரமாயிரம் சோதனைகள் வந்த போதிலும் தொடர்ந்து நடத்தி, ஆலமரமாய் வளர்த்தார்.

அதன் விழுமிய வேர்கள்தான் நமது திராவிட இயக்கக் கொள்கைச் செல்வங்கள் 'முரசொலி' மாறன், முரசொலி செல்வம் சகோதரர்களும் ஆவர்.

'முரசொலி'  களஞ்சியத்திலிருந்து நூறு பொறுக்கு மணிகளான தொடர் கட்டுரைகளின் தொகுப்புதான், சில மாதங்களுக்குமுன் வெளி வந்த "முரசொலி - சில நினைவலைகள்' என்ற முரசொலி செல்வம் அவர்கள் எழுதியுள்ள அருமையான நவில் தொறும் நூல்!

லட்சக்கணக்கில் விற்பனையாகும் நாளே டுகள் பல உள்ளன - நாட்டில். அவற்றுக்கு லட்சியம் கஜானா நிரம்புவது, பாலிசி - சர்க்குலேஷன் பாலிசி, தான்.

எதிர்நீச்சல் போடும் நாளேடுகளோ லட் சியங்களுக்காக எந்த விலையையும் கொடுத்து வெற்றி நடை - வீர நடைபோடும் ஏடுகள்.

87 ஆண்டுகள் கடக்கும்  தந்தை பெரியாரின் அருட்கொடை  அறிவுக் கொள்கலன் 'விடுதலை' போன்று அடுத்த தலைமுறைகளின் வாழ்வை மாற்றி அமைக்க நாளும் வலுவூட்டி, பரபரப்பு செய்திகளை வியாபாரம் செய்து பிழைப்பு நடத்துவது இவ்வேடுகளின் இலக்கு அல்ல.

மாறாக, கொள்கைப்போரில் விழுப் புண்களை விழுமியங்களாக முன்னிறுத்தி வெற்றி பெறுபவை இவை. 'முரசொலி'யின் நீண்ட பயணத்தில் அது சந்தித்த அடக்கு முறைகளும், சோதனைகளும், பிறகு ஆட்சிக் கான சாதனைகளாக "கெமிக்கல்" மாற்றத்தை உருவாக்கியதை, இத்தலைமுறை இளைஞர்கள் தெரிந்து புரிந்து கொண்டால், நெருப்பாற்றை நீந்துவது எப்படி என்பதை அவர்கள் கற்றுக் கொள்ளும் நல்வாய்ப்பு ஏற்படும்.

அவ்வகையில் நண்பர் முரசொலி செல்வம் அவர்கள் தீட்டியுள்ள நூறு கட்டுரைகளும் - வரலாற்றுச் சுவடுகள். திராவிடர் இயக்கம் சோதனைத் தீயினால் புடம் போட்ட தங்கமாக உயர்ந்து நிற்பது எப்படி  - வெற்றி பெற்றது  எப்படி என்பதை புரிய வைக்கும் புதிய பாடநூல்.

504 பக்கங்கள் - 'படித்தேன்' என்று சொல்லி மகிழலாம்.

தனது கருத்துரிமை காக்க, சட்டமன்றத்தின் கூண்டுக்குள் நிற்க வைத்த நேரத்திலும், முரசொலி செல்வம் தலைகுனியவில்லை - நெஞ்சை நிமிர்த்தி நின்றார். சந்தித்தார்!

காரணம் பெரியாரும், அண்ணாவும், கலை ஞரும் கற்றுத் தந்த பாடங்களைப் படித்து பக்குவப்பட்டு ஆசிரியர் பொறுப்பேற்ற காரணத்தால்!

'வானளாவிய அதிகாரம்' பற்றி பேசியவர்கள் வரலாற்றில் காணாமற் போனாலும், முரசொலி முழங்கிய வண்ணம் இன்றும் அதன் அன்றாடக் கடமையை தொடர்கிறது.

அரசியல் சமூகவியல், சுயமரியாதை நம் திராவிடர் இயக்கச் சொத்து - பாரம்பரிய வாரிசுகள் உரிமை கோருவதில் எந்தத் தவறும் இல்லை.

உரியவருக்கு உள்ள தகுதி கொள்கையில், தியாகத்தில் - அது எப்படி? அதற்கான பதில் தான் இந்த அருமையான அரசியல்  நிகழ்வுகள் அகலமும், ஆழமும்  நிறைந்த தொகுப்பு. 'சீதைப் பதிப்பகம்' அருமையாக வெளியிட்டுள்ளது!

இந்நூலில் உள்ள பல செய்திகள் (வாங்கிப் படியுங்கள் - வரலாறு புரியும்)வரலாற்றுச் சுவடுகள்.

'நெருக்கடி காலத்தில்' விடுதலை, முரசொலி போன்ற கொள்கை நாளேடுகள் சென்சார் என்ற தணிக்கை கொடுமை கத்திரிக்கோலில் சிக்கிய போது தமது எதிர்ப்பை எப்படி கலைஞர் லாவகமாகச் செய்தார் தெரியுமா?

இதில்  "விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்; வெண்டைக்காய், உடலுக்கு நல்லது" என்று தலைப்பிட்டு வெளியான "முரசொலி" நாளேடு தந்த 'அறிவுச் சூடு' சென்சாருக்கு எப்படி என்ற சுவையானதை அறிய படிக்க வேண்டும் இந்த நூலை.

முரசொலி செல்வம் அவர்களது அரசியல் விளக்க நூல். 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று' என்ற பாடம் தரும் நூல்.

அவசியம் படித்துப் பயன் பெறுக! ஆசிரியருக்கு பாராட்டுகள்!!

இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:03 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: முரசொலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

தமிழர் தலைவர், ஆசிரியர்

தமிழர் தலைவர், ஆசிரியர்
கி.வீரமணி

ஜப்பானில் தமிழர் தலைவர்

ஜப்பானில் தமிழர் தலைவர்
உலகின் இரண்டாவது பெரிய புத்தர் சிலை முன்பாக

Translate

Powered By Blogger

மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

  • பொது வாழ்வில் உள்ளோர் கற்க வேண்டிய பாடங்கள் இவை!
    இன்று திராவிடப் பெருந்தகையாள ரும், தென்னிந்திய நல உரிமைச்சங்கம் ஷி.மி.லி.தி. என்ற நீதிக்கட்சியைத் தோற்று வித்தவர்களில் ஒருவருமான த...
  • சில நேரங்களில் சில மணமக்கள்!
    திருமணங்களை வைதீகர்கள் நாள், நட்சத்திரம், ஜோஸ்யம் இவை களையெல்லாம் பார்த்துதான் நிச்சயிக்கின்றனர். இதில் வர்க்க பேதமின்றி, ஏழை, பணக்கார...
  • கொலஸ்ட்ரால் - கவலை வேண்டாம்! - புதிய தகவல்
    ‘கொலஸ்ட்ரால்’ என்ற கொழுப்பு மிகுதிச் சத்து நம் ரத்தத்தில் கூடுதலாகச் சேருவதால், பலவித உடல் நோய் களுக்கு அது வழிவகுக்கும் ஆபத்து என்ற கருத...
  • கவிதை நடையில் ஒரு நூல்!
    பகுத்தறிவுப் பகலவன் என்று அனைவராலும் போற்றப்படும் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி - அண்மைக் காலத்தில், தெரிந்து கொண்டோரும், அறிந்து கொண்டோ...
  • தோழர் பாண்டியன் படைத்த அமுது!
    நேற்று முன்னாள் (4.4.2018) ஆய்வறிஞ ரான மானமிகு தோழர் புலவர் பா. வீரமணி அவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மானமிகு தோழர் தா. பாண்...
  • கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது? (1) & (2)
      கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது?       August 07, 2021  • Viduthalai " அமைச்சர்   பொறுப்பை   ஏற்ற   பிறகு ,  எனக்   கேற்படுகிற ...
  • தமிழிசைப் போராளி எம்.எம். தண்டபாணி தேசிகர் - என்றும் வாழ்பவர்!
      August 27, 2021  • Viduthalai தமிழ்நாட்டில்   தமிழில்   பாடுவதற்கும் ,  அதை   இசை   மேதைகள்   அங்கீகரிப்பதற்குமே   ஓர்   நீண்ட ,  நெடிய   ...
  • எல்லாமே எல்லார்க்கும் - புரிந்துகொள்வோம்!
    தமிழ் மொழி, இலக்கியம் - இவைகளுக்கு மிகப் பெரிய தொண்டாற்றி, மறைந்தும் மறையாதவர்களாக, தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்துவரும் ‘சாவா மாமனிதர்கள்’ -...
  • கலைஞரின் பார்வையில் வாளேந்திய வீரத்தாய் இதோ!
    கடலூரில் அய்யாவின்மீது செருப்புப் போடப்பட்ட இடத்தில்  எழுப்பப்பட்ட சிலை அருகே - நெருக்கடி காலம் முடிந்து,  பெரியார் நூலகம் திறப்பு விழா 1...
  • பாடையது ஏறினும் ஏடது கைவிடேல்!
    புத்தகங்களைப் படித்தாலும்கூட அதனை மீண்டும் மீண்டும் படிக்கும் போதுதான் முழுப் பொருள் நமக்குக் கிடைக்கும். மேலெழுந்த வாரியாகப் படித...

லேபிள்கள்

  • அகம்
  • அகரமுதலி
  • அச்சம்
  • அண்ணா
  • அப்துல் கலாம்
  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அறக்கொடை
  • அறிவியல்
  • அறிவு
  • அறிவுரை
  • அன்பு
  • அனுபவம்
  • ஆப்பிள்
  • ஆய்வு
  • ஆய்வுரை
  • ஆளுமை
  • இடஒதுக்கீடு
  • இணையம்
  • இதயம்
  • இதழ்கள்
  • இரத்த ஓட்டம்
  • இராகுல்
  • இலக்கியம்
  • இலக்கு
  • இளமை
  • இளைஞர்கள்
  • இன்ப வாழ்வு
  • இன்பம்
  • ஈகம்
  • ஈரோடு
  • உங்களில் ஒருவன்
  • உடல்
  • உடற் கொடை
  • உணவு
  • உழைப்பு
  • உறவு
  • ஊர்
  • எதிரி
  • எம் ஆர் ராதா
  • எழுத்து பணி
  • எளிமை
  • என் எஸ் கிருஷ்ணன்
  • ஏகலைவன்
  • ஏமாற்றம்
  • ஏமாற்று
  • ஒழுக்கம்
  • ஒற்றுமை
  • ஓய்வு
  • கசப்பு
  • கட்டளை
  • கடிதம்
  • கண்
  • கதை
  • கரோனா
  • கல்வி வளாகம்
  • கலைஞர்
  • கி.வீரமணி
  • கிரியா
  • குடந்தை
  • குடற்புண்
  • குடியிருப்பு
  • குடும்பம்
  • குழந்தைகள் இல்லம்
  • குன்றக்குடி அடிகளார்
  • கேரளா
  • கேள்வியும் பதிலும்
  • கோபம்
  • கோலி சோடா
  • சத்துணவு
  • சிக்கனம்
  • சிங்கப்பூர்
  • சிரிப்புத் தன்மை
  • சிறந்த மனிதர்
  • சிறுநீரகம்
  • சுரதா
  • சுற்றுப்பயணம்
  • சுற்றுலா
  • சூழ்ச்சி
  • செயலலிதா
  • செல்வம்
  • செவிலியம்
  • செவிலியர்
  • சேமிப்பு
  • சேவை
  • டாக்டர்
  • த.பாண்டியன்
  • தங்கதுரை
  • தண்டபாணி தேசிகர்
  • தமிழ் அகராதி
  • தமிழிசை
  • தலாய் லாமா
  • தன்முனைப்பு
  • தனிமை
  • தா.பாண்டியன்
  • திராவிடர் - ஆரியர்
  • திருமணம்
  • திருவிக
  • திருவையாறு
  • திறமை
  • தூக்கம்
  • தேர்தல்
  • தொண்டறம்
  • தொண்டு
  • தொப
  • தொழில்
  • தோல்வி
  • தோழர் பாலன்
  • நகைச்சுவை
  • நட்பு
  • நன்றி
  • நாவலர்
  • நிகழ்காலம்
  • நிறைவாழ்வு
  • நினைவுகள்
  • நீதியரசர்
  • நீரிழிவு
  • நூல்
  • நூல்கள்
  • நூலகம்
  • நூறு வயது
  • நெஞ்சுவலி
  • நெருப்பு
  • நோயற்ற வாழ்வு
  • நோயெதிர்ப்பு
  • பகத்சிங்
  • பசி
  • பண்பு
  • பறப்போம்
  • பாதுகாப்பு
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பிணி
  • பில்கேட்ஸ்
  • புகழ் வேட்டை
  • புத்தகக் கடை
  • புத்தகம்
  • புத்தம்
  • புத்தர்
  • புத்தாண்டு
  • புயல்- பூகம்பம்
  • புரட்சி
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புறம்
  • பூனை
  • பெண்
  • பெண்கள்
  • பெரியார்
  • பெரும் தொற்று
  • பெரும் பேறு
  • பெற்றோர்
  • பொக்கிஷங்கள்
  • பொது வாழ்க்கை
  • பொய்
  • பொருள்
  • பொருளாதாரம்
  • போதை
  • போலி அறிவியல்
  • போலி போலீஸ்
  • மகளிர்
  • மகிழ்ச்சி
  • மண்டேலா
  • மணியம்மையார்
  • மதம்
  • மரபணு ஆய்வு
  • மரம்
  • மருத்துவம்
  • மறதி நோய்
  • மன உறுதி
  • மனம்
  • மனவளம்
  • மனித நேயம்
  • மனிதகுலம்
  • மனிதநேயம்
  • மனிதம்
  • மாமனிதர்
  • மார்க்சு
  • மாரடைப்பு
  • மின் பதிவு
  • முதியோர்
  • முதிர்ச்சி
  • முதுமை
  • முதுமையாளர்
  • முரசொலி
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடுபனி
  • ராகுல சாங்கிருத்தியாயன்
  • வ.உ.சி
  • வ.ரா.
  • வகுப்பு
  • வரலாறு
  • வரவு-செலவு
  • வலி
  • வன்மம்
  • வா.மு. சேதுராமன்
  • வாக்கு
  • வாழ்க்கை
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வாழ்வியல் சிந்தனைகள்ஒ
  • விஞ்ஞானிகள்
  • விவேக்
  • வெற்றி
  • வெறுப்பு
  • வைக்கம்
  • வைரசு
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜோதிபா பூலே
  • ஜோபைடன்
  • ஸ்டாலின்

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2024 (3)
    • ►  ஜூன் (3)
  • ►  2023 (9)
    • ►  அக்டோபர் (5)
    • ►  பிப்ரவரி (4)
  • ▼  2022 (22)
    • ►  ஜூலை (15)
    • ▼  மே (5)
      • முதுமையாளர்களான" நண்பர்களுக்கு...! (1&2)
      • இதோ ஒரு புத்தகத் தேன் கூடு! - 2
      • 'முரசொலி'யின் முத்துக்குவியல்!
      • "மனித குல வரலாறு" - இதோ ஒரு புதிய வெளிச்சம்!
      • பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (16)
    • ►  ஜனவரி (2)
  • ►  2021 (51)
    • ►  டிசம்பர் (13)
    • ►  அக்டோபர் (10)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (3)
  • ►  2020 (63)
    • ►  டிசம்பர் (32)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (5)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (6)
  • ►  2019 (57)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (8)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2018 (54)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2017 (66)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (25)
  • ►  2016 (103)
    • ►  டிசம்பர் (30)
    • ►  நவம்பர் (26)
    • ►  அக்டோபர் (20)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (10)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (71)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (24)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.