பக்கங்கள்

திங்கள், 8 ஜூன், 2015

ஏமாற்றங்களைத் தவிர்ப்பதற்குரிய ஒரே வழி!

      


இந்த ஏமாற்றம் பல நேரங்களில் மனி தர்களை மிருகங்களாக மாற்றி விடு கின்றன.
அறநெறிகளையும், நியதிகளையும், நியாயங்களையும்கூட புறந்தள்ளி, அந்த ஏமாற்றுத்தினவுக்கு, ஏற்ற வழி, ரத்தம் வழிந்தாலும் அதை மேலும் மேலும் சொரிந்து கொண்டே அதில் ஒரு வகைச் சுகம் காண்பது!
இந்த ஏமாற்றம் பலரை உணர்ச்சி மீறலால் கொலைகாரர்களாகக்கூட மாற்றிவிடும் கொடுமையும் நடைபெறு கின்றது!
நான் மிசா கைதியாக ஓராண்டு சென்னை மத்திய சிறையில் (1976-1977) இருந்தபோது, பிற்பகுதி வாழ்க்கை பாடம் மிகவும் கற்றுக்கொண்ட பயனுறு வாழ்க்கையாகவே அமைந்தது!
தனி வகுப்பின் வசதிகள் எங் களுக்கு மிசா கைதிகளுக்கு - ஏறத்தாழ 4, 5 மாதங்கள் கழித்தே வழங்கப்பட்டன. அதில் ஒன்று - எங்களுக்குப் பணி உதவிகள் செய்ய ஆயுள் கைதியாளர் களில் சிலரை அனுப்பி வைக்கும் சிறை நிர்வாகம். அதில் ஒரு பெரியவர் - மிகப் பெரும் அளவில் முகத்தில் திருநீறு பட்டைகள், குங்குமப் பொட்டு எல்லாம் வைத்துக்கொண்டுள்ள உருவத்தோடு, மிகுந்த அடக்கத்தோடு உதவிப் பணி களில் ஈடுபடுவார். அன்புடன் உதவுவார் எங்களுக்கு.
அவர் வரலாற்றை நான் கேட்டேன். திருக்குறள் ஏராளம் படிப்பவர்; அவரைப் பார்த்து நான் கேட்டேன், இவ்வளவு நல்லவராக உள்ள நீங்கள், எப்படி அய்யா இந்த சிறைக்குள் ஆயுள் கைதியாக வந்துள்ளீர்கள்? என்று.
அவர் கண்ணீர் மல்க கூறினார்: எல்லாம் க்ஷணநேர கோபம் - ஆத் திரம் தான் என்னைச் சற்றும் எதிர்பாராத கொலைகாரனாக ஆக்கிவிட்டது!
என் மனைவியின் தவறான நட வடிக்கை பற்றி நான் கேள்விபட்ட போதெல்லாம்கூட, நான் அதை நம்பவே இல்லை. உறுதியாக என் உள்ளம் மறுத்தது, காரணம் எங்களது பாசம் எப்போதும் மாறாதது என்று எண்ணியிருந்தேன். எப்படியோ என் மனைவியின் தவறான நடத்தை பற்றி அறிந்து வருந்தினேன்; நேரில் பார்த்து விட்டேன். நான் அக்கணம் மிருகமாகி விட்டேன் - அதன் விளைவு - கொலை - பிறகு இப்படி ஆயுள் தண்டனை என் றெல்லாம் ஆயிற்று.
சினம் காக்கத் தெரிய வில்லை. என் மனைவியை நான் மனித உருவமாகக் கருதாமல், ஒரு விலைக்கு வாங்கப்பட்ட, எனக்கு மட்டுமே சொந்தமான ஏகபோகப் பொருளாகவே கருதியதால், அவளது இந்த நடத்தை என்னை ஏமாற்றத்தின் எல்லைக்கே கொண்டு சென்று தள்ளி விட்டது!
அதன் விளைவு எனது நம்பிக்கை நிர்மூலமாகிவிட்டதனால், அந்த ஏமாற் றம் என்னைக் கொலைகாரனாக்கியது. எனது முன் வாழ்க்கை முறையினை அறிந்து கருணை மிக்க நீதிபதி எனக்குத் தூக்குத் தண்டனை தராமல் ஆயுள் தண்டனை தந்தார் என்றார்.
அவ்வளவு நம்பிய எனக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றம் என்னை இந்த நிலைக் குத் தள்ளி விட்டது; காரணம் இதை அவளிடம் நான் எதிர்பார்க்கவே இல்லை என்றார்!
வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் என் பவை சில அளவோடு கூடியது; மற்றவை யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது.
எதனையும் அளவுக்கு மீறி, தகுதிக்கு மீறி எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவதும், பிறகு பொறாமை, சூழ்ச்சி, சதிவலை என்ற பல்வேறு அவதாரங் கள் எடுப்பதும்; மற்றொரு வகை  எதிர்பார்த்து ஏமாற்றமடைதல். நம் பிள்ளைகளைக் கூட தேர்வு எழுதி முடித்தவுடன் பெற்றோர்களில் பலர், அவன் நூற்றுக்கு நூறு எளிதில் வாங்குவான் - ஆஹா, ஊஹூ என்று புகழ்வர். ஊக்கப்படுத்துவது தேர்வுக்கு முன் - தவறல்ல. முடிவுக்காகக் காத் திருந்து - எதிர்பார்ப்புகளுடன் நாளை ‘Count down’ என்று கீழே நோக்கி, நாளை - நேரத்தை குறைய குறைய எண்ணிக்கொண்டே வரும்போது, எதிர்பார்ப்பு என்பதை பலூனில் சதா ஊதிக்கொண்டே இருப்பதைப் போல செய்து, சற்று குறைந்து 99 மார்க் (100-க்கு) வாங்கியபோது இதை சாதனை என்று பெருமிதம் - பெருமகிழ்ச்சி கொள்ளவேண்டிய மாணவன், மாணவி யின் பெற்றோர்கள் அல்லது ஆசிரியர் கள், நண்பர்கள் பெருத்த ஏமாற்ற மடைவர் - இந்த ஏமாற்றம் உண்மை யில் ஏமாற்றமே அல்ல - அது ஒரு வகையான மாயத்தோற்றம் - அவ் வளவு தான்.
எதிர்பார்ப்பது ஓரளவு தேவைதான்; அறவே கூடாது என்பது இயற்கைக்கு மாறானது; உள்ள இயல்புக்கு - மனித வாழ்க்கையில் முற்றிலும் மாறானது.
எவர் பதவியை எதிர்பார்க்கவில் லையோ, அவரே அப்பதவிக்கு வர முழுத் தகுதி பெற்றவர் என்றார் கிரேக்க அறிஞர் பிளாட்டோ!
நியாயமான - அளவான - காரண காரியங்களில் எதிர்பார்ப்பு தவறினால், நம்மை சமாதானப்படுத்திக் கொள் ளுதல் எளிது.
பேராசை என்பதே பெரும் நட்டம் தானே!
எனவே எல்லையற்ற எதிர்பார்ப்பு வேண்டாம்! ஏமாற்றத்தைத் தவிர்க்க இதுவே எளிய வழி.


Read more: http://www.viduthalai.in/page1/102186.html#ixzz3cUFHrT6B

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக