பக்கங்கள்

சனி, 2 அக்டோபர், 2021

தமிழிசைப் போராளி எம்.எம். தண்டபாணி தேசிகர் - என்றும் வாழ்பவர்!

 

தமிழ்நாட்டில் தமிழில் பாடுவதற்கும்அதை இசை மேதைகள் அங்கீகரிப்பதற்குமே ஓர் நீண்டநெடிய போராட்டத்தை நடத்த வேண்டியிருந்த வரலாறு இன்றைய இளையர்களுக்குத் தெரியாத வரலாறு!

பிரபல பாடகர் வரிசையில் முன்னணியில் இருந்தும் இந்த உரிமைக்காகப் போராளியாக இசை மேடைகளில் நின்றவர் - வென்றவர் 'இசையரசுஎம்.எம்தண்டபாணி தேசிகர் அவர்கள் ஆவார்.

1908ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் நாள் பிறந்தவர்  -ஓதுவார் குடும்பத்தில் நன்னிலம் அருகே உள்ள திருச்செங்காட்டாங்குடியில் பிறந்தவர்.

பிறகு மதுரையை தமது இருப்பிடமாக ஆக் கியதோடுமுன்னொட்டில் எம்.எம்தண்டபாணி  தேசிகர் என பெயரில் இடம் பிடித்தது!

சிறுவயதில் தமிழில் தேவாரம் பாடி பரவசம் அடைந்தவருக்கு 14 வயதில் திருமருகல் கோயிலில் அரங்கேற்றம் நடந்தது!

கணீர் கணீர் என்ற வெண்கல நாதக்குரல்கனத்தகருத்த சரீரம் மட்டுமல்ல;  சாரீரமும் கனத்த குரல் - கம்பீரமாக ஒலிக்கும்

பக்திமிக்க இவரை தந்தை பெரியார்அறிஞர் அண்ணாபுரட்சிக் கவிஞர் பாரதிதாசன்கல்வி வள்ளல் காமராசர் முதலிய பல தலைவர்களும்ஜெமினி எஸ்.எஸ்.வாசனும் மிகவும் நேசித்தனர் என்பது வியப்பானது அல்லவா?

திருவையாறில் ஆண்டுதோறும் நடைபெறும் "தியாகபிரம்ம உற்சவம்என்ற தியாகய்யர் சமாதியில் பாட்டு பாடினால் தங்கள் தகுதி உயரும் என்று கருதிபல பிரபல சங்கீத வித்துவான்கள்இசைப் புலமையாளர்கள் சென்று பாடுவார்கள் கூட்டம்கூட்டமாகஇது ஒரு சங்கீத சம்பிரதாய மேடை.

அங்கேதமிழில் - தமிழ்நாட்டு திருவையாறு ஊரில் பாட முடியாத நிலை அப்போது (1945-46).

"இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகர் தமிழில் பாடி விட்டதால் மேடை தீட்டாகி விட்டதுநாங்கள் பாட மாட்டோம் அங்கேஎன்று மகராஜபுரம் விசுவநாய்யர்முசிறி சுப்ரமணிய அய்யர்செம்மங்குடி சீனுவாச அய்யர் போன்ற வகையறாக்கள் போர்க்கொடி உயர்த்தி விட்டனர்தமிழ்ப் பாட்டுப் பாடிய மேடையை சாணி தெளித்துமெழுகிக் கழுவி சுத்தம் செய்த பிறகே இந்த 'மேற்படியார்கள்பாட முன் வந்தது அக்காலத்து பரபரப்புச் செய்தி!

இத்தகவலை மய்யப்படுத்தி, 'குடிஅரசுவார ஏட்டில் துணையாசிரியராக சேர்ந்த ஈரோட்டு குருகுல மாணவரான முகருணாநிதி; (அப்பொழுது அவர் 'கலைஞர்பட்டப் பெயர் பெறாத நிலையிலும்இதுபற்றி தந்தை பெரியார் ஒரு துணைத் தலையங்கம் கண்டித்து எழுத "கலைஞர்இடம் கேட்டுக் கொண்டார்!

'தீட்டாயிடுத்துஎன்று அன்று அவர் 'விமானிஎன்ற புனை பெயரில் எழுதியதை தந்தை பெரியார் வெகுவாகப் பாராட்டினார்அன்று எங்களைப் போன்ற மாணவர்களுக்கு மேடைப் பேச்சுக்கு நல்ல 'சரக்கை'ப் பெற்றுத் தந்த வாய்ப்பாக அமைந்தது!

தமிழ் பாட்டை 'துக்கடாஎன்று அலட்சியமாய் பல இசைமேதாவிகள் அன்று குறிப்பிட்டே தாழ்த்துவார்கள்!

தண்டபாணி தேசிகர் புகழும் ஓர் தமிழிசைப் பேரொளியாக மிகவும் உயர்ந்தது!

ஆழ்ந்த பக்தியாளர்தான் அவர்ஆனால் மொழி உணர்வுஇன உணர்வை அவர் துறந்ததே இல்லை - உரிமைப் போரைத் துவக்கி நடத்தி வெற்றி கண்டவர்பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இசைக் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்று சாதனை செய்தவர்!

புரட்சிக் கவிஞரின் 'துன்பம் நேர்கையில் 'யாழ்எடுத்துஎன்ற பாட்டைதேசிகர் பாடி கேட்கும் போது நம்மையறியாமல் மெய் மறப்போம்இன்பத்தில் திளைப்போம்!!

அதுபோலவே 'பாட்டுக்கொரு புலவன் பாரதியாடா?', 'நல்ல சமயமடாஇதை நழுவ விடுவோமோஎன்ற பாட்டுஇன்னும் பல திரையிசைப் பாடல்களும்  - 'ஜெமினி நந்தனாரில் 'எந்தாயுமல்லவா என்னப் பனல்லவாபாடல் உருக்கமிகுந்த பாடல் - நந்தனார் நடிப்பு அபாரம்; 'பட்டினத்தார்படம் அக்காலத்தில் பல வாரங்கள் ஓடியது!

'தாமரைப் பூத்தத் தடாகமடாஎன்று ஓங்கிய குரல் ஒலிக்கக் கேட்பதே இன்பம்!

தந்தை பெரியார் எம்.எம்தண்டபாணி தேசிகரைப் பாராட்டிய விழாக்களில் கலந்து பெருமைப்படுத்திப் பேசியுள்ளார்!

அண்ணாவும்புரட்சிக் கவிஞர்கலைஞரும் பல தரப்பட்டவரும் 'தமிழிசைப் போராளிஎன்று பாராட்டிய மறையாத மகத்தான மனிதர் இவர்!

(பிறந்த நாள் நினைவுகள்)

அக்கிரகாரத்து அதிசய மனிதர் வ.ரா.வின் கேள்விக் கணைகள்

 

"பெண்ணை இந்த தேசத் திலே  மனித ஜென்மம் கொண்ட வளாகவே கருதவில்லைஅவள் ஆண் பிள்ளையின் சொத் தாகத்தான் பாவிக்கப்பட்டு வந்திருக்கிறாள்.

ஓர் அரசன்தன் மனைவி யையேவிலைக்கு விற்றான்இன்னொருவன்தன் மகனுக்குப் பேசிய பெண்ணைத் தானே மணந்து கொண்டான்;  ஒரு பேர் வழிதன் தகப்பன் கட்டளைக் கிணங்கி தாயைக் கொன்றான்ஓர் அரசன் நாட்டியம் ஆடிய பெண்ணின் மேலே மோகம் கொண்டுஅவளை பட்டமகிஷி ஸ்தானத்தில் வைத்துபட்ட மகிஷியைத் துரத்தி விட்டான்.

ஒருவன் எத்தனையோ தாரங்களை மணந்து கொண்டான்ஒருவன் தன் மனைவியின் கற்பைச் சோதிக்க எண்ணிஅவளைத் தீயில் குதித்து எழு என்று கட்டளை இட்டான்அரசன் எவ்வழி - குடிகள் அவ்வழிபெண்ணின் கதியைப் பற்றி என்ன சொல்வது?"

***

"பெண்ணைத் தேவதாசியாக்கினார்கள்பெண்ணுக்கு நேர்ந்த அவமானங்களுக்குள்இதைக் காட்டிலும் பயங்கரமானதும்கேவலமான தும் வேறு எதுவும் இருக்க முடியாதுஇந்த ஆபாசமான வழக்கத்தைச் சிலர் சாஸ்திர மேற் கோள்களுடன் ஆதரிப்பதை பார்க்கும் பொழுதுஅவர்களை அப்படியே சித்திரவதை செய்யலாம் போல - அவ்வளவு ஆத்திரம் உண்டாகின்றதுபெண்களை இதைக் காட்டிலும் கொடுமையாகக் கேவலப்படுத்த முடியுமா?"

"அக்கிரகாரத்து அதிசய மனிதர்என்று அறிஞர் அண்ணாவால் வர்ணிக்கப் பட்ட .ராஎன்ற

.இராமசாமி அய்யங்கார் என்ற முற்போக்கு எழுத் தாளர் 1945இல் அதாவது சுமார் 76 ஆண்டுகளுக்கு முன் எழுதிய 'கோதைத்தீவுபுதினத்தில் மேற்காட்டிய கருத்துகளை தனது பாத் திரங்கள் வாயிலாகப் பேச வைத்தவர்.

தந்தை பெரியார்கலைவாணர் என்.எஸ்கிருஷ்ணன் போன்ற பெருமக்களை அக்காலத் திலேயே அடையாளம் கண்டு "தமிழ்நாட்டுப் பெரியார்கள்என்ற  நூல் எழுதி பெருமைப்படுத் திய பெரு உள்ளத்திற்குச் சொந்தக்காரர்!

தேசியவாதி - விடுதலைப் போராட்டத்தில் உப்பு சத்தியாகிரகத்தில்  மாத தண்டனை அடைந்து அலிப்பூர் ஜெயிலில் இருந்தவர்!

'மணிக்கொடிஏட்டின் ஆசிரியராகஏராள மான புதுமை எழுத்தாளர்களுக்கு ஆக்கமும்ஊக்கமும் தந்தவர்!

எனது பல்கலைக் கழக மாணவப் பருவத்தில் நான் விரும்பி சேகரித்த நூல்களில், '.ரா.'வின் நூல்களும்மராத்திய வி.ஸிகாண்டேகரின் புதினங்களும்தான் - தமிழில் இலக்கிய ரீதியாக இளைப்பாற்றிக் கொள்ள!

1919களில் 'சுந்தரிஎன்ற அக்கிரகார இளம் விதவைபற்றிய - புதினம் சமூகக் கொடுமைகளை அப்படியே 'ஸ்கேன்செய்துகாட்டும் யதார்த்த நாவல்!

சமூகத்தில் எதிர்நீச்சல் எழுத்தாளர் இவர்பாராட்டைப் பற்றி கவலைப்படாத யதார்த்த எழுத்தாளர்மற்றவர்கள் போற்றிய இராமாயணப் பாத்திரங்களை கடுமையாக விமர்சித்துதன் நெஞ்சுக்கு நீதி சொன்ன நேர்மையாளர்!

இதே 'கோதைத் தீவுபுதினத்தில் "விபீஷணனோ லங்கா பட்டணத்தின் மகுடத்தை இராமனிடமிருந்து பெற்றுக் கொண்டான்இந்த மகுடம் அண்ணன் இராவணனைக் காட்டிக் கொடுத்ததற்குப் பரிசு என்று ஏன் சொல்லக் கூடாது!"

"பரதனுடைய பக்தியை விபீஷணனிடம் காண முடியவில்லைஅண்ணனுடைய மகு டத்தை தம்பி கூச்சமில்லாமல் வாங்கிக் கொண் டானே என்று லோகா பவிதம் ஏற்படுமே என்பதற்குக்கூடவிபீஷணன் பயப்படாமல் காரியம் செய்ததைப் பார்த்தால் அவன் மறுக்கலப்பில்லாத பக்தன் என்று திட்டமாகச் சொல்ல முடியாதுஅண்ணனைக் காட்டிக் கொடுத்துப் பட்டத்தைப் பெறும் தம்பியை பக்தன் என்று சொல்ல முடியுமா?"

"விபீஷணனுடைய செயலை பக்தியாகக் கொண்டாடும் தேசத்திலே தங்களை அறியாமலே ஆயிரக்கணக்கானவர்கள் தேசத் துரோகிகள்  ஆகிவிட்டார்கள்"

-அருமையான நெத்தியடி பார்த்தீர்களாபதில் எவரால் கூற முடியும்!

அவரது நினைவு நாள் (23.8.2021) இன்று. 17.9.1889இல் பிறந்தார். 23.8.1951இல் மறைந்தார்.

என்றாலும் புதுமை இலக்கிய உலகில் என்றும் வாழுகிறார் - இந்த அக்கிரகாரத்து அதிசய மனிதர்இல்லையா?

இலக்கியச் சந்தைக்குப் போகலாமா? (1) & (2)

 இலக்கியச் சந்தைக்குப் போகலாமா? (1)

ஜப்பானின் "இச்சிகோ - இச்சியே" - பற்றி தெரிந்து கொள்ளுவது புதிதாக ஒன்றை நம் வாழ்க்கையில் கற்றுக் கொள்வதாகும்!

நாம் அறிந்தவைகளைவிடஅறியாதவைகள் வாழ்க்கையில் மிக அதிகம்.

அதிலும்கூட புரிந்தவைகளை விட நமக்குப் புரியாதவைகளே மிகவும் அதிகமாக உள்ளது.

சிலருக்குள்ள தன் முனைப்பு (Egoகாரணமாக புரியாதவைகளையும்கூட புரிந்ததாக போலித்தனமாகக் காட்டி தங்களையும் ஏமாற்றிக் கொண்டுமற்றவர்களையும் ஏமாற்றுவார்கள்இது உலகியல்!!

அந்த வகையில் முன்பு நான் "இக்கிகைஎன்ற சுகமான வாழ்க்கைப் பயணத்தை ஜப்பானின் முதுகுடி மக்கள்கூட எப்படி அனுபவித்து மகிழ்கின்றனர் -  நல வாழ்வு உடலுக்கும்உள்ளத்திற்கும் அதன் மூலம் எப்படி புத்தாக்க வாழ்க்கையாக அமைகிறது என்பதை ஓர் ஆறு கட்டுரைகளில் எழுதினேன்.

சிங்கப்பூரில் சில ஆண்டுகளுக்குமுன் வாங்கிப் படித்த ஆங்கில நூல். (அது இப்போது தமிழிலும் மொழியாக்கம் செய்து மஞ்சுள் பதிப்பகத்தினரால் நூல் வெளி வந்துள்ளது)

அதன் 'இச்சிகோ - இச்சியேஎன்ற இந்நூல் எனக்கே புதிது.

மும்பையில் பல ஆங்கில நூல்களை தமிழாக்கம் செய்பவர் (அவர் செய்வது வெறும் மொழிபெயர்ப்பு மட்டும் அல்லதமிழாக்கமும் கூடநண்பர் PSV குமாரசாமி அவர்கள்.

அவர் பல நூல்களை எனக்கு கற்க அனுப்பி யுள்ளார்அத்துணையும் தமிழ் மொழிக்கும்இலக்கியத்திற்கும்கூட கருவூலங்கள் போன்றன.

பல கோடி விற்பனையில் உலகின் பல்வேறு மொழிகளில் வரும் ஆங்கில நூல்களை தமிழாக்கம் செய்து வரும் நண்பர் PSV குமாரசாமி அவர்களைப் போலவேதிருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களது தமிழாக்க நூல்களும் வந்தன!

மஞ்சுள் பதிப்பகத்தின் சிறப்பான வெளி யீடுகள்.

வைக்க இடமும்படிக்க நேரமும் எனக்குப் பெரிதும் பிரச்சினைகளாகி விடுகின்றன.

என்றாலும் நான் விடுவதில்லைபசியுள்ளவன் இடம்பொருள்சூழ்நிலை அந்தஸ்து என்றா பார்ப்பான்இல்லையே!

கண்ட இடத்திலும்ஏன் தந்தை பெரியார் அவர்களே சாலை ஓரங்களில் நின்று சாப்பிட்டு விட்டுப் பயணங்களைத் தொடர்ந்த அனுபவத் தில் நானும் இடம் பெற்றதால்!

பார்த்தால் பசி தீரும் - பழமொழி

நமக்கோ படித்தால்தான் பசி தீரும்.

ருசி தெரியும்.

புசியுங்கள் என்று மற்றவருக்கும்

ஈந்து மகிழ முடியும்.

படித்தேன் இரவில் - தூக்கத்திடம் சில மணி விடுமுறை எடுத்துக் கொண்டு - மிகவும் சிறப்பானதாக இருந்தது.

ஜப்பானிய மக்கள் எதனையும் நேர்த்தியுடன் செய்வதுஉழைப்பதுமென்மையாகப் பேசி அடக்கத்துடன் வாழ்வது என்பதைத் தாண்டி வாழ்க்கையை ஒரு கலையாகவே ஆக்கி தாங் களும் வாழ்ந்து பிறருக்கும் வழிகாட்டுகிறார்கள்!

"யாம்பெறும் இன்பத்தை இவ்வையகமும் பெறட்டும்என்ற முறையில் மற்ற மக்களுக்கும் உழைப்பினாலும் அறிவுத் திறத்தினாலும் உயர்ந்து நிற்கிறார்கள்!

"இச்சிகோ - இச்சியே" என்ற நூலினை எழுதியுள்ள நூலாசிரியர்  ஹெக்டர் கார்சியா  ஸ்பெயினில் பிறந்தவர்இப்போது ஜப்பானில் குடியேறியுள்ளார்.

மற்றொருவர் பிரான்செஸ்க் மிராயியஸ் பன்னாட்டளவில் பல விருதுகளைப் பெற்றவர்.

இந்நூலைப் பற்றியும், இச்சிகோ - இச்சியே பற்றியும் அறிக்கைகள்நூலாசிரியர்கள் எழுதி யுள்ள முன்னுரையை (சரளமான நடையில் தமிழாக்கம் சிறப்புடன் உள்ளதைஅப்படியே தருகிறோம்.

நுழைவு வாயிலுக்குள் செல்லுமுன் இது ஒரு நல்ல அறிமுகம் என்பதால்.

(நாளையும் செல்வோம்)

இலக்கியச் சந்தைக்குப் போகலாமா? (2)

முன்னுரை

ஒரு தேநீர் விடுதியில் ஒரு சந்திப்பு

அது ஒரு மாலைப் பொழுதுஇப்படியொரு புத்தகம் பிறக்கவிருந்தது அப்போது எங்களுக்குத் தெரியாதுஜப்பானிலுள்ள கியோட்டோ நகரின் மய்யத்திலுள்ள ஜியோன் என்ற இடத்தில் நாங்கள் இருந்தோம்ஒரு புயல் அப்பகுதியிலிருந்த குறுகிய தெருக்களைப் பந்தாடிக் கொண்டிருந்ததுஜப்பானின் பாரம்பரிய இசை மற்றும் நடனக் கலைஞர்களான கெய்ஷாக்கள் இன்றளவும் உலவுகின்ற அபூர்வமான ஒரு சில இடங்களில் கியோட்டோவும் ஒன்றுஅப்போது நாங்கள் சாஷிட்சு என்றழைப்படும் ஜப்பானியப் பாரம் பரியத் தேநீர் விடுதி ஒன்றில் அமர்ந்திருந்தோம்புயல்மழை காரணமாக அவ்விடுதி காலியாக இருந்தது.

தாழ்வாக இருந்த ஒரு பெஞ்சில் நாங்கள் அமர்ந்திருந்தோம்அதன் அருகேயிருந்த சன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோதுஅக் குறுகிய தெருக்களின் வழியாகக் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்த நீரில்ஜப்பானியச் செர்ரி மரப் பூக்களான சாகூரா மலர்கள் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம்.

அது வசந்தகாலம்அதையடுத்துக் கோடை வரும்போதுஜப்பானியர்களைக் கொள்ளை கொண்டுள்ள அந்தச் செர்ரி மரங்களில் வெள்ளைப் பூக்கள் எதுவும் இருக்காது.

கிமோனோ உடையணிந்திருந்த ஒரு மூதாட்டிஎங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்அந்த விடுதியின் மெனுவிலிருந்த தேநீர் வகைகளிலேயே சிறந்த தேநீரான ஜியோ குரோ தேநீரை நாங்கள் பருக விரும்பியதாக அவரிடம் கூறினோம்ஜியோகுரோ தேநீர் தெற்கு ஜப்பானிலுள்ள உரஷினோ என்ற இடத்தில் விளைகின்ற ஒன்றுஉலகிலேயே மிகச் சிறந்த தேயிலை பயிரிடப்படுகின்ற இடம் அது என்று கருதப்படுகிறது.

தேநீர் வருவதற்காகக் காத்திருந்த வேளையில் நாங்கள் ஜப்பானின் முன்னாள் தலைநகரமான கியோட்டோவைப் பற்றிய எங்களுடைய அபிப் பிராயங்களைப் பகிர்ந்து கொண்டோம்அந்நக ரத்தைச் சுற்றியிருந்த குன்றுகளில் இரண்டாயிரம் கோவில்கள் இருந்தன என்பதைக் கேள்விப் பட்டபோது நாங்கள் மிகவும் வியப்படைந்தோம்.

பின் நாங்கள் எதுவும் பேசாமல்கூழாங்கற்கள் பதிக்கப்பட்டிருந்த சாலையில் மோதிக் கொண்டி ருந்த மழையின் சத்தத்தைச் செவிமடுத்துக் கொண்டிருந்தோம்.

தேநீர்க் கோப்பைகள் அடுக்கப்பட்டிருந்த ஒரு தாம்பாளத்துடன் அந்த மூதாட்டி திரும்பி வந்தபோதுஅக்கோப்பைகளிலிருந்து வெளி வந்த நறுமணம் எங்களை எங்களுடைய இனிய கிறக்கத்திலிருந்து விழித்தெழ வைத்ததுநாங்கள் எங்களுடைய கோப்பைகளைக் கையிலெடுத்துபிரகாசமான பச்சை வண்ணத்திலிருந்த அந்தத் தேநீரை ரசித்துப் பருகத் தொடங்கினோம்அது ஒரே சமயத்தில் இனிப்பாகவும் கசப்பாகவும் இருந்தது.

துல்லியமாக அக்கணத்தில் தெருவில் ஒரு கையில் ஒரு குடையைப் பிடித்தவாறு ஓர் இளம் பெண் ஒரு மிதிவண்டியில் அந்தத் தேநீர் விடுதியைக் கடந்து சென்றாள்வெட்கத்துடன் எங்களை நோக்கி ஒரு புன்முறுவலை உதிர்த்து விட்டு அவள் அந்தக் குறுகிய தெருவில் வேகமாக மறைந்துவிட்டாள்.

அப்போது நாங்கள் நிமிர்ந்து பார்த்தபோது எங்களுக்கு அருகேயிருந்த ஒரு பழுப்புத் தூணில் மாட்டப்பட்டிருந்த ஒரு பலகையைக் கண்டோம்அதில் ஜப்பானிய மொழியில் இவ் வாறு செதுக்கப்பட்டிருந்தது:

அதன் ஒலிபெயர்ப்புஇச்சிகோ இச்சியே.

அதன் பொருளை அறிய நாங்கள் முயன்று கொண்டிருந் தோம்அக்கணத்தில் சுழற்றி யடித்த ஈரக்காற்றுவாசலருகே கூரையில் தாழ்வாகத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு மணியை இனிமையாக ஒலிக்கச் செய்தது.

இச்சிகோ இச்சியேயின் பொருளை இப்படி விவரிக்கலாம்: "கச்சிதமாக இக்கணத்தில் நாம் அனுபவித்துக் கொண்டிருப்பது மீண்டும் ஒருபோதும் நிகழப் போவதில்லை . அதனால் நாம் ஒவ்வொரு கணத்தையும் ஓர் அழகிய பொக்கிஷமாக மதிக்க வேண்டும்.”

கியோட்டோ நகரில் அன்று மாலையில் நாங்கள் அனுபவித்தவற்றை அந்தத் தகவல் துல்லியமாக விவரிக்கிறது.

மீண்டும் ஒருபோதும் கிடைக்கப் பெறாத அதைப் போன்ற தனித்துவமான அனுபவங்கள் குறித்து நாங்கள் பேசத் தொடங்கினோம்கடந்த காலம் அல்லது எதிர்காலம் குறித்து அதிகக் கவலை கொண்டிருந்ததாலோ அல்லது நிகழ்கால கவனச்சிதறல்களாலோ அத்தகைய அனுபவங் களை நாங்கள் கவனிக்காமல் போயிருக்கலாம்.

அப்போது அந்த மழையில் தன் முதுகில் ஒரு பையுடன் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு மாணவன் தன்னுடைய அலைபேசியில் எதையோ நோண்டியபடி சென்று கொண்டிருந் ததை நாங்கள் பார்த்தோம்அது நாங்கள் சற்று முன் விவரித்திருந்த நிகழ்கால கவனச்சிதறலுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.

அந்த வசந்தகால மாலைப்பொழுதின்போது எங்களுக்குத் திடீரென்று கிடைத்த உத்வேகத்தால் நாங்கள் புரிந்து கொண்டிருந்த ஒரு விஷயம் அதற்குப் பிறகு வந்த பல மாதங்களுக்கு எங்க ளுடைய சிந்தனைக்கு விருந்தாக அமைந்தது.

முழுமையான கவனச்சிதறலும் உடனடித் திருப்திக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்ற கலாச் சாரமும் கோலோச்சுகின்ற இந்த யுகத்தில்நாம் பிறர் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்பதில்லைசுற்றுச்சூழலுடன் ஒரு மேலோட்டமான உறவே நமக்கு இருக்கிறதுஆனால் ஒருமித்த கவனக் குவிப்பைக் கொண்டிருப்பதற்கும்பிறருடன் ஒத்திசைவான உறவைப் பேணுவதற்கும்வாழ்க் கையைக் கொண்டாடுவதற்கும் ஓர் எளிய வழி இருக்கிறது.

அதுதான் 'இச்சிகோ இச்சியே'.

நீங்கள் எதிர்கொள்கின்ற ஒவ்வொரு கணத் தையும் உங்கள் வாழ்க்கையின் மிகச் சிறப்பான கணமாக மாற்றுவது எப்படி என்பதை அடுத்து வருகின்ற பக்கங்களில் நாங்கள் உங்களுக்கு விளக்கவிருக்கிறோம்.

ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்

(நாளையும் செல்வோம்)