பக்கங்கள்

வெள்ளி, 2 அக்டோபர், 2015

பயணங்களும் - ஏற்பாடுகளும்!


அடிக்கடி பயணங்கள் மேற்கொள் ளும் நண்பர்கள் அல்லது சுற்றுலாவுக் காகச் செல்லும் பயண ஏற்பாடுகள் - இவைகளில் முக்கியப் பங்குவகிப்பது, ஆயத்தங்களில் முதன்மையானது மூட்டை முடிச்சைக் கட்டுவது - தேவையானவற்றைத் திட்டமிட்டு சேகரித்து, அவற்றை தூக்கக் கூடிய ஒரு பெட்டி - கைப்பெட்டி - அல்லது சற்று நீண்டகால பயணம் எனில் பெரிய தொரு பெட்டி இவைகளில் அவை களை அடுக்குவது என்று எதையும் உரிய காலத்தில் செய்தால், கடைசி நேரத்தில் தவிக்காமல், பயணங்கள் எளிதாகும்.
முன்பெல்லாம் நம் நாட்டில் காசி, இராமேசுவரம் யாத்திரைதான் மக்களுக்குத் தெரியும்!
பலர் காசிக்குச் சென்றால் கடைசி யாக விடை பெற்றுக் கொண்டே முதிய வர்கள் செல்வார்கள். இப்போது அப்படியா?
இப்போது அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்தோங்கிய நிலையில், பேருந்து தொடர்வண்டி, வானூர்தி இவைகளினால் பயணங்கள் எளிதில் விரைவில் சென்று திரும்ப உதவுகிறதே!
பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள தால் விமான நிலையங்களில், ரயில் நிலையங்களில் பெட்டிகளையும், நமது பைகளையும் காவல்துறையினர் ஆழ்ந்து சோதித்து அனுப்பிட முன் கூட்டியே செல்லவேண்டியுள்ளது என்பது தவிர்க்க முடியாத ஒன்றே!
எடுத்துக்காட்டாக, சென்னையி லிருந்து விமானம்மூலம் திருச்சி செல்ல 45 மணித்துளிகள் அல்லது ஒரு மணி நேரத்திற்குள்தான் ஆகிறது. அதற்கு விமான நிலையத்திற்குள் நாம் சுமார் ஒன்றரை மணி, இரண்டு மணி நேரத் திற்கு முன்பாகவே சென்று, பாதுகாப்புச் சோதனை கட்டங்களில் தேறி, பிறகு விமானம் ஏறியாகவேண்டும்.
என்ன செய்வது - அது பயணி களான நமது பாதுகாப்புக்குத்தானே செய்யப்படுகிறது!
இப்போது ரயில் நிலையங்களில் குண்டு வெடிப்புகள் காரணமாக அங்கும் கடுமையான பரிசோதனை - மனித குலத்தின் அறிவு நல்ல வழியில் சென்றதால், தொடர் வண்டி - விமானம் எல்லாம் கிடைத்தன.
தவறான வழியில் அறிவு சென்றால், மனித வெடிகுண்டுகள் போன்ற சமூக விரோத நடவடிக்கைகள் உலகம் முழுவதும் உலுக்கி விட்டுள்ள கொடுமை அன்றாட நிகழ்வுகள்; அத னால் கடுமையான சோதனைகளும், முன்கூட்டிய ஆயத்தங்களும் தேவை தானே!
அப்படி வெளிநாடுகளுக்குச் செல்லுவோர் பயணங்களுக்கான தங்களது டிக்கெட்டுகளை ஆன்-லைன் என்பதிலேயே - இணைய வாய்ப்பு வந்ததால், வீட்டில் இருந்த படியே பதிவு செய்து - இருக்கைத் தேர்வு உள்பட - முடித்து விடுகின்றனர்.
எல்லாவற்றிலும் பிளஸ்களிலும், மைனஸ்களும் உண்டல்லவா?
அதுபோலவே, ஆயத்தங்களில் அப்படி பயணம் செய்யும் நண்பர்களின் தவறால், பெட்டிகளில் சமான்கள் துருத் திக் கொண்டு அடுக்காமல், அளவுக்குக் குறைவாக அடுக்கிவிடுவது நல்லது.
எடை நிர்ணயம் அங்கே உண்டே! கூடுதல் கட்டணம் அல்லவா கடைசி நேரத்தில் செலுத்தவேண்டியிருக்கும்.
தவிர்க்க முடியாத குறைந்த உடை களையே எடுத்துச் சென்றால், வெளி நாடு சலவையும் அல்லது புதியதும் வாங்கிப் பயன்படுத்தலாம்.
பயன்படும் மருந்து வகைகளைக் கட்டாயம் உடன் எடுத்துச் செல்லுதல் முக்கியமாகும். அறையில் உள்ள போது எளிய உடைகளில் இருப்பது; வெளியே செல்லும்போது அணியும் உடைக்கு மாற்றாக இருக்கும்.
புத்தகங்கள் பயணங்களில் அரிய நண்பன் என்பதைச் சொல்லவேண் டியது இல்லை - ஒரு கைத்தொலைப் பேசி - அது இருந்தால் அதைவிட பெரிய துணை வேறு ஏது?
முதலுதவி மருந்துகள் சிலவும் வழக்கமாகச் சாப்பிடும் மாத்திரை, மருந்துகளுக்கு அப்பாற்பட்டு இருப்பது - பஞ்சு உள்பட நல்ல பயன்தரும் ஆபத்துக்கு உதவும்.
வாழ்க்கையில் பயணங்கள் தவிர்க்க முடியாதவை. பயணத்தின்போது எதை மறந்தாலும் உங்கள் அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டு (பாஸ் போர்ட்) மிகமிக மிக முக்கியமானது.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பே புரட்சிக்கவிஞர் (முதல் கவிதைத் தொகுப்பில்),
யாத்திரை போகும்போது என்ற தலைப்பில்,
யாத்திரை 1938 வாக்கில் அவர் கவிதை சொல்வது,
சீப்புக் கண்ணாடி, சிறு கத்தி, கூந்தல் எண்ணெய்
சோப்புப் பாட்டரி விளக்கு தூக்குக் கூஜா தாள்,
பென்சில், தீப்பெட்டி கவிகை சால்வை, செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்ட பெட்டி கைக்கொள்க யாத்திரைக்கே!
என்று நம்மை ஆயத்தப்படுத் தினார்களே!
-விடுதலை,21.7.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக