பக்கங்கள்

சனி, 10 அக்டோபர், 2020

மனிதமா? மனிதர்களா?

சற்றே சிந்தியுங்கள்!
May 4, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள்

மனிதமா? மனிதர்களா?

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு என்பது ஒரு முக்கிய தேவை; மனிதர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுவதுதான் சிறந்தது. இதுவரை இதற்கென தனி தடுப்பு - ஒழிப்பு, மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தொற்றான கரோனாவிலிருந்து நம்மையும், பிறரையும் காப்பாற்றிக் கொள்ள ஒரே வழி என்று மருத்துவ அறிஞர்கள் கூறுவது, முற்றிலும் தவறாது கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று அல்லவா!

உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கிக் கொள்வதும், அடிக்கடி சோப்புப் போட்டு கைகழுவு வதும், தள்ளி நிற்றல், முகக் கவசம் போன்றவை யோடு வீட்டிற்கு வெளியே அவசியம் ஏற்படும் போது செல்லுதல் என்பது போன்ற கட்டுப்பாடு கள்தாம் நம் நலம் - மக்கள் நலம் கருதி முக்கியம்.

ஆனால், கூட்டங் கூட்டமாக காய்கறி கடை மற்றும் இறைச்சி வாங்க கடைகளுக்குச் செல்வது, பல மனிதர்கள் தங்களது எல்லையற்ற சுயநலத் தினை வெளிப்படுத்த வெளியில் சுற்றுவது, கறி விருந்து சாப்பிடுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று பொறுப்பின்றி, நிலைமையின் தன்மை விபரீதமாகப் போய்க் கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல் நடந்துகொள்வது, இதுதான் சரியான நேரம் பணம் சம்பாதிக்க என்றும் கருதி, விலை வாசிகளை உயர்த்தி மக்களின் அவசரத் தைப் பயன்படுத்தி சுரண்டல் நடத்துவது போன்ற  நிலை களை நினைத்தால், வெட்கமாக இருக்கிறது!

ஊரடங்கை மீறியவர்கள் 4 லட்சம் பேர் என்றால், இது ஒரு சமூக அவமானம் அல்லவா?

மனிதர்களின் எண்ணிக்கை பெருத்துக் கொண்டே போகிறது,

ஆனால், மனிதம் சிறுத்துக்கொண்டே தேய் கிறது!

உலக நாடுகளையே பல லட்சம் பேரை பலி கொண்ட கரோனா தொற்றிலும்கூட - பல பெரிய  நிலைகளில் உள்ளவர்கள் பலரும் வேடிக்கை மனிதர்களாகவே இருக்கின்றனர்.

மனிதர்களின் எண்ணிக்கை பெருகிய அள வில், மனிதம் ஏனோ பெருகவில்லையே என்ற சிந்தனையோடு தந்தை பெரியார் என்ற மாமனி தரின் பாடங்களை சற்றே புரட்டினேன்.

மற்ற காலங்களைவிட இந்தக் காலகட்டத்தில் அவசியம் படித்தால் மட்டும் போதாது; கற்க வேண்டும் - பெரியார் பேசுகிறார் 70 ஆண்டு களுக்கு முன்பு - கேளுங்கள்; மனிதம் என்பதன் தேவை நமக்குப் பளிச்சென்று புரியும்.

‘‘வாழ்க்கை என்ற ஏணியின் அடிப்படியில் கால் வைக்கும்பொழுது நாம் எங்கே ஏறுகிறோம், கடைசியாக எங்கே போவோம் என்று அறியக் கூடவில்லை. நாம் ஏறி முடித்தால்போதும் என்பதைக் கொண்டிராமல், ஒவ்வொரு படியாக ஏறிக்கொண்டே போகவேண்டும்; அதற்குமேல் என்ன தெரிகிறதோ அதைப் பிடிக்க வேண்டும் என்று, அதைப் பிடித்தவுடன், அதற்குமேல் என்ன தெரிகிறதோ அதைப் பிடிக்கவேண்டும் என்று எல்லையே இல்லாமல், இலட்சியமற்ற முயற்சியி லேயே காலம் கடத்துகிறோம். இறுதியில் காலம் முடிந்து இறந்து போகிறோம். இப்பேர்பட்ட வாழ்க் கையால் ஒரு பலனும் கிடையாது.

சமுதாயத்திற்குப் பயன் தரும் வாழ்க்கையே சிறந்த இலட்சியம். மனிதன் பிறந்து இறக்கும்வரை இடையில் உள்ள காலத்தில் ஏதாவது பயனுள்ள காரியம் செய்யவேண்டும். அவன் வாழ்க்கை மற்ற வர்கள் நலனுக்கும், சமுதாயத்தின் சுகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கவேண்டும். ஒருவன் வாழ் வென்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள்; மற்றவர்கள் சுகம் கண்டார்கள் என்று அமையவேண்டும். இதுதான் முக்கியமானதாகும். இதுவே அவசியமும், பொருத்தமும் ஆனதுமின்றி மனிதவாழ்க்கை என்பதன் தகுதியான லட்சியம் இது என்றும் கூறலாம். ஆனால், நாம் இதை யாரிடமும் காண்பது கிடையாது. கண்டுபிடிப்பதென்றால், விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிருவரைக் காண்பதே மிகக் கஷ்டமான காரியமாகும்.

நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. நமது சமுதாயமும் வாழவேண்டும்; மற்றவர்களின் பிள் ளைகளும் வாழவேண்டும். நம் பிள்ளைகள் மட் டும் சுகம் அடைந்தால் போதாது; ஏனையவர்களின் வாழ்வு சுகம் அடைய வேண்டும். இதற்கு ஏதாவது நம்மால் ஆனமட்டிலும், நம் வாழ்க்கை அவர் களின் நன்மைக்கு அமையும் முறையில் நாம் நடந்துகொள்ளவேண்டும் என்பதே முக்கிய மானது. இந்த வேலையைச் செய்பவர்கள் மிகக் குறைவு; காண்பது அரிது.''

- 1956 இல் பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் அய்யா உரை (17.3.1956).

தோழர்களே,

மனிதம் என்பது என்ன என்பதற்கு எவ்வளவு அருமையான விளக்கம் பார்த்தீர்களா? கரோனா அச்சுறுத்தல் உள்ள இன்றைய உலகச் சூழலில், நம்முடைய சிறு பங்குதான் என்ன - மற்றவர்கள் சுகத்துக்கு என்று எண்ணுங்கள் - முடிந்ததைச் செய்து மனிதம் மறையாத மனிதர்கள் நாம் என்று வாழ்ந்து காட்டுங்கள்.

அரிய வாய்ப்பு இப்போது!

புரட்சிக்கவிஞர் பேசுகிறார்: ‘நூலறிவும் உணர்வும்' என்ற தலைப்பில்!


April 30, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள்

நேற்று (29.4.2020) புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களது 130ஆவது ஆண்டு பிறந்த நாள்.

வழமைபோல் விழாக் கொண்டாடி மகிழ, புரட்சிக்கவிஞர் என்ற அந்த கனலின் சூட்டில் அயர்வினைப் போக்கிக் கொள்ள கூடி மகிழ்வதற்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும், படித்து மகிழலாம்,  ‘பாவேந்தர்’ என்று பலராலும் அழைக்கப்படும் ஈடு இணையற்ற மானுடம் தந்த மகத்தான கவிஞரின் கவிதையைப் படித்து, படிக்கக் கேட்டு, மேடைகளில் நாவலர் நெடுஞ்செழியன் போன்றோர் தம் வெண்கல நாதக் குரலில் உயிர்த் துடிப்போடு முழங்கக் கேட்டு மகிழ்வதற்கு ஒப்பானது எதுவும் இல்லை.

பெரும்புலவர் பேராசிரியர் ந.இராமநாதன் (பெரியார் பேருரையாளர்) அவர்கள் விளக்க, புரட்சிக்கவிஞரின் கவிதைகளில் உள்ள நயம்பற்றிக் கேட்கும்பொழுது, நாம் எல்லாம் தேனில் வீழ்ந்த வண்டுகளாவோம்! நம்மை மறந்தவர்களாவோம்!!

‘‘ஏம்பா, நம்ம இராமநாதன் எனது கவிதைகளை விளக்கியபோதுதான் எனக்கே தெரிந்தது, ‘‘ஓகோ, நாம் இப்படியெல்லாம் எழுதியுள்ளோம் என்று; அப்படி ஒரு அரும்பெரும் புலவனப்பா அவன்!’’ வியப்புடன் கூறினார் புரட்சிக்கவிஞர்.

அத்தகைய கவிஞரின் பேச்சுகள் - பேருரைகள் பலவற்றைக் கேட்கும் வாய்ப்பு வாசக நேயர்கட்கு மிகமிக அரிதுதானே.

அதனால், எவ்வளவு ஆழமான சிந்தனை வளம் பெற்ற நம் சுயமரியாதை சூட்டுக்கோல் புரட்சிக்கவிஞர் என்பதற்கு 1931-32 ஆம் ஆண்டு ஆற்றிய  ஓர் உரை, இதோ சுவையுங்கள்:

"மனிதன் அறிபவன், மனிதனுக்கு அறிவுண்டு. மனிதன் எவற்றையும் அறிபவன். எவையும் அறிவுக்கு உட்பட்டவை.

உண்மை என்பது உள்ளத்தின் தன்மை. அதாவது உட்புறத்தின் இயல். மெய்மை என்பது மெய் (உடல்) யின் தன்மை. அதாவது மேற்புறத்தின் இயல். கடலின் மேற்புரம் கண்டோன் கடலின் மெய்மை கண்டோனாவான். கடலின் உள்ளியல் கண்டோன் கடலின் உண்மை கண்டோனாவான்.

மனிதன் அறிபவன். தன்னுண்மை, தனது மெய்மை, உலகுண்மை உலகின் மெய்மை, அடங்கல் உண்மை ஆகிய அனைத்தையும் அறிபவன் (அடங்கல்-எல்லாம்).

அறிவு என்பது உண்மை, மெய்மைகளை அறிதல் என்பதனோடு அனைத்தையும் அறிதல் என்பதும் ஆகும்.

அறிவின் நோக்கம் பெரிது! அறிபவனாகிய மனிதன் தான், இல்லம், ஊர், நாடு, கண்டம், உலகம், வானம், வானுள்ள கோளங்கள் ஆகியவை உள்ளிட்ட பெரும் புறம் அனைத்தின் உண்மையை - மெய்மையையும் அறியும் நோக்கமுடையவன்.

இப்பெரு நோக்கமுள்ள மனிதனின் நிலையோ சிறிது. தொட்டாலன்றி உணர முடியாத உடல் கூப்பிடு தூரத்தில் உள்ள உருவத்தைக் காண முடியாத சிறு கண்கள், சிறிய காதுகள், சிறிய வாய், சிறு மூக்கு ஆகிய இவற்றையுடையவன், அனைத்தின் உண்மை மெய்மைகளை அறிதலான தனது நோக்கத்தை அவன் எவ்வாறு நிறைவேற்றுவான்! இதுனால், அவன் கல்வி கற்றல் அவசியமாகிறது.

கல்வி என்பதற்குப் பெயர்ப்பு என்பது பொருள். கல்லல், கல்வி, கற்றல், கற்பு அனைத்தும் ஒரு பொருட் சொற்கள். சூரியன் பல்லாயிர அடி உயரத்தில் இருக்கிறது; ஒளியால் வெப்பத்தால் அறியப்படுகிறது. இதுவன்றி அதன் உட்புறத்தின் தன்மை வெளிப்புறத்தின் தன்மை அறியப்படவில்லை. ஆயினும் அறிஞர் ஆக்கிய நூற்களில் அச் சூரியனது விஷயப் பெயர்ப்பு உண்டு. சூரியனால் எதிர் பார்த்த அறிவு அதைப்பற்றிய விஷயப் பெயர்ப்புள்ள கல்வியால் நிரம்பலாம்.

அறிவு என்பதற்கும், நூலறிவு அல்லது கல்வி யென்பதற்கும் வித்தியாசம் உண்டு. அறிவு உண்மை மெய்மைகளை மாத்திரம் ஆதாரமாக உடையது.  நூலறிவு அல்லது கல்வி என்பது உண்மை, மெய்மை, பொய்மை, மடமை முதலியவைகளை ஆதாரமாக உடையது. கேள்வியறிவும் இவ்வாறே.

ஒருவனுக்கு தன்னிலையில் உள்ள அறிவானது விவாதத்துக்குரிய நூலறிவால் பெருகிவரும் காரணத்தால் பொதுவாக மனிதனுக்கு ஏற்பட்டிருக்கும் அறிவு தார்க்கீகத்துக்கு உட்பட்டதேயாகும். அறிவினால் எதிர்பார்க்கும் பயன் இன்பவாழ்வு பெறுவதாகும். உண்மையும், மெய்மையும் உடைய இவ்வறிவால் இன்பவாழ்வு பெறுதல் நிச்சயம். பொய்மை மடமைகளையும் உடையதான தார்க்கீக ஞானத்தால் இன்ப வாழ்வு கிட்டுதல் நிச்சயமாகுமா?

தார்க்கீகமாவது ‘‘இது சரியா? சரி அன்றா? சரி என்பதற்கு அறிகுறி இதுவல்லவே! பிழை என்பதற்கு அறிகுறி இதுவல்லவே! வினை பயன் எதுவாயிருக்கலாம்! தீமையோ ! நன்மையோ! என ஒருவன் தனக்குள் தர்க்கம் புரிவதாகும். தார்க்கீக ஞானமானது செயலில் இறங்கத் தீவிரப்படுத்தாது. ஒன்றைப்பற்றி நிச்சயிப்பதற்கும், தயங்குவதற்கும் காரணத்தைத் தானே கண்டுபிடித்திருக்கும் நூலறிவு தார்க்கீகத்துக்குக் குரியதே.

அநுபவஞானம் என்பதொன்று உண்டு. அது உணர்வு, உணர்ச்சி எனவும் சொல்லப்படும் உணர்வு என்பதைச் சிறப்பித்து “ உணர்வு எனும் பெரும் பதம்‘’ என்றார் ஆழ்வாரும்.

தார்க்கீக அறிவுக்கும் உணர்வுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் தார்க்கீக ஞானமானது செயலில் வருவது துர்லபம். ஒன்றை அறிந்ததற்கு அறிந்தபடி செயல் செய்வதற்கும் இடையில் தாமதமேயின்றி  அறிவும் செயலும் ஒரே நேரத்தில் நிகழ்வது உணர்வு.

நெப்போலியன், நூலறிவால், தார்க்கீக ஞானத்தால் காரியம் செய்யவில்லை எனவும், அவனது வெற்றி அனைத்தும் உணர்வின் பயனே எனவும் சொல்வர் பாரதியார்.

நமது நாட்டில் விவாதத்துக்குரிய நூலறிவும், கேள்வியறிவும் மிகுதியாகும். இதனால் தான் நம்மவர் செயலற்றுக் கிடக்கின்றனர். பட்டறிந்ததின் பயனாகவாயினும் உணர்ச்சி பெறவில்லை.

உணர்ச்சி தேவை! உணர்ச்சி பிழை படுவதில்லை. அது உண்மை. மெய்ம்மைகளை ஆதாரமாகக் கொண்ட அறிவும் செயலும் அன்றோ! அந்தோ உணர்வு பெறாதிருக்கின்றார்கள் தார்க்கீக ஞானிகள், நூலறிஞர்கள்.

கடவுட் பைத்தியம், மதப் பூசல், ஜாதி யிறுமாப்பு, மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் பட்ட தொல்லை பல பெரும் பாரதம்! இவைகளைத் தொலைக்க வேண்டும் என்பதை உணராதிருக்கின்றார்கள் தார்க்கீக ஞானிகள்! அந்தோ இவ்விஷயத்தில் இவர்கள் உணர்வு கொள்ளாதிருத்தலே யன்றி ஏழு ஆண்டுகளாகக் ‘குடிஅரசு’ செய்து போந்த கிளர்ச்சியின் பயனாக உணர்ச்சி ஏறிவரும் பெருமக்களை, சுயமரியாதைக்காரரை - அறிவியக்கத்தினரைப் பார்த்து “இவர்கள் நூலறிவற்றவர்’’ என்றும். ‘‘ஆராய்ச்சியற்றவர்’’ என்றும் சொல்லி உணர்ச்சிக்குத் தடை போடவும் முயல்கின்றனர். இவ்வறிஞர் செயல் தார்க்கீகப் பெரியார் செயல் இரங்கற் குரியதாகும்.

ஓ புராண அறிஞர்களே! இதிகாச அறிஞர்களே! கடவுளறிஞர்களே! மத அறிஞர்களே! ஜாதி அறிஞர்களே! மூடப் பழக்கவழக்க அறிஞர்களே! நூலறிஞர்களே! தார்க்கீக அறிஞர்களே! கண்ணைத் திறந்து பாருங்கள். உணர்வு என்னும் பெரும்பதம் நோக்கி,  மக்கள் அபரிமிதமாக ஓடுகின்றனர். நீங்கள் இருந்த இடத்தினின்று அசையாமலிருக்கின்றீர்களே! உங்கள் நிலை என்னாகும்?

நான் கல்வி, நூலறிவு வேண்டியதில்லை என்கின்றேனா? இல்லையில்லை. உண்மை, மெய்மைகளை ஆதாரமாக உடைய பகுத்தறிவு, நூண்ணறிவு, உணர்வு, நுண்ணுணர்வுகளை யுடையார் ஆக்கிய நூற்களைக் கொள்ளுமாறு கூறுகிறேன். தார்க்கீகத்தை வளர்க்கும் நூற்களைத் தள்ளுமாறு கூறுகிறேன். நல்வாழ்வுக்கு, சுதந்திர வாழ்வுக்கு - சமத்துவமான வாழ்வுக்கு, சகோதரத்துவ வாழ்வுக்குரிய வகையில் உணர்வு கொள்ள வேண்டுமென்பதே எனது கோரிக்கை".

புரட்சிக்கவிஞரின் ‘‘கோந்தினியே'', கோந்தினியே!'' நாவலரின் படப்பிடிப்பு


April 29, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள்

இன்று (29.4.2020) புரட்சிக்கவிஞரின் 130 ஆம் ஆண்டு பிறந்த நாள். கரோனா கொடுமையால் மக்கள் கூடி வழமைபோல் - திருவிழாபோல் விழா எடுக்க இயலவில்லை.

காலத்தால் வீழாத, வரலாற்றில் வாழும் சுயமரியாதை இலக்கியத் தென்றலாய், புயலாய், எரிமலையாய் என்றும் நிலைத்திருக்கும் அவரது வாழ்வின் பல நிகழ்வுகளை நமது நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள், சுவைபட ஒரு கவிதை - எப்படி பலரின் அச்சம், கோபம், வெறுப்பு - அதுவும் ஆளுமை நிறைந்த அவை யில் அரங்கேறி வெற்றி வாகை சூடியது என்பதை வர்ணிக்கும் வகையில் எழுதியுள்ள கட்டுரை சுவையானது - மறக்க முடியாதது!

‘கோந்தினியே’, ‘கோந்தினியே’ என்கிறீர்கள்? (அதென்ன திடீரென்று ஆசிரியர் இப்படி ஏதோ புரியாத ஒன்றைச் சொல்கிறார் என்று திகைக்கா தீர்கள்.

மேலே படியுங்கள் - பிறகு எனக்கு ‘மர்சி’, ‘மிசி’ -  (‘நன்றி அய்யா!’ சொல்வீர்கள்). (அவ்விரு சொற்களும் பிரெஞ்சு மொழி).

நாவலர் 1946 இல் எழுதிய ஒரு கட்டுரையின் ஒரு பகுதி இதோ:

‘‘புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் களங்கமற்ற குழந்தையுள்ளங்கொண்டு கருத்துப் பொதிந்த உரையாடல்களால் நம்மோடு மகிழும் பண்பினராவார். புலவர்கள் இயல்பாகவே வரவழைத்துக் கொள்ளும் வளைந்து வணங்கித் தன்னிலையில் தாழ்ந்து நடக்கும் பண்பினை நமது கவிஞரின் சொல்லிலோ, செயலிலோ, தோற்றத்திலோ காண முடியாது. தன் உள்ளக் கிடக்கையை எவ்விடத்தும் எடுத்துக்கூற எப்பொழுதும் தயங்கியதில்லை. அத்துணை அளவு திண்ணிய உரம் படைத்தவர். அதற்கு மட்டும் ஓர் எடுத்துக்காட்டு. பிரான்சிலே ழூயில்பெரி என்பார் குடியரசுத் தலைவராக வந்தார். அவர் ஆட்சிப்பீடம் ஏறிய காலத்தில் கல்வியானது குருமார்கள் கையில் இருந்தது. அந்த நாடு மட்டுமன்றி உலகில் எங்கணும் பாதிரிகள், குருமார்கள், ஆச்சார்ய பரம்பரை யினர், தனிப்பட்டவர்கள் ஆகியவர்களால் கல்வி கற்பிக்கப்பட்டு வந்ததேயல்லாமல், எந்த அரசியலும் நேரே தொடர்புபடுத்திக் கைக்கொள்ளவில்லை. மதகுருமார்கள் கையிலிருந்த கல்வியைப் பிடுங்கி அரசியலார் நடத்தினால்தான் கல்வி எல்லோருக்கும் பரவ வாய்ப்பு ஏற்படும் என்று கருதிய ழூயில்பெரி, கருதியதைச் செய்து முடித்தார். கல்வி புகட்டும் முறையிலே சிறந்த சீர்திருத்தத்தைச் செய்த அந்தத் தலைவரைப் போற்றிப் புகழ அவருடைய படத்தைப் பிரெஞ்சுப் பள்ளிகளி லெல்லாம் விளங்கும்படி செய்வது வழக்கம். உலகிற்கே வழிகாட்டியாகத் தோன்றிய அந் தத் தலைவராம் ழூயில்பெரியின் நூற்றாண்டு நினைவு விழா எங்கணும் கொண்டாடப் பட்டபொழுது, பாண்டிச்சேரியிலும் கொண்டா டப்பட்டது. அவ்விழாவை சிறப்புச் செய்ய எண்ணிச் செய்த பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக வாழ்த்துப்பாக்கள் பல மொழியிலும் இயற்றச் செய்வது  என்ற திட்டத்தையும் போட்டார்கள். அதன்படி தமிழில் வாழ்த்துப்பா புனைய நமது கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார். கவிஞரும் அதற்கிணங் கினார். குள்ளநரிக் கூட்டத்தினர் சிலர் பாரதி தாசன் ஒரு சுயமரியாதைக்காரன், அவன் பாடுதல் ஏற்புடைத்தாகாது என்னும் கருத்துப் படச் செயற்குழுத் தலைவரிடம் புறஞ் சொல் லியும் பயனற்றும் போகவே பாரதிதாசனே தமிழில் பா இயற்ற வேண்டி ஏற்பட்டது. விழாவில், அழகு செய்யப்பட்ட மண்டபத்தில் கவர்னரும், அவரது ஆட்சி சுற்றமும், நீதிமன்றத் தலைவர்களும், குருமார்களும், பாதிரிமார்களும், பிரெஞ்சுநாட்டு, திராவிட நாட்டு மக்களில் பணக்காரர்களும், பட்டம் பதவி  வகிப்போரும், பாமரரும் குழுமியிருக் கின்றார்கள். நிகழ்ச்சி நிரலின்படி தமிழில் வாழ்த்துப்பா இசைக்கப் புரட்சிக் கவிஞர் அழைக்கப்பட்டார். கவிஞரின் பாட்டை பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்துக் கூறச் சிலநரியுள்ளம் படைத்தோரும் அங்கிருந் தனர். காரணம் கவிஞரின் கவிதையில் வரும் சுயமரியாதைக் கருத்துகளை எடுத்துக்காட்டி, கவிஞரின் மீது பிரெஞ்சுத் தலைவர்களுக்கு ஆத்திரம் ஏற்படவும், அப்படி எடுத்துக்கூறிய தம்மீது அன்பு பிறக்கவுமாகும். புரட்சிக்கவிஞர் பாடத் தொடங்கி ‘‘வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை’’ என்று முதலடியை இசைத்தார். அது மொழி பெயர்க்கப்பட்டது. பின் ‘‘வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை, வரவிடவில்லை மதக் குருக்களின் மேடை” என்று இரண்டாவது அடியையும் சேர்த்து இசைத்தார். கவிஞரைக் காட்டிக் கொடுத்துத் தடை செய்யக் காத்திருந்த கல் நெஞ்சம் படைத்த காக்கையினத்தோன் உளங்கனிந்து மொழி பெயர்த்தான். உடனே பாதிரிமாரின் மலர்ந்த முகமெல்லாம் குவிந் தன. சாந்தம் குடியிருந்த உள்ளத்தில் சினம் குடியேறிற்று. கண்களின் வெண்மை சிவப்பா யிற்று. சாய்ந்திருந்தோர் நிமிர்ந்தார். கேளாச் செவிகள் கேட்கத் தலைப்பட்டன. விழாத் தலைவர் சோர்ந்தாரேனும், அறியும் அவா மேலீட்டால் மற்றப் பகுதியையும் கேட்க வேண்டி ‘கோந்தினியே’ கோந்தினியே’ (மேலே தொடங்கு மேலே தொடங்கு) என்றார். ‘‘வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை, வரவிடவில்லை மதக்குருக்களின் மேடை, நறுக்கத் தொலைந்தது அந்தப்பீடை!’’ என்று மூன்றாவது அடியையும் சேர்த்து கவிஞர் இசைத்தார். மொழி பெயர்க்கப்பட்டவுடன் கோணியிருந்த முகமெல்லாம் முற்றுங்கோண லாயின. தலைவர் மீண்டும் வாட்டமுற்றா ரேனும் மேலும் அறிய ‘கோந்தினியே’ என்றார். ‘‘வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை, வரவிடவில்லை மதக்குருக்களின் மேடை, நறுக்கத்தொலைந்தது அந்தப் பீடை, நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை!’’ என்று நான்காவது அடியையும் சேர்த்து இசைத்தார் கவிஞர், மொழி பெயர்ப்பினைக் கேட்டார் தலைவர். சுருங்கிய முகம் மலரத் துள்ளி எழுந்து சில சொன்னார். 'அதுதான்!  இந்தப் புலவன் சொல்லியதுதான். குருமார்க ளிடத்தே முடங்கிக்கிடந்த கல்வியை நாடெல் லாம் நீர் போல பரப்பினான் ழூயில்பெரி. அதைத்தான் இந்தப் புலவன் சொல்கிறான். இவன் தான் புலவன்! மற்றையோரெல்லாம் புலவராகமாட்டீர்!' என்பது மகிழ்ச்சியினால் எழுச்சியுற்று அத்தலைவர் கூறிய கூற்று. அன்று முதல் அந்தத் தலைவரின் மதிப்பிற் குரிய கவியாகவும், உற்ற நண்பராகவும் கவிஞர் விளங்கினார். பாதிரிமாரின் சீற்றமும், பாராள்வோரின் கொடுமையும் சூழக்கூடும் என்ற நிலையிலும் கவிஞர் கொண்டிருந்த துணிச்சல் வேறு எந்தக் கவிஞருக்கும் இந்த நாளிலும் வந்ததாகக் கண்டறியோம். கவிஞர் தாம் பார்த்து வந்த வேலையினின்றும் ஓய்வுபெற்று வெளியேறி விட்டார் என்பதைக் கேட்டுத் திராவிடம் மகிழ்ச்சிக் கொண்டு வருக என்று வாயார வாழ்த்தி, மனமார வரவேற்கின்றது’’ என்று நாவலர் நெடுஞ்செழியன் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார்.

அவரது துணிவு ஒப்புவமையற்றது!

நடுங்காத எழுதுகோல் - மடங்காத சுயமரி யாதை தொடங்காத இடம்தான் ஏது - நம் புரட்சிக் கவிஞருக்கு!

அவர்தாம் புரட்சிக்கவிஞர்! இல்லையா...?

மீண்டு(ம்) பறப்போம் பறப்போம்


April 27, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள்

கரோனா மூலம் ஏற்பட்டுள்ள நம் அனுபவம் முற்றிலும் எதிர்பாராதது மட்டுமல்ல; பலருக்கும் மன தைரியத்தைப் பறித்து, அச்சத்திலேயே இருக்கக்கூடிய மன இருள் சூழ்ந்துள்ள நிலை யையும் ஏற்படுத்தும் ஒரு நோயாகும்!

ஊடகங்களில் குறிப்பாக தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்தால், வளர்ந்த நாடுகள் என்று பெருமை பேசிக் கொண்ட நாடுகளும்கூட இதற்குத் தப்பவில்லை; மாறாக, இதிலும் ‘‘வளர்ந்த நாடுகளாக'' மாறிக் கொண்டிருக்கும் நிலை குறித்து மனித குலத்தின் அச்சமும், அவநம்பிக்கையும் நாளும் அதிகரிக்கும் ஓர் அசாதாரண நிலை தொடர்கிறது!

தனி மருந்து ஏதும் இதைத் தடுக்க இன்றுவரை இல்லையாயினும், நாளை நிச்சயம் அறிவியல் - மருத்துவவியல் ஆய்வு காரணமாக வரும் என்ற நம்பிக்கையை நாம் இழக்கவேண்டியதே இல்லை.

வெறுமனே அச்சம், கவலை, பீதி - இவற்றையே நம் மனம் சுற்றிச் சுற்றி வரும் நிலையைப் போக்க, குடும்பத்தாருடன் கலகலப்பான உறவாடல், உரை யாடல், கற்றவர்கள் தந்த கனிந்த அனுபவங்கள் பாடங்களாக உள்ள நம்பிக்கை ஊட்டும் நூல்கள் - நகைச்சுவை உணர்வுடன் கூடிய காட்சிகளின் மூலம் கவலையை விரட்டும் கருவிகளாகட்டும்.

இவற்றால் நிச்சயம் நமது ஊரடங்கு, வீட்டுக் குள் இருத்தலை மிகுபயன் உள்ளவையாக மாற்றிடலாம் - எதுவும் நம் அணுகுமுறையைப் பொறுத்ததே!

எதுவும் நம்பிக்கையில் - நம் முடிவில்தான் உள்ளது. மறவாதீர், இந்த அனுபவமும் மனிதகுலம் இதுவரை பெறாத ஒரு விசித்திர அனுபவம் என்பதை நன்கு ஆழ்ந்து எண்ணிப் பாருங்கள்.

இது தண்டனையும் அல்ல; சிறைவாசமும் அல்ல; அதேநேரத்தில், சுய கட்டுப்பாடுள்ள ‘‘பத்தியக்'' கடமையாகும் - அதுவும் நம்மையும், நம்மைச் சார்ந்தோரையும், நமது மக்களையும் பாதுகாக்க - மிகவும் எளிய - செலவில்லாத - நேரம் தாராளமாகக் கிடைக்கிறது என்று எண்ணி செலவழிப்பவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

அதேநேரத்தில், அன்றாடம், தொழில் செய்து கூலி வாங்கி ஜீவனம் நடத்தும் நம் ஏழை, எளிய சகோதர, சகோதரர்கள் நிலைபற்றி எண்ணும் போது, உண்ணும் உணவு பசியற்ற நிலையில் - ருசியற்றுத் தெரிகிறது! அதுதான் வேதனை!!

நம்மால் முடிந்தவரை அத்தகையோருக்கு இந்த இடைக்கால இக்கட்டிலிருந்து விடியலை ஏற்படுத்த நமது பங்களிப்பை நாம் - வாய்ப்பும், வசதியும் எந்த அளவுக்கு உதவிட இடந்தருமோ அந்த அளவு செய்திட முன்வருதலும் அவசியம்.

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' - குறள் 322.

என்ற குறள் தந்த வள்ளுவன், அறத்தைப் பொதுமையாக்கி, தலை சிறந்த அறம் இதுவே என்று போதித்த பண்பாட்டிற்குரியவர்கள் என்ப தால், பகுத்துண்பதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதி லும் கிடைக்காத ஒப்பற்ற தனி மகிழ்ச்சி அல்லவா?

இயற்கை விதி என்பது அறிவியலை அடிப் படையாகக் கொண்டதே என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் எவருக்கும் புரியும்.

24 மணிநேரமும் இரவே என்பது ஒரு நாள் அல்லவே!

இரவு முடியும் நேரத்தில், காலையில் வெள்ளி முளைத்து விடியும் நேரமாகி, பொழுது விடியா மலா போகும்? வெளிச்சம் கிடைக்காமலா போகும்?

தொடக்கம் என்றால், முடிவும் உண்டு என்பது தான் உண்மை;

நமக்குள்ள பகுத்தறிவினால் சிந்தித்துப் பய மற்றுத் தெளிவுடன், துணிவுடன் வாழக் கற்றுக் கொள்ளவேண்டும்.

வாழ்க்கையில் துன்பமே எப்போதும் தொடரு வதில்லை - அதுபோல இன்பமே நிரந்தரமும் இல்லை.

இடர் எதுவரினும் அதைத் துணிவுடன் எதிர் கொண்டு மீண்டு வர முடியும் - வருவோம் என்ற நன்னம்பிக்கைதான் நம்மை உயர்த்தும்.

அச்சமின்மைதான் நோய் எதிர்ப்புச் சக்திக்கு அடிப்படையும்கூட என்பது நாமறிந்த மனோ தத்துவப் பாடம்.

வரலாற்றைப் புரட்டுங்கள்!

தன் முன்னால் நஞ்சை நீட்டியபோதும், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பின்வாங்காத துணிவுள்ள கொள்கை மாவீரன் சாக்ரட்டீசைப் பற்றிப் பேசுகிறோமே - அவரது அறிவு மொழி களை இந்த நேரத்தில் சற்றே நினைவூட்டிக் கொள் ளுவோம்.

‘‘துணிவு என்பது இயல்பாக அமைவது - அது கற்றுத்தரப்படுவதல்ல.''

‘‘உங்கள் உள்ளம் அழகானதாக இருந்தால், நீங்கள் காணும் காட்சியும் அழகானதாக இருக்கும்.''

‘‘துணிவும், அறிவும்மிக்க உள்ளம், வெளி உலக பாதிப்பினால் கலக்கமோ, குழப்பமோ அடைவ தில்லை'' - சாக்ரட்டீஸ்.

‘‘நம்பிக்கை என்பது ஒரு நாளில் உதிர்ந்துவிடும் மலராக இருக்கக்கூடாது; மேலும் மேலும் பூக் களை தோற்றுவிக்கக் கூடிய செடியாக இருக்க வேண்டும்'' - சீனத்து அறிஞர் கன்பூஷியஸ்.

‘‘மூட்டைத் தூக்கும்போது நான் பாரத்தினால் கஷ்டப்பட்டிருப்பேனே  தவிர, வெட்கத்தினால் ஒருபோதும் துன்பப்பட்டதில்லை.'' - தந்தை பெரியார்

எனவே, எதையும் வென்றெடுக்கலாம், பகுத் தறிவு என்ற ஒப்பற்ற ஆயுதம் நம் கையில் இருக் கையில் நமக்கேன் பயம்!

வீட்டுக்குள் இருக்கும் நாம் கூட்டுக்குள் ஓய் வெடுக்கும் பறவைகள்தான்!

மறவாதீர், மீண்டும் பறப்போம்! நிச்சயம் பறப்போம்!!

மிக்க பண்பின் குடியிருப்பு அவர்தாம் பெரியார் பார்! -4


April 25, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள்

“மிக்க பண்பின் குடியிருப்பு” அவர்தாம் பெரியார் பார்! (4)

“மிக்க பண்பின் குடியிருப்புதந்தை பெரியார் அவர்களைப்பற்றி பலரும் ஜோடனையாகவோ, கற்பனைக் கதைகளாகவோ, ஊகங்களாகவோ பலவற்றைக் கூறி, "அவர் ஒரு கஞ்சன்”, “கருமித்தனம் படைத்தவர்” என்று கூறுவது வழக்கம். இவை பெரியாரைப்பற்றி அறியாதோரின் தவறான மதிப்பீடு. 'சிக்கனத்தின் சிகரம்' அவர் என்பது உண்மை ; ஆனால், பலரும் சிக்கனத்திற்கும், கருமித்தனம் - கஞ்சத்தனத்திற்கும் உள்ள வேறுபாடுபற்றி அறியாதவர்களேயாவர்! அய்யா சொல்வார், "எதையும் தேவைக்கு ஏற்ப செலவழிப்பது - சிக்கனம் தேவைக்குமேல் செலவழிப்பது- ஆடம்பரம் தேவைக்கே செலவழிக்காது இருப்பது - கருமித்தனம் ஆகும்.

"வரிசையில் தந்தை பெரியார் அவர்கள் ஒரு சிக்கனக்காரர் - ஆடம்பரத்தை அறவே வெறுத்து, எளிமையே எப்போதும் இனிமை என் பதை வாழ்ந்து காட்டி, அச் சிக்கனத்தால் சேர்த்த பொருளைத் தன் பெண்டு, தன் பிள்ளை, தம் மக்கள் என்று தராமல், தொல்லுலக மக்களுக்குத் தொண்டறத்திற்கென விட்டுச் சென்ற ஒப்பாரும் மிக்காரும் இலாதவர் அவர்! நகைச்சுவையரசர் கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன், சீரிய பகுத்தறிவாளர்.

அவர் 1945 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு கொலை வழக்கில் திட்டமிட்டே சிக்க வைக்கப்பட்டு, ஆயுள் தண்டனை இவருக்கும், இசை மேதை எம்.கே. - தியாகராஜ பாகவதருக்கும்! அப்போது சென்னை மத்தியசிறைச்சாலையில் கலைவாணரைச் சந்தித்த தந்தை பெரியார், வழக்கு நடத்தப் பணம் இருக்கிறதா அவரிடம் என்று சந்தேகப்பட்டு, சுமார் 10 ஆயிரத்திற்கும்

மேற்பட்ட ஒரு பெருந்தொகையை கையில் எடுத்துக்கொண்டு, கொடுக்க முன்வந்தபொழுது கண்ணீர் விட்ட என்.எஸ்.கே. கனக்கப்அ பொருள் தட்டுப்பாடு இல்லை; தேவைப்படும்போது கேட்டு வாங்கிக் கொள்கிறேன் என்றார்.

மறுநாள் டி.ஏ.மதுரம் அம்மையாரிடம், அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு மீரான் சாயபுத் தெருவுக்குச் சென்று, அய்யா அவர்களைச் சந் தித்து, அப்பணத்தைத் திருப்பித் தரும்படி என்.எஸ்.கே அவர்கள் அனுப்பியது வரலாறு அல்லவா? (அன்றைய பத்தாயிரம் இன்று கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள பெருந்தொகை என்பதையும் மறந்துவிடக்கூடாது).

1967- அறிஞர் அண்ணா அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை பெரிய மருத்துவ மனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று, அமெரிக் காவிற்கு அழைத்துச் செல்லப்படும் முன், அன்று காலையில் அய்யா, அண்ணாவைப்பார்த்து நலம் வாவைப் பார்க்க நலம் விழைந்து வழியனுப்பும் வகையில், சென்னை மருத்துவமனைக்குச் செல்கிறார்.

உடன் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார், புலவர் கோ.இமய வரம்பன் (தனிச் செயலாளர்), நான் ஆகியோர் உடன் செல்கிறோம். அப்போது அய்யா உடல் நலம் விசாரித்த பாங்கு கண்ட அண்ணா , மிகுந்த யார், புலவன் அன்னைஉணர்ச்சிவசப்பட்ட வராகக் காணப்பட்டார்.

விசாரித்துப் பேசிய தந்தை பெரியார், ஒரு பண முடிப்புக்கட்டை அறிஞர் அண்ணா அவர்களிடம் தந்து, வெளிநாட்டில் சிகிச்சை என்றால், மிகவும் செலவாகும். இதை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார், அண்ணாவின் கண்ணீர்த் துளிகள் ஒரு பக்கம் கசிந்த நிலை. அண்ணா உணர்ச்சியோடு சற்று மவுனமானார்; பிறகு, அண்ணா , அய்யாவுக்கு நன்றி கூறி, 'அய்யா, அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்தாகிவிட்டது.

தங்களுக்கு மிகவும் நன்றி' என்று தழுதழுத்த குரலில் கூறிடும் நிலையில், ப்போது தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், அண்ணாவைப் பார்த்து வழியனுப்பி, நலம் விசாரிக்க அங்கே வந்திருந்தார், ஒரு குடும்பம் போல, பல்துறைப் பிள்ளைகளும் - தந்தையும், த தனயர்களுமாக இருந்த அந்தக்காட்சி, எங்களுக்கு " என்றென்றைக்கும் அழியாத ஓவியமன்றோ!

" இதுபோல், பற்பலருக்கும் அ இல்லாமல் விரும்பிச் செய்திட்ட உதவிகள் அவருக்கும், அவருடைய டைரிக் குறிப்புக்கும் மட்டுமே வெளிச்சம்; பற்பல நேரங்களில் அம்மா விடம்கூட அவர் அப்போது கூறியது கிடையாது! ஒரு கை செய்த உதவி மறு கை அறியக்கூடாது என்பது மத வாசகமாக இருக்கலாம்;

ஆனால், அதை நடைமுறையில், வாழ்வியலாக ஆக்கி, இறுதிவரை வாழ்ந்தவர் ஈரோட்டு வள்ளல் நம் - அய்யா அவர்கள். "மிக்க பண்பின் குடியிருப்பு” என்ற புரட்சிக் கவிஞரின் கவிதை ஓவியம் எவ்வளவு சரி என்பது புரிகிறதல்லவா? அய்யாவின் பண்பு நலன்கள் பல வரலாற்றில் மற்ற பெரிய தலைவர்கள் என்போரிடம் தேடினா லும் கிடைக்காது - அவை அரிய புதையல்கள், கனத்த கருவூலங்கள். ஞரின் கலவன் குடியின்