இன்றைக்கு (ஏப்ரல் 7) உலக நலவாழ்வு நாளாகும்.
நோய் வருமுன்னர் காத்து, உடற்பரிசோதனை களை ஆண்டுக்கு ஒருமுறையோ, இருமுறையோ - மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று, முப்பாலரும் (திருநங்கையர் உள்பட) செய்து கொண்டு, நோயாளி என்ற மனப்போக்கிலிருந்து நம்மை நாம் விடுதலை செய்துகொள்ள முயற் சிக்கவேண்டும்.
நோய் வந்து அவதிக்குள்ளானால் அது நம்மை மட்டுமா பாதிக்கிறது? நமக்கு மட்டும்தான் தொல் லையா? கூடுதல் தொல்லை - துன்பச் சுமையாக நமது நலவிரும்பிகளான நமது உற்றார், உறவினர், நண்பர்கள் இத்தனை பேர்களையும் மிக அதி களவில் பாதிக்கிறதே! அது வேதனையல்லவா?
1. குறைந்தபட்சம் 30 மணித்துளிகள் முதல் 40, 45 மணித்துளிகள் நாள்தோறும் நடைபயிற்சிகளை மேற்கொள்வது இன்றியமையாதது!
2. உணவில் எச்சரிக்கை - ருசியுள்ளது என் பதைவிட - நலவாழ்வுக்கு (ஆரோக்கிய உணவு) உகந்ததாக அமைத்துக் கொள்ளல் அவசியமாகும்!
3. பசிக்காமல் உண்ணாதீர்கள்.
4. தூக்கம் வரவில்லை என்று படுக்கையில் புரளாதீர்கள் - உடனே எழுந்து விளக்கைப் போட்டு தூக்கம் வரும்வரை ஏதாவது நல்ல புத்தகங்களைப் படித்துக்கொண்டே - தூக்கம் வந்தவுடன் தூங் குங்கள்!
நீண்ட நேரம் வேலை மேசையின் முன்னேயே அமர்ந்து மணிக்கணக்கில் செலவிடுவது, இதய நோய்க்கு மெல்ல மெல்ல அடியோடு அச்சாரம் கொடுப்பதாகும். எனவே, ஒவ்வொரு அரை மணிநேரமும் எழுந்து சிறுசிறு பணிகளில் ஈடுபட்டு, மறுபடியும் உட்கார்ந்து பணி தொடருங்கள் என்கிறார் பிரபல இதய சிகிச்சை மருத்துவர் டாக்டர் ரமாகாந்த் பாண்டா (இவர்தான் ‘ஏசியன் ஹார்ட் இன்ஸ்டிடியூட்’ என்ற பிரபல இதய நோய் சிகிச்சை மருத்துவமனையில் நெம்பர் ஒன் டாக்டர் ஆவார்!) இவர் முன்பு ‘எய்ம்ஸ்’ என்ற பிரபல டில்லி மருத்துவ மனையிலும், அமெரிக்காவின் பிரபல இதய நோய் மருத்துவப் பிரிவான ‘கிளவ் லாண்ட் கிளினிக்‘ (Cleveland Clinic)
அமெரிக்காவின் பிரபல இதய நோய் நிபுணர் Dr. Floyd D. Loop (டாக்டர் ப்ளையட் டி லூப்) அவர்களிடம் பயிற்சி பெற்று திரும்பிய அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.
இவரது சில அறிவுரைகள் இதோ:
1. நம் தாத்தா, பாட்டிகளைப் பாருங்கள் - அவர் களைப் பின்பற்றுக.
2. உணவு, தூக்கம், நடை இவைகளை அவர் களைப் போல் பின்பற்றுங்கள்!
3. தூக்கம் ஒரு முக்கிய அம்சம் - மறவாதீர்!
4. உடற்பயிற்சிக்கே நேரமில்லீங்க டாக்டர் என்பது காலாவதியான சமாதானம் - அதை எப்போதும், எவரிடமும் சொல்லாதீர்கள். 40 நிமிடம் நடைபயிற்சி நல்லது. இன்றியமையாதது.
5. மன அழுத்தம்தான் நோய்க்கு முக்கிய கார ணம். அதை பல உடற்பயிற்சிகள், யோகப் பயிற்சி யின்மூலம் தவிர்த்துவிடுங்கள்.
6. உங்கள் உடல்நிலைபற்றி நீங்களே அவ்வப் போது தவறாமல் ஆராய்ந்து, தவிர்க்கவேண்டிய வைகளைத் தவிர்க்க முயலுங்கள் - என்கிறார்.
இந்த டாக்டரின் உணவுத் தட்டினைப் பார்ப் போமா - வாருங்கள்!
1. பெரும்பாலும் காய்கறி உணவுதான் வாரத்தில் 6 நாள்களுக்கு.
2. ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி, மீன் உணவு.
காலை:
நார்ச்சத்துள்ள உணவு - 2, 3 முட்டைகளின் வெள்ளைக்கரு. பல தானியங்களால் ஆன ரொட்டி, காய்கறிகள், பழங்கள்.
மதியம்:
கார்போஹைட்ரேட் மாவுச் சத்து உணவைத் தவிர்ப்பது நல்லது. சில மீன் துண்டுகள், காய்கறிகள், பருப்பு, பழ வகைகள்.
இரவு:
சூப், சாலட் (ஷிணீறீணீபீ) என்ற காய்கறி கூட்டணி உலர்ந்த அல்லது பருவப் பழங்கள்.
கவனிக்க:
அது அவரது முறை - நாம் நமக்கேற்ப இதனை எப்படி செய்துகொள்ள முடியுமோ அப்படி மாற்றிக் கொள்ளுங்கள்.
நமது மருத்துவ உணவு ஆலோசனை, அறி வுரையே நமக்குத் தக்க வழிகாட்டி.
சீக்கிரம் தூங்கி, அதிகாலை எழுதலை நல்ல பழக்கமாக்கிக் கொள்ளுதல் மிகவும் எடுத்துக் காட்டானது.
உங்களுக்கு இவைகள் எல்லாம் தெரிந்தது - புரிந்ததுதான். இது நினைவூட்டலே!
அவ்வாறு கடைபிடித்து ஒழுகுங்கள் - அதுதான் முக்கியம்! முக்கியம்!! முக்கியம்!!!
- கி.வீரமணி
-விடுதலை,7.4.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக