"உங்கள் நாடித் துடிப்பு - இதயத் துடிப்பு அறிவீர்" (2) முக்கிய தலைப்பு: டாக்டர் ஏ.எம். கார்த்திகேசன் அவர்கள் பேசிய தலைப்பு. "உங்கள் நாடித்துடிப்பை அறிவீர்
இதயத் துடிப்பில் மாறுபாடுகள்" என்பதாகும்.
மிக அருமையான உரை; சிக்கலான பொருள் - மருத்துவர்கள் சிகிச்சையில் நிபுணர்களாக இருப்ப வர்கள்கூட, மற்றவர்களுக்கு விளங்கும் வகையில் உரைகள் மூலம் விளக்குவது அவ்வளவு எளிதானதல்ல; அதில் டாக்டர் அவர்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார் இந்த அரங்கத்தில் அவர் விளக்கிய முறை - உரை மூலம்!
வந்திருந்தோர் கேட்போர் நன்றாக உள்வாங்கி, புரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருந்தது; அவர் படங்களை போட்டு, ஓவியம் வரைந்து விளக்கிய சிறந்த முறை அருமை.
'டாக்டர்' என்றால் teacher (கற்றுத் தருபவர்) என்று பொருள் என்று டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன் அவர்கள் தலைமை உரையில் குறிப்பிட்டது. இவரது உரை மூலம் மிகவும் துல்லியமாக விளங்கியது!
உரையின் முக்கிய சுருக்கிய பகுதிகள் இதோ:
"இந்தியா வெகு விரைவில் உலகின் சர்க்கரை நோயின் தலைமை இடமாகி விடக் கூடிய அபாயம் இருக்கிறது. எனவே இதயத் துடிப்பு - நாடித் துடிப்பு என்றால் சர்க்கரை நோய் - இரத்த அழுத்தம் (B.P) போன்றவைகளில் அலட்சியம் காட்டுவதே இந்த இதயத் நோய் துடிப்புகளில் மாறுபாடுகள் ஏற்படுவதற்கு மூல காரணம் ஆகும்.
இதயத் துடிப்பு என்றால் எல்லோரது மனதில் டாக்டர்களில் பதிய வைத்திருக்கும் ஒன்று 72 துடிப்பு நிமிடத்திற்கு இருக்க வேண்டும். அது கூடினாலும் குறைந்தாலும் உடனே பலர் மிகுந்த கவலை யடைகின்றனர்.
60 முதல் 100 வரை கீழும் மேலும் சென்றாலும் அதுபற்றி உடனே பயம் கொள்ளத் தேவையில்லை. ஏற்றத் தாழ்வுகள் ஏற்ற இறக்கம் பல காரணங்களால் இருக்கலாம் - நரம்புகளில் ஏற்படும் சுருங்கி விரிதல். எனவே நாடித் துடிப்பு -இப்போதே நீங்கள் பார்க்க பழகுங்கள் அல்லது உங்கள் கைத் தொலைபேசியில் ((Mobile) Pulse Heart Rate Monitor ஒரு App மூலம் பின்னால் விரலை அழுத்தி வைத்தால் தெரிந்து கொள்ளலாம். உடனே பயப்பட்டு விட வேண்டாம்!
1. பல அறிகுறிகள் பற்றி அறிந்து கொள்ள நெஞ்சு படபடப்பு, தலை சுற்றல், மயக்கம் - இவை மூளைக்குச் சரியான இரத்த ஓட்டம் இல்லாததால் ஏற்படும் மாறுதல்கள் ஆகும்.
2. உணர்ச்சி பூர்வ பாதிப்புகள் Emotional Disturbances) வயது காரணம் அல்லது துக்கச் செய்தி அதிர்ச்சி செய்திகளால்கூட அந்த மயக்கம்.
3. களைப்பு (Fatigue) காரணமாகவும் இருக்கலாம்.
இதயத் துடிப்பு பல விளையாட்டு வீரர்களுக்கு. 45-50 தான் இருக்கும். அது அவர்களது நரம்பு - விளையாட்டுப் பயிற்சி காரணமாக இருக்கும். அதை கண்டு பயப்படுதல் தேவை இல்லை. அது அவரது விளையாட்டுக் காரணமாகவே அமைந்த ஒன்றாக இருக்கக் கூடும். மயக்கம் வந்தவுடன் பலரும் உடனே நரம்பியல் நிபுணரான டாக்டரிடம் (Neuro) தான் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். மயக்கம் முதுமை யினால்கூட இருக்கும் - இதயத்திற்கு தேவையான ரத்தம் செல்லாமலும், அசுத்த ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, தூய்மையற்ற இரத்தம் ஒரு புறம் வெளியேற்றப்பட்டு, தூய்மையான இரத்தத்தை உடல் முழுவதும் ஓடச் செய்யும் வேலையை இதயம் இடைவிடாமல் செய்கிறது.
இதை மாற்றிட மருந்து மாத்திரை என்று உடனே செலுத்தி குணப்படுத்தி விட முயலுவதை விட, இதய நோய் சம்பந்தப்பட்டவர்களிடம் காட்டி இதய படபடப்பு அதி வேகத் துடிப்பு இதனையொட்டி கண்டறிய முயற்சிக்க வேண்டும்.
கருவில் வளரும் குழந்தையின் இருதயம்கூட சரியாக இயங்குகிறதா இல்லையா என்பதை Ultrasonic Scan
மூலம் - கருவிகள் மூலம் - கண்டறிந்து சரி செய்து, பிறந்த பிறகும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் சரி செய்யலாம். அந்த அளவுக்கு மருத்துவத் தொழில் நுட்பம் இப்போது வளர்ந்து விட்டது.
'பேஸ் மேக்கர்' (Pace Maker) என்ற கருவி மூலம் இதயத் துடிப்புகளை ஒழுங்குபடுத்திட முடியும்; அதைப் பொருத்தி விட்டால், அது இதயத் துடிப்பை ஒழுங்கு படுத்தும் வேலையைச் செய்கிறது. பல காரணங்களால் இதயம் சுருங்கி விரியும், துடிப்புகளில் வேறுபாடுகள் வரக்கூடும். அக்கருவி எப்போது கூடுகிறதோ அதைக் குறைத்து ஒழுங்குபடுத்த, எப்போது குறைகிறதோ அதை போதிய அளவுக்கு ஒழுங்குபடுத்தி Balance மூலமாக ஒழுங்குபடுத்துகிறது.
இதயத் துடிப்புகள் உடலில் உள்ள மின்சக்தியைத் தூண்டி, ஒழுங்குபடுத்தி, இப்பணிகள் நடத்திட கருவிகள் உதவுகின்றன.
AV Nodel Reentrant TachyCardia (AVNRT) என்பதை சிகிச்சை முறை மூலம் ElectroPhisology என்பதன் மூலம் Radio Freqeuncy (R.F.) சிகிச்சை முறை (Ablation) உடனடியாக இரத்த ஓட்டத்தில் உறைதல் (Clot) ஏற்படாமல் தடுக்கும் பல வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும்.
ரத்தம் உறைந்தால் ரத்த ஓட்டத்தில் (Clot) ஏற்பட்டால் உடனே (stoke) பக்கவாதம் வர வாய்ப்பு உண்டு. அதைத் தடுத்து மேற்கண்ட சிகிச்சை மூலம் சரி செய்துவிட முடியும்.
இதையும் தாண்டி (பேஸ்மேக்கர் கருவியையும் தாண்டி) மேலும் சக்தி வாய்ந்த இன்னொரு கருவி CRT முறைமூலம் இதயத்திற்குள் பொருத்தி, துடிப்பை ஒழுங்குபடுத்தவும் Chips sகளைப் பயன்படுத்தி - நமக்கே - டாக்டர்களுக்கேகூட நோயாளியின் இதயத் துடிப்புக் குறைந்தால் அறிவிக்கும் நிலையும்கூட, இன்று வளர்ந்துள்ளது.
இந்தக் கருவி, வீட்டில் மின்சாரம் நின்றவுடன் எப்படி இன்வெர்ட்டர் உடனே இயங்கி, வெளிச்சம் தருகிறதோ, மின்சாரம் மீண்டும் வந்துவிட்டால் தானே இயங்காமல் நின்று விடுகிறதோ அது போல் இக்கருவி வேலை செய்யும்" என்று விளக்கினார் டாக்டர் கார்த்திகேசன் - பலரும் புரிந்து கொள்ளும் வகையில்.
இதன் மூலம் இதயத்தில் இதய வலி, மாரடைப்பு வந்தவர்கள், தக்க சிகிச்சை எடுத்துக் கொண்டு நன்றாக வாழவும் வாய்ப்பு உண்டு என்பதை விளக்கிக் கூடியிருந்தவர்கள் பலரின் அய்யங்களை கேள்விகள் மூலம் கேட்டபோதும், எல்லாவற்றையும் தெளிவாக விளக்கினார், சரியாகத் தந்துள்ளார்.
நமது பெரியார் வலைக்காட்சியில் (கணினி மூலம்) திரும்பத் திரும்ப அவர்கள் ஒளிபரப்பும்போது அதைக் கேட்டும், பார்த்தும் கூட்டத்திற்கு வராதவர்கள்கூட பயன் பெறலாம்.
இந்த நிகழ்ச்சி - ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்ச்சியாகும். என்றாலும் வருமுன்னர் காக்கும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரு முறை முழு உடற்பரிசோதனை செய்து கொள்ளுவதில் யாரும் அலட்சியம் காட்டாமல், முறையாக செய்தால் நல வாழ்வு பெறலாம்.
'நோயற்ற வாழ்வு தானே குறைவற்ற செல்வம்' - அதனைச் சேமிக்க அனைவரும் முயற்சிப்பது நல்லது.
(நாளையும் தொடரும்)
- விடுதலை நாளேடு 17. 8. 18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக