முதுபெரும் மருத்துவ வல்லுநரும், மூத்த மருத்துவருமான டாக்டர் எம்.எஸ்.ராமச்சந்திரன் (MSR) அவர்கள் அனுப்பியுள்ள கரோனாவைத் தடுத்துக்கொள்ள முகக்கவசம் (Mask) அணிந்து கொள்வது பற்றிய சில அரிய தகவல்களை உங்கள் அனைவருடன் பகிர்ந்துகொள்வதில் மன நிறைவு அடைவதால், ஆங்கிலத்தில் அனுப்பியதை அப்படியே தமிழில் தருகிறேன் - பயன் பெறுக - பகிர்ந்து கொள்வதோடு, பரப்பவும்கூடச் செய்து, நம்மாலான எளிய மிகச் சிறிய இந்தத் தகவல்மூலம் பிறருக்கு உதவலாம்.
கேள்வி 1: நாம் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியமா?
பதில்: ஆம்! மிக அவசியம்தான். காரணம், கரோனா வைரஸ் (கோவிட் 19) என்ற தொற்று நோய்த் தடுப்புக்கு இந்த முகக் கவசம் 5 மடங்கு பாதுகாப்பைத் (வெறும் நிலையிலிருந்து) தருகிறது. இருமும்போதும், தும்மும்போதும், பேசும்போதும் மூக்கில், வாயிலிருந்து வெளிவரும் துகள்களி லிருந்து நம்மை முகக்கவசம் பாதுகாக்கிறது. அதனால்தான், மத்திய அரசு, குடிமக்கள் இதனை வெளியே செல்லும்போது கட்டாயம் முகத்தில் அணிந்துகொள்ளுவது மிக அவசியம் என்று கூறியுள்ளது.
கேள்வி 2: நான் முகக்கவசம் N-95 என்பதை அணியவேண்டுமா?
பதில்: தேவையில்லை. N-95 என்ற முகக்கவசம் அதிகமாகக் கிடைப்பதில்லை. தேவைகள் அதிகம் - அது மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் அறுவைச் சிகிச்சையின்போது முகத்தில் அணிய வேண்டிய தேவையாக - மருத்துவமனைகளில்கூட குறைந்தபட்ச ரிஸ்க் இருக்கும் கேசுகளில், மற்ற முகக் கவசங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள், N-95 என்பதை அல்ல. N-95 முகக்கவசம் மிகவும் இறுக்கமானதும்கூட - 24 மணிநேரமும் அதை அணிந்துகொண்டே இருப்பது - மூச்சை ஒழுங்குபடுத்துவதற்கு அவசியமில்லை. சுகாதாரப் பணியாளர்களுக்குத்தான் இது இன்றியமையாத தேவையாகும். (எல்லோரும் அதைத் தேடி, நாடிப் போய் பயன்படுத்த எண்ணாதீர்).
கேள்வி 3: முகக்கவசம் SS99என்பதனால் ஏற்படும் நற்பலன்கள் என்ன?
பதில்: முகக்கவசம் SS99 என்பது முகக்கவசம் N-95 என்பது போலவே நமக்கு கரோனா தொற் றிலிருந்து பாதுகாப்புத் தருவதுதான். ஆனால், இது சுவாசிப்பதற்கு லகுவாகவும், எளிதாகவும் இருக்க உதவும் ஒன்று. காரணம், இது ஆர்கானிக் பருத்தி யினால் மிகவும் மென்மையான நூலில் தயாரிக்கப்படுகிறது. நாள் முழுவதும் அணிந்துகொண்டே இருந்து பயன்பெற இது பெரிதும் வசதியாக இருக்கும். இது கிருமிகள் நுழையாதவாறு 99 விழுக்காடு தடுப்பு வடிகட்டலைச் செய்துவிடக் கூடியதாகும். Bacterial Filtration Efficiency (BFE).
(Viral bravulz) இது Sitra என்பதால், நற்சான்று அளிக்கப்பட்ட ஒன்றாகும். இது நீர்த்தி வலைகள் உள்ளே நுழையாதவாறு, நுழைந்தாலும் ஈர்த்துக் கொள்ளும் தன்மையதும்கூட.
கேள்வி 4: மறுபயன் (Reusable) முகக்கவசம் ஏன் தேர்வு செய்யப்படுகிறது?
பதில்: இத்தகைய மறுபயன் - மீண்டும் பயன்படுத்தும் வசதியுள்ள முகக்கவசம் (பரிந்து ரைக்க) என்பது சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் அதனுடன் ஒத்துப்போகும் ஒன்று. (Environmental Friendly) விலையும் மலிவு - மற்ற முகக் கவசங்களை ஒப்பிடும்போது!
SS99 முகக்கவசங்களை 25 தடவை பயன் படுத்தலாம் - பாதுகாப்பாக என்று SITRA (பஞ்சு மில்கள் நூல் ஆய்வமைப்பு) நற்சான்று வழங்கி யுள்ளதால், நீங்கள் வெளியே செல்லும்போது அணிவதற்கு இதுவே வசதியான ஒன்று அல்லவா? (தூக்கி எறியும் முகக்கவசம் ஒரே ஒரு தடவைதான் பயன்படுத்த முடியும்).
சிங்கப்பூர் அரசு அதன் குடிமக்களுக்கு இந்த SS99 முகக் கவசத்தைத்தான் (மூன்று முகக் கவசங்கள்) தருகிறது.
கேள்வி 5: இதன் (முகக்கவசம் SS99 என்பதன்) விலை எவ்வளவு?
பதில்: SS99 என்பது நம் நாட்டில் 30 ரூபாய் விலையில் உள்ளது. சமூகப் பொறுப்பான விலை தான் இது; இதை 25 முறை பயன்படுத்தலாம் என்று சொல்லும்பொழுது, கணக்குப் போட்டுப் பார்த்தால், ஒரு தடவை பயனுக்கு SS99 முகக் கவசத்திற்கு நாம் செலவழிக்கும் தொகை 1.2 ரூபாய்தானே!
உயர்ந்த பருத்திப் பஞ்சால் சிறந்த தொழில் நுட்பத்துடன் வரும் அதை அனைவரும் பயன் படுத்தலாமே!
சரியானதைத் தேர்வு செய்தால் முறையான பலன் கிடைக்கும் - இல்லையா?
- விடுதலை நாளேடு, 13.4.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக