பக்கங்கள்

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

புத்தகத்தால் பெற்ற புதுவாழ்வு - பாரீர்!

தனது 17 ஆவது வயதில் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல்,

25 வயதில் தாயார் காலமானார்,

இவரே,  26 வயதில் கருச்சிதைவுக்கு ஆளா னார்,

27 வயதில் திருமணம் செய்து கொண்டு - அது ஒரு வெற்றிகரமான திருமண வாழ்வாக அமையாமல், ஒருவருக்கொருவர் வசைபாடும் வாடிக்கை நிறைந்த வாழ்க்கையாகவே இருந்தது!

இந்தச் சூழ்நிலையில், ஒரு மகள் - (பெண் குழந்தை) பிறந்தது!

28 ஆவதுவயதில் அதன் பின் மணவிலக்கு (Divorce)   ஏற்பட்டது! - மன அழுத்தம்.

வயது 29 இல் குழந்தையுடன் உள்ள தனி ஒரு தாயாகவே வாழும் அவலம் அந்தப் பெண்ணுக்கு ஏற் பட்டது! - மன அழுத்தம்.

தனது 30 ஆவது வயதில் வேறு சோகத்தில் சிக்கித் தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்தார்!

பிறகு தனக்குள்ள திறமைபற்றி சற்றே எண்ணினார். மற்றவர்களைவிட தனக்கு எழுத்துத் திறமை அதிகம் உண்டு என்று தன்னைப்பற்றி சுய மதிப்பீட்டை அறிந்து - புத்தகம் - புதினம் - எழுதத் தொடங்கினார்!

முதலில் அவரால் பதிப்பகங் களுக்கு அனுப்பப்பட்டுப் புத்தக எழுத்தாகிட அச்சுக்குத் தகுதியில்லை என்று அவர்களால் திருப்பி அனுப் பப்பட்டன - பல பதிப்புகள்.

அசரவில்லை; முயற்சியைத் தளர விடவில்லை. பிறகு அவரது முதல் புத்தகம் 31 ஆவது வயதில் வெளி வந்தது. 35 ஆவது வயதில் 4 புத் தகங்கள் அபார விற்பனையில் உச் சத்தைத் தொட்டன! அவ்வாண்டின் தலைசிறந்த நூலாசிரியர் என்ற சிறப்புத் தகுதி - இவருக்கு அறிவிக் கப்பட்டது!

இவர் எழுதிய நூல்கள் அடுத்து எப்படி உலகம் முழுவதும் பல லட்சக் கணக்கில் விற்பனையாகியது?

42 ஆவது வயதில் 11 மில்லியன் காப்பிகள் விற்றன; அதாவது ஒரு கோடியே பத்து லட்சம் புத்தகங்கள் விற்பனை!

அந்த ஜே.கே.ரவுலிங் (J.K.Rowling) எழுதிய ஹாரிபாட்டர் (Harry Potter) இப்போது 15 மில்லியன் - ஒன்றரை கோடி புத்தகங்கள் விற்பனையின் உச்சத்திற்குச் சென்று சாதனை சரித்திரம் படைத்துள்ளது.

நான் அமெரிக்காவிற்கு சில ஆண்டுகளுக்குமுன் சென்றபோது, புத்தகக் கடை (Barnes & Noble) அது பிரபல புத்தகக் கடை - அங்கே புத்த கங்கள் வாங்கச் சென்றேன். பாஸ்டன் நகருக்குப் பக்கத்து ஊரில் உள்ள கடை அது!

ஏராளமான மக்கள் ‘க்யூ’ வரிசை யில் நின்று புத்தகங்களைப் பெற்றுச் செல்லும் காட்சி கண்டு திகைத்தேன் - வியந்தேன்.

Harry Potter    - அது பெரிதும் பேய்க் கதைகள் - கற்பனை அதன் பல பாகங்கள் தொடர் புதினங்களாக இந்த எழுத்தாளரால் எழுதி வெளி வருமுன்னரே பதிவு செய்து முதலில் வாங்கவும், பதிவு செய்யாது வாங்கு வோர் இரவே சென்று புத்தகக் கடையின்முன் ‘முற்றுகை’ இட்டு நிற்கும் நிலையும் மிகவும் அதிசயத்தக்கதாக இருந்தது!

ஒவ்வொருவரின் திறமையும் புதைந்துள்ளது; வெறும் தோல்விகள் தொடர் சோகங்களால் மனமுடைந்து மூலையில் முடங்கிவிடக் கூடாது.

விழுவதைவிட உடனே எழு வதும், நிற்பதும், ஓடுவதும்தானே முக்கியம்?

அதைத்தான் ‘ஹாரிபாட்டர்’ தொடர் நூல் ஆசிரியை ஜே.கே.ரவுலிங் அம்மையார் வாழ்க்கைச் சாதனை உலகுக்குப் பறைசாற்றி யுள்ளது!

எனவே, தோல்வி, துன்பம், துயரம் உங்களை சல்லடைக் கண்களாகத் துளைத்தாலும் அஞ்சாதீர்; தயங்காதீர்! உங்கள் திறமையை நம்பி புது வாழ்வு வாழக் கற்றுக்கொள்ளுங்கள்!

அம்மையாரின் வாழ்க்கையே நமக்கு ஒளி - ஒலி பாடம் அல்லவா?

- கி.வீரமணி

-விடுதலை,24.4.17

புதன், 26 ஏப்ரல், 2017

உலக நல வாழ்வு நாளில் ஓர் நினைவூட்டல்!

இன்றைக்கு (ஏப்ரல் 7) உலக நலவாழ்வு நாளாகும்.

நோய் வருமுன்னர் காத்து, உடற்பரிசோதனை களை ஆண்டுக்கு ஒருமுறையோ, இருமுறையோ - மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று, முப்பாலரும் (திருநங்கையர் உள்பட) செய்து கொண்டு, நோயாளி என்ற மனப்போக்கிலிருந்து நம்மை நாம் விடுதலை செய்துகொள்ள முயற் சிக்கவேண்டும்.

நோய் வந்து அவதிக்குள்ளானால் அது நம்மை மட்டுமா பாதிக்கிறது? நமக்கு மட்டும்தான் தொல் லையா? கூடுதல் தொல்லை - துன்பச் சுமையாக நமது நலவிரும்பிகளான நமது உற்றார், உறவினர், நண்பர்கள் இத்தனை பேர்களையும் மிக அதி களவில் பாதிக்கிறதே! அது வேதனையல்லவா?

1. குறைந்தபட்சம் 30 மணித்துளிகள் முதல் 40, 45 மணித்துளிகள் நாள்தோறும் நடைபயிற்சிகளை மேற்கொள்வது இன்றியமையாதது!

2. உணவில் எச்சரிக்கை - ருசியுள்ளது என் பதைவிட - நலவாழ்வுக்கு (ஆரோக்கிய உணவு) உகந்ததாக அமைத்துக் கொள்ளல் அவசியமாகும்!

3. பசிக்காமல் உண்ணாதீர்கள்.

4. தூக்கம் வரவில்லை என்று படுக்கையில் புரளாதீர்கள் - உடனே எழுந்து விளக்கைப் போட்டு தூக்கம் வரும்வரை ஏதாவது நல்ல புத்தகங்களைப் படித்துக்கொண்டே - தூக்கம் வந்தவுடன் தூங் குங்கள்!

நீண்ட நேரம் வேலை மேசையின் முன்னேயே அமர்ந்து மணிக்கணக்கில் செலவிடுவது, இதய நோய்க்கு மெல்ல மெல்ல அடியோடு அச்சாரம் கொடுப்பதாகும். எனவே, ஒவ்வொரு அரை மணிநேரமும் எழுந்து சிறுசிறு பணிகளில் ஈடுபட்டு, மறுபடியும் உட்கார்ந்து பணி தொடருங்கள் என்கிறார் பிரபல இதய சிகிச்சை மருத்துவர் டாக்டர் ரமாகாந்த் பாண்டா (இவர்தான் ‘ஏசியன் ஹார்ட் இன்ஸ்டிடியூட்’ என்ற பிரபல இதய நோய் சிகிச்சை மருத்துவமனையில் நெம்பர் ஒன் டாக்டர் ஆவார்!) இவர் முன்பு ‘எய்ம்ஸ்’ என்ற பிரபல டில்லி மருத்துவ மனையிலும், அமெரிக்காவின் பிரபல இதய நோய் மருத்துவப் பிரிவான ‘கிளவ் லாண்ட் கிளினிக்‘  (Cleveland Clinic)  
அமெரிக்காவின் பிரபல இதய நோய் நிபுணர் Dr. Floyd D. Loop   (டாக்டர் ப்ளையட் டி லூப்) அவர்களிடம் பயிற்சி பெற்று திரும்பிய அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.

இவரது சில அறிவுரைகள் இதோ:

1. நம் தாத்தா, பாட்டிகளைப் பாருங்கள் - அவர் களைப் பின்பற்றுக.

2. உணவு, தூக்கம், நடை இவைகளை அவர் களைப் போல் பின்பற்றுங்கள்!

3. தூக்கம் ஒரு முக்கிய அம்சம் - மறவாதீர்!

4. உடற்பயிற்சிக்கே நேரமில்லீங்க டாக்டர் என்பது காலாவதியான சமாதானம் - அதை எப்போதும், எவரிடமும் சொல்லாதீர்கள். 40 நிமிடம் நடைபயிற்சி நல்லது. இன்றியமையாதது.

5. மன அழுத்தம்தான் நோய்க்கு முக்கிய கார ணம். அதை பல உடற்பயிற்சிகள், யோகப் பயிற்சி யின்மூலம் தவிர்த்துவிடுங்கள்.

6. உங்கள் உடல்நிலைபற்றி நீங்களே அவ்வப் போது தவறாமல் ஆராய்ந்து, தவிர்க்கவேண்டிய வைகளைத் தவிர்க்க முயலுங்கள் - என்கிறார்.

இந்த டாக்டரின் உணவுத் தட்டினைப் பார்ப் போமா - வாருங்கள்!

1. பெரும்பாலும் காய்கறி உணவுதான் வாரத்தில் 6 நாள்களுக்கு.

2. ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி, மீன் உணவு.

காலை:

நார்ச்சத்துள்ள உணவு - 2, 3 முட்டைகளின் வெள்ளைக்கரு. பல தானியங்களால் ஆன ரொட்டி, காய்கறிகள், பழங்கள்.

மதியம்:

கார்போஹைட்ரேட் மாவுச் சத்து உணவைத் தவிர்ப்பது நல்லது. சில மீன் துண்டுகள், காய்கறிகள், பருப்பு, பழ வகைகள்.

இரவு:

சூப், சாலட் (ஷிணீறீணீபீ) என்ற காய்கறி கூட்டணி உலர்ந்த அல்லது பருவப் பழங்கள்.

கவனிக்க:

அது அவரது முறை - நாம் நமக்கேற்ப இதனை எப்படி செய்துகொள்ள முடியுமோ அப்படி மாற்றிக் கொள்ளுங்கள்.

நமது மருத்துவ உணவு ஆலோசனை, அறி வுரையே நமக்குத் தக்க வழிகாட்டி.

சீக்கிரம் தூங்கி, அதிகாலை எழுதலை நல்ல பழக்கமாக்கிக் கொள்ளுதல் மிகவும் எடுத்துக் காட்டானது.

உங்களுக்கு இவைகள் எல்லாம் தெரிந்தது - புரிந்ததுதான். இது நினைவூட்டலே!

அவ்வாறு கடைபிடித்து ஒழுகுங்கள் - அதுதான் முக்கியம்! முக்கியம்!! முக்கியம்!!!

- கி.வீரமணி

-விடுதலை,7.4.17

வாழ நினைத்தால் வாழலாம் - வழியா இல்லை?

வாழ்வியல் சிந்தனைகள் -கி.வீரமணி



ஜப்பானின் வளர்ச்சி - நாகசாகி, ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சு - அக்கதிர் வீச்சுகளால் இன்றளவும் தாக்கும் விளைவுகள் - இவை எல்லாம் மனித குலம் தனக்குத்தானே அழுது புலம்பி, பாடம் பெறவேண்டிய அவலங்கள் ஆகும்!

அத்தகைய ஜப்பான் நாட்டின் மீட்டுருவாக்கம் எவ்வளவு வியக்கத்தக்கது!

இன்றும் அந்த நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறியுள்ள நாடு.

கட்டுப்பாடும், அடக்கமும், கடும் உழைப்பும் நாணயமும் தான் அவர்களை இவ்வளவு இடை யூறுகள், இயற்கை உபாதைகளான ‘சுனாமி’ என்னும் ஆழிப்பேரலைகள், புயல் - பூகம்பங்கள், எரிமலை வீச்சுகள் இப்படி எத்தனையோ சோத னைகள்

அம் மக்களை படாதபாடுபடுத்தினாலும் கூட, அவற்றைத் துணிவோடு சந்தித்து, துவண்டுவிழாமல் மீண்டும் தங்களது வழமையான அன்றாடப் பணி களை எவ்விதக் கிலேசமும் இன்றி சாதித்து மகிழ்கிறார்கள்!

இரண்டாம் உலகப் போரினால் பாதிக்கப்பட்ட இரு நாடுகள் ஒன்று ஜெர்மனி, இன்னொன்று ஜப்பான்.

இருநாட்டு நாணயங்களின் மதிப்பும் ‘கெட்டி யாகவே’ - குறையாத அளவு நிலைநிறுத்தப்பட்டு வருகிறதே. இதற்கெல்லாம் மூலகாரணம் அந்நாட்டு மக்களின் கடும் உழைப்பும்தானே!

ஜப்பானில் ‘ரோபோக்கள்’ மனிதர்களின் பணி அத்தனையும் செய்து கொள்ளும் அளவுக்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது!

இன்று வந்துள்ள ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டில் ஒரு சிறு செய்தி. எவ்வளவு பெரிய நம்பிக்கையை - உடல் நலம் குன்றியவர்களுக்குக் கூட - ஏற்படுத்திக் கொடுக்கிறது!

பக்கவாதத்தினால் உடலின் பகுதி பாதிக்கப்பட்டு கால்களைக் கொண்டு நடக்க முடியாமல் முடக் கப்பட்டுள்ளவர்கள் கூட, உடற்பயிற்சி செய்து நடந்து தங்களது சிந்தனையில் ‘வாழ நினைத்தால் வாழலாம் - வழியா இல்லை கேளுங்கள்’ என்பது போல ஒரு புதிய ‘ரோபோ’ ஒன்றைக் காலில் இணைத்துக் கொண்டு - உடை கால்சட்டை போல - டிரெட்மில்லில் (Tread Mill)நாள்தோறும் நடைபயிற்சி செய்தால் நலவாழ்வை மீட்டெடுக்க முடியும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது - நிரூபிக்கவும் பட்டுள்ளது.

டோக்கியோவின் டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷனின் தலைமையகத்தில் இணைத்துக் கொள்ள ‘ரோபோ கால்களையே’ முட்டிக்குக் கீழே இணைத்து, இதற்கென பிரத்தியேகமாக உருவாக் கப்பட்ட டிரட்மில்லில் நடக்க வைக்கலாமாம்!

இந்த ‘வெல்வாக் ஷ்ஷ்-1000 ww-1000 (Wellwalk-ww1000 system)என்பது ஒரு மோட்டார் இணைந்த இயந்திர உறுப்பினை முட்டிக்கீழே இணைப்பதால் நோயாளிகள் இதனைக் கட்டிக் கொண்டு, ‘டிரட் மில்லில்’ நடக்கப் போதிய பயிற்சியைப் பெற்றுக் கொள்ளலாம்!

இதற்கென தயாரிக்கப்பட்ட ‘டிரட்மில்’ கருவி இவர்களது எடையையும் தாங்கும் சக்தியை உள்ளடக்கியதாம்!

இத்தகைய வசதிகளை உள்ளடக்கிய ரோபோடிக் நடைபயிற்சி கருவிகள் முதலில் நூறு (100) தயாரித்து - மருத்துவ வசதிகளுடன் கூட இக்கருவிகளை - டெயோட்டோ கம்பனி வாடகைக்கு விடுகிறார் களாம்!

மனித அறிவின் மகத்தான வளர்ச்சிக்கு எல்லை தான் ஏது?

“எல்லாம் தலையெழுத்துப்படிதான் நடக்கும்”, “உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பறவை யாகுமா?”, “ஏதோ காலத்தை தள்ளிக்கொண்டு போகிறேன்”, “வெந்ததைத்தின்று விதி வந்தால் சாவோம்” ‘‘ஆண்டவன் விட்ட வழி!’’ என்று கூறும் மடமைக்கோ, சோம்பலுக்கோ சாக்குருதி வேதாந் தத்திற்கோ அங்கே இடமே இல்லை பார்த்தீர்களா?

எல்லாம் நன்நம்பிக்கையுடன் கூடிய ‘நம்மால் முடியும்’ என்ற திடசித்தமே!
-விடுதலை,13.4.17

திங்கள், 24 ஏப்ரல், 2017

பகுத்துண்டு வாழும் அறிவின் செறிவே புத்தகம்!



படிப்போம் - பரப்புவோம் - பயன்பெறுவோம்!எனவே, தனது எழுத்தை - தான் பெற்ற செல்வத்தை - தான் கற்றதை உலகப் பொதுவாக்கும் உயர்தனி முறையே புத்தகம் என்ற அறிவு வாய்க்கால்!க்ஷீக்ஷீக்ஷீமனிதனுக்கு மாண்பு தருவது!

’’மற்றவற்றினின்று மனிதனைப் பிரிப்பது;உள்ளங் கண்டதை உலகுக் குரைத்தல்இம்மியும்கூட இல்லை என்றறிக!தனி ஒரு மேன்மை சற்றும் இல்லை;பிற உயிர்களிடம் பிரச்சாரம் செய்யும்என்பது, மனிதனிடத்தில் தானுண்டு!‘‘

உள்ளம் கண்டதை உள்ளவர்க் குரைத்தல்’’கேளீர், அதனைக் கேளீர், கேளீரே!மானிடத்தில் வாய்த்த சிறப்பெது,உயிர்கட் கில்லாத தென்ன?முளைத்த விலங்கு முதற் சுள்ளான்வரை‘‘இனியோன்’’ ‘‘சிறந்தோன்’’ எனப் படுகின்றான்?மனிதன் ஏன் நிலத்தில் வாய்த்த உயிர்களில்குறிகள் உண்டு; நெறிகள் உண்டு!மனிதனுக்கு; மற்ற உயிர்கட்குக்மனிதன் அறிபவன்;

மற்றவும் அறிவன!துன்புறுவான் இவன்; துன்புறும் பிறவும்!இன்புறும் பிற உயிர்; இவனும் அங்ஙனே!மற்றவை உறங்கும்; மனிதனும் உறங்குவான்‘‘மனிதன் உண்போன்; மற்றவும் உண்பன!இதோ புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் இக்கருத்தை கவிதை வடிவில் எவ்வளவு சுவை யாகத் தருகிறார் - படித்து, சுவைத்து இன்புறுங்கள்!இதுதான் மனிதனை, மிருகங்களிடமிருந்து பிரித்து உயர்த்திக் காட்டும் உன்னதப் பண்பு!பகுத்தறிவின் மேன்மை - பிறர்க்கு அதன் பயனைப் பரப்புதலே!மனித அறிவின் சிறப்பு - பகுத்தறிவு!‘‘மனிதப் பிறவிக்கு அடுத்தாற்போல், இவ்வுலகில் விந்தையான பொருள் புத்தகம்தான்;

ஏனெனில், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளவர்களு டனும், நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்தவர்களுடனும் நாம் இன்னமும் உரையாடி இன்புற உதவும் அரிய சாதனம் புத்தகம்‘’ என்று கிங்ஸ்லி என்ற அறிஞர் கூறுவதில்தான் எவ்வளவு ஆழமான பொருள் புதைந்துள்ளது பார்த்தீர்களா?அதுபோலவே, பார்வையாளர்கள் நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லாத நிலையில், ‘ஜாலியாக’ - மாணவர் இளைஞர் பட்டாளம் உள்பட பல வயதினரும் - குடும்பம் குடும்பமாக வந்து குளுகுளு அறையில், ‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர்தருவான’ புத்தகக் காட்சியகத்தில் - நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்திற்குள் அறிவுத் தேடல் வேட்டையில் ஈடுபட்டு அகமகிழ்ச்சியுடன், அரை விலை (பாதி) வணிகத்தின் பயனை நுகர்ந்து, பை பையாக சிலர், மூட்டை மூட்டையாகப் பலர் இப்படி வாசக நேயர்கள் வாரிச் சென்ற காட்சி மிக்க மகிழ்ச்சி ஊற்றை இறைத்தது!அவர்களில் பலர் மகிழ்ச்சியோடு சொன்னார்கள்! நம்மிடம் இறுதி நாள் முடிந்தவுடன், ‘‘அய்யா, இம்முறைதான் நாங்கள் கொண்டு வந்து போட்ட புத்தகங்கள் - மற்ற விற்பனைக் கண்காட்சிகள் போல் இல்லாது - அத்தனையும் விற்றுத் தீர்ந்து பணப் பையுடன் மட்டும்தான் திரும்பச் செல்லுகிறோம்‘’ என்றார்கள் - மகிழ்ச்சி பொங்க!இந்த 50 விழுக்காடு தள்ளுபடி வாய்ப்பில் விற்பனைக்காக அப்படிப்பட்ட பாதிக்கப்பட்ட வர்களும், மற்றவர்களும்கூட பங்கெடுத்தனர்.எவ்வளவோ கூக்குரலிட்டும்கூட அவர்களுக்கு அரசு தரப்பில் குறைந்தபட்ச நிதி உதவி - நட்ட ஈடாக - ஆறுதல் தொகையாகக் கூடத் தராதது வேதனை அளித்த ஒன்றுதான்!சென்ற ஆண்டு ஒரு தனித்த அனுபவம்! அதற்கு சில மாதங்கள் முன்பு டிசம்பரில் (2015) சென்னையில் பெய்த தொடர் மழை - வெள்ளம் முதலியவைகளால் வீடுகளில், குடோன்களில் இருப்பாக வைக்கப்பட்டி ருந்த பல பதிப்பகங்களின் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள், படிவங்கள் மழை வெள்ளத்தால் பாழ்ப்படுத்தப்பட்டு, பல ஆயிரம் - லட்சக்கணக்கில் ரூபாய் பதிப்பக உரிமையாளர்களான நண்பர்கள் பெருநட்டத்திற்கு ஆளானார்கள்.சென்னையில் பெரியார் திடலில் கடந்த சில ஆண்டுகளாகவே 50 விழுக்காடு தள்ளுபடி தந்து, புத்தகங்கள் பரவுவதை - படிப்பதை - ஊக்குவிக்கும் உயர் நோக்கத்தில் பல்வேறு பதிப்பாளர்கள் - குறைந்தபட்சம் 50 பதிப்பகத்தினர் பங்கேற்கும் புத்தக விற்பனை நிலையங்களை அமைத்து, புத்தக வாசிப்பை நேசிப்பாகவும், சுவாசிப்பாகவும் ஆக்கி டும் பழக்கத்தை - வழக்கமாக்கிடும் நற்றொண்டை பெரியார் அறக்கட்டளையான ‘‘பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவனம்‘’ செய்து வருகிறது!இந்த வாரம் உலகம் முழுவதும் புத்தக நாளாக (ஏப்ரல் 23) கொண்டாடும் வாரம்!

-விடுதலை ,21.4.17

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

கருத்தாளுமை கொண்ட கலங்கரை வெளிச்சம்!

வாழ்வியல் சிந்தனைகள்-கி.வீரமணி



சென்ற 24.3.2017 அன்று தஞ்சை பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகமும், குப்பத்தில் (ஆந்திர மாநிலம்) உள்ள திராவிடப் பல்கலைக் கழகமும் இணைந்து வல்லத்தில் நடத்திய மொழிப் பெயர்ப் பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.

அப்போது, அங்கு பயிற்சியாளர்களுக்குப் பாடம் எடுத்த, பெரியார் உயராய்வு மய்யத்தின் வருகைப் பேராசிரியராக  உள்ள முனைவர் திருமதி மு.வளர்மதி அவர்கள், எனக்கொரு நூலை பரிசளித் தார்கள்!

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரி யராகப் பணியாற்றிய முனைவர் மு.வளர்மதி அவர்கள் எழுதி, அந்நிறுவனம் வெளியிட்ட ஓர் நூல். அற்புதமான - ஆழமான - செறிவான கருத்துக் கருவூலமான அந்நூல் முதற்பதிப்பு 1994 ஆம் ஆண்டு வெளிவந்ததாகும்!

‘‘காண்டேகரும் கா.ஸ்ரீ.ஸ்ரீயும்‘’ என்ற தலைப்பு மிகவும் சிறப்பான வகையில், மொழி பெயர்ப்பு கலை பயிலும் அத்துணை பேருக்கும் பாடம் புகட்டும் இலக்கணம் அமைந்துள்ள, அதேநேரத்தில், சிறந்த உழைப்பினால் உருவானதொரு நூல்!

காண்டேகர் மராத்திய மண்ணுக்குரியவர். தமிழ் நாட்டுக்குத் தத்துப்பிள்ளை - இலக்கிய உலகில்!

அவரை தமிழ் கூறும் நல்லுலக நேயர்களுக்கு அறிமுகப்படுத்தியவர், மொழி பெயர்ப்பு நூலைப் படிக்கிறோம் என்ற உணர்வே கொஞ்சமும் எழாமல், மூலத்திற்கே மெருகு ஊட்டித் தந்தவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்கள்.



அறிஞர் அண்ணா, அன்னை மணியம்மையார் ஆகியோர் நானறிந்த காண்டேகர் பிரியர்கள் ஆவர். நானும் பள்ளி பருவம், கல்லூரி, பல்கலைக் கழக மாணவப் பருவத்தில் காண்டேகர் வாசித்தேன். பிறகு நேசித்தேன். எனது தோழர் புலவர் கோ.இமயவரம்பனும், நானும் இவரது புதினங்களின் புரட்சிபற்றி படித்துவிட்டு விவாதிப்போம்!

காண்டேகரை கோல்காப்பூர் சென்று பார்க்க வேண்டும் என்று கூட நாங்கள் பேசிக்கொண் டிருப்போம்!

வடநாட்டுச் சுற்றுப்பயணம் (உ.பி.) சென்றபோது,  தந்தை பெரியார் அவர்கள், எங்களது  வாகன ஓட்டுநரிடம், கோல்காப்பூர் வழி (திரும்பிடும் நிலை யில்) செல்லும்படி - அம்மாவின் விருப்பப்படி - ‘காண்டேகர் பூமி’யைக் காண்பதற்காக கூறினார்கள். நாங்கள் உறங்கிய நிலையில், ஓட்டுநர் கோல்காப்பூர் வழியை விட்டு, ஷோலாப்பூர் வழி சென்றார். அவர் உள்வாங்கிக் கொண்ட விதம் அப்படி!

எங்களுக்கு பொழுது புலர்ந்த நிலையில், மிஞ்சியது ஏமாற்றமே!

அவ்வளவு ஈர்ப்பு காண்டேகரின் கருத்தாளுமை கொண்ட கலங்கரை வெளிச்ச எழுத்துகளுக்கு!

அந்நூலை பல கோணங்களில் ஆய்ந்து எழுதியுள்ள பேராசிரியர் முனைவர் மு.வளர்மதி அவர்கள், அதில் காண்டேகர்பற்றி அறிஞர் அண்ணா அவர்கள், தனது ‘திராவிட நாடு’ ஏட்டில் எழுதிய ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டி யுள்ளார்.

‘‘வாழ்க்கைக் கீதத்தை விளக்கி விட்டு, வெறும் இலட்சியவாதியாக இருந்துவிடவில்லை காண் டேகர்; இன்றையச் சமூகத்தின் நிலை அவருக்கு விளங்காமற் போகவில்லை; இன்று சுகம் அனு பவிப்பவர்கள் யார் என்பதையும் அவர் தெரிந்து கொள்ளாமல் இல்லை; நொந்த மனதுடன் - நீங்களும் நானும் - வாழ்க்கையின் ரசத்தைப் பருகும் வீணர்களைப் பற்றி என்ன கூறுவோமோ, அதனைக் காண்டேகர் அழகுபட ‘‘சுகம் என்பது ரசவாதிகளின் ரசக் குளிகையைப் போல் கிடைப்பதற்கு அரிய ஒரு பொருள். அது கேவலம் - கவியின் கற்பனையில்தான் கிடைக்கக்கூடியது. இவ்வுலகில், மனிதத் தன்மைக்கும் - சுகத்துக்கும் சம்பந்தமே இல்லை. இவ்வுலகில்: சுகமாக இருக்க வேண்டுபவன், புலியைப் போல் மற்றவர்களின் இரத்தத்தைக் குடிப்பதையே ஆனந்தமாகக் கருதவேண்டும். நியாயம் - தியாகம் - கடமை - மனிதத்தன்மை - நாணயம் - நம்பிக்கை ஆகிய சொற்களை மறக்க முடியாதவன், இந்த உலகத்தில் சுகம் அனுபவிக்கத் தகுந்தவனல்லன்!’’ என்று கூறுகிறார். ஆகா, எவ்வளவு சரியான சவுக்கடி... பிறர் உழைப்பிலே சுகம் தேடுபவர்களுக்கு! வாழ்க்கை ஏழை மக்களுக்கு, பாட்டாளி குடும் பங்களுக்கு! எப்படி இனிப்பாக இருக்க முடியும்? எனக் காண்டேகரின் கருத்து வீச்சை அனுபவித்துப் பாராட்டுகிறார் அறிஞர் அண்ணா.’’

நாளை காண்டேகரின் கற்பனை படைப்பாற்ற லையும் பார்ப்போம்!

-விடுதலை,14.4.17

காண்டேகரின்

உருவகக்கதை

சமூகநிலை குறித்த பல சிக்கல்களையும், விடுவிக்க வேண்டிய முறைகளையும் விளக்க, உருவகக்கதை என்ற சிறிய இலக்கியவடிவை மராட்டியில் முதன்முதலில் படைத்தவர் காண் டேகர். இதற்குரிய இயல்புகளை, தனித்தன்மையை காண்டேகர் ‘கலிகர்’ (அரும்பு) என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். “சின்னஞ்சிறு கதை என்று சொல்லப்படும் இலக்கிய உருவத் துக்கும், இதற்கும் இயல்பில் வேற்றுமை உண்டு. சின்னஞ்சிறு கதையில் மிகவும் முக்கியமான அம்சம் அதன் ஆச்சரியகரமான முடிவு. அநேகமாக அந்தச் சமத்காரம் வெறும் அறிவுப்பயிற்சியோடு சரி? ஆனால் வெறும் அறிவுப் பயிற்சியினாலோ கற்பனைக் குவியலினாலோ உருவகக்கதையை நிறம்பெறச் செய்ய முடியாது. வேடிக்கைக் கதைகளைப் போலவே சின்னஞ்சிறு கதையும் பொழுதுபோக்குக்கு ஏற்றதாக இருந்துவிட்டால் போதும். உருவகக்கதையிலோ பொழுதுபோக்கு மட்டும் அன்றி சிந்தனையையும், உணர்ச்சியையும் தூண்டும் தன்மை கட்டாயம் இருக்கவேண்டும். இழையும்படியான குறைந்த சொற்களைக் கொண்டு சூழ்நிலையை உண்டாக்கி தேர்ந்தெடுத்த அதிசய மான கற்பனைகளினால் அழகைத் தெளிவுப்படுத்தி, இவற்றோடு கூடவே சிந்தனையையும் உணர்ச்சி யையும் கலந்து உண்மையான வாழ்க்கையையும் வாழ்க்கை மதிப்புக்களையும் வாசகர்களுக்குத் தீவிரமாக உணர்த்தவல்ல இந்த உருவகக்கதை என்னும் இலக்கிய உருவம் காவியத்துக்கு சம மானது” என்று உருவகக் கதையைப் பற்றிய தனது உயர்வான கருத்தை வெளியிட்டுள்ளார்.

காண்டேகரின் உருவகக்கதை உத்தியை விளக் கும் வகையில் சான்றாக ஒரு கதை இங்கு இடம்பெறுகிறது.

ஆகாயமும் பூமியும்

“ஆகாயம் பூமியை எப்போதும் துச்சமாக மதிப்பது வழக்கம். அருணோதயத்தின் செம்மை யைக் காண்பித்து இது காதலின் நிறம். உன்னிடம் இது எங்கே இருக்கப் போகிறது? என்று அது பூமியைக் கேட்கும்.

விதவிதமான வண்ணங்கள் கலந்த சாயங்கால மேகத்தைக் காண்பித்து இதோபார், என் விளை யாட்டுப் பொம்மை, உன்னிடம் இப்படிப்பட்ட பொம்மை இருக்கிறதா? என்று கேட்கும்.

இரவில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களைப் பற்றியோ அதற்கு மிகமிக கர்வம். உன் பூக்கள் இன்று மலர்ந்து நாளைக்கு வாடிப்போகின்றனவே! இதோ பார் என் பூக்களை! இவை யுகயுகமாக மலர்ந்தவாறே இருக்கின்றன என்று அது பூமியைப் பரிகாசம் செய்யும்.

பூமி சாது. ஆகாயம் என்பது வெறும் தோற்றம் என்று அதற்குத் தெரியாது. தென்படுவது போலத் தான் ஆகாயம் உண்மையில் இருக்கிறது என்பது அதன் நினைப்பு. தன்னிடமிருந்து நீரைக் கொள் ளையடித்து ஆகாயம் மேகங்களை உண்டாக்கு வதையும், அவற்றைக் கொண்டு விளையாட்டுப் பொம்மைகள் ஆக்குவதையும் இந்தக் கடன் வாங்கிய நீரைத் திருப்பிக் கொடுக்கும் போது அது நன்றிகெட்டு வசைமொழிகளைக் கடகடவென்று முழக்கி, மின்னலாகிய சாட்டையை வீசுவதையும் பூமி நினைத்துகூடப் பார்க்கவில்லை. ஆகாயம் தண்ணீர் கொடுத்துத் தனக்கு உபகாரம் செய்த தாகவே அது நினைத்தது.

சோம்பேறியும். சுகானுபவியும் நன்றி கெட்டது மான ஆகாயத்தைக் கண்டு நட்சத்திரங்களுக் கெல்லாம் கோபம் வந்தது. அவை கோபத்தோடு, ‘‘நிறநிறமான மேக உடைகளையும், அருணனாகிய கள்ளையும் தவிர்த்து இந்த ஆகாயத்துக்கு வேறு ஒன்றுமே தெரிவதில்லை. அந்தப் பூமியும் இருக் கிறது பாருங்கள்! வயிற்றில் நெருப்புப் பற்றிக் கொண்டு எரிந்தால்கூட ஆகாயத்துக்கு வேண்டிய மட்டும் தண்ணீர் கொடுக்கிறது. தன் இருதயத்தில் அடிபட்டால்கூடத் தன் முதுகிலுள்ள பிராணிகளை அன்னையைப்போல அன்போடு பராமரிக்கிறது. நீங்கள் அதனிடம் ஒர் இனிய பேச்சுப் பேசுங்கள். உடனே அது பதிலுக்கு நூறு இனிய சொற்களை உங்களிடம் பேசுகிறது. அப்படிப்பட்ட பூமியை விட்டு இந்த ஆகாயத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதால் பிரயோஜனம் என்ன? வாருங்கள் போவோம். இந்த ஆகாயத்தில் நட்சத்திரங்களாக இருப் பதை விட, பூமியில் போய்க் கற்களாக இருப்பது எவ்வளவு மேலானது” என்றன.

ஒரு நட்சத்திரம் அறுந்தது. ஒரு நட்சத்திரம் விழுந்தது. மற்றொரு நட்சத்திரம் அறுந்தது; மற்றொரு நட்சத்திரம் விழுந்தது.

பரபரவென்று நட்சத்திரங்கள் கீழே விழுந்தன. பொடி சூரணமாகும்போது கூட அவை சிரித்துக் கொண்டே இருந்தன. நட்சத்திரங்கள் யாவும் விழுந்துவிடவே, ஆகாயத்தின் சவுந்தரியம் அழிந்தது. அதற்குப் பைத்தியம் பிடித்தது, அந்தப் பைத்திய வேகத்தில் அதுவும் கீழே குதித்தது.

ஆகாயம் இடிந்து விழுந்தது.

அது இடிந்து விழுந்ததனால் யாருக்கும் ஒரு நஷ்டமும் உண்டாகவில்லை. அதற்கு மாறாக பூமிக்கும் சொர்க்கத்துக்கும் இடையே மறைத்துக் கொண்டு இருந்த திரை இல்லாது ஒழிந்தது!

அந்தப் புரட்சியைச் செய்தது எது?

அந்த முதல் எரிநட்சத்திரம்!”

இச்சின்னஞ்சிறு கதையை முதலாளி, தொழி லாளி அல்லது ஏழை, பணக்காரன் இந்த இரண்டு எதிரெதிர் நிலைகளை விளக்கும் வகையில் ஒரு கருத்தோவியமாக வழங்கியுள்ளார் காண்டேகர். இவ்வாறு புரட்சிக் கருத்துக்களைப் புதுமையான முறையில் கூறும்பொழுது, இரத்தத்தை நீராக்கும் தொழிலாளிகள் இல்லாமற் போனால் உயர் வர்க் கத்தினரின் சுகபோகங்கள் ஏது? என்று படிக்கும் வாசகர்களைச் சிந்திக்க வைத்து விடுகிறார் காண்டேகர்.

இப்படிப்பட்ட முற்போக்கு இலக்கியங்களை இளைய தலைமுறை படிக்கவேண்டும்.

டாக்டர் மு.வ. என்ற மு.வரதராசனார், காண் டேகர் பாணியில் எழுதினார். மு.வ.வைத் தெரியுமா என்பது கேள்விக்குறி!

-விடுதலை,15.4.17